மணத்தக்காளி கீரையில் கடைசல் தயார் செய்ய தேவையான பொருட்கள் வருமாறு:-மணத்தக்காளி கீரை- 2 கோப்பை அளவு,
பச்சை மிளகாய்-2,
பூண்டு, புளி- சிறிதளவு,
உப்பு- தேவையான அளவு.செய்முறை:-• புளியை கரைசலாக எடுத்துக் கொள்ள வேண்டும்.
• தேவையான தண்ணீர் சேர்த்து கீரையை வேக வைக்க வேண்டும்.
• கீரை நன்றாக வெந்த பின்பு, புளிக் கரைசலை அதில் சேர்ப்பதுடன், புளிக் கரைசல் நன்றாக கொதிக்கும் நிலையை அடைந்ததும், அதில் உப்பை சேர்க்க வேண்டும்.
• பச்சை மிளகாயை நறுக்கியும், பூண்டை தட்டியும் போட வேண்டும்.
• பின்பு அடுப்பில் இருந்து கீரையை இறக்கி, மத்தினால் நன்றாக கடைந்து கொள்ள வேண்டும். இப்போது மணத்தக்காளி கீரை கடைசல் தயார் ஆகிவிடும்.
• மணத்தக்காளி கீரையில் மருத்துவ குணங்கள் உண்டு. இந்த கீரையை வற்றலாக சாப்பிட்டு வந்தால் வாய்ப்புண் குணமாகும். உடலுக்கு குளிர்ச்சியை கொடுக்கும்.சீதபேதி, வாந்தியை கட்டுப்படுத்தும் தன்மை மணத்தக்காளி கீரைக்கு உள்ளதாக சித்த மருத்துவத்தில் குறிப்பிடப்பட்டு இருக்கிறது. இந்த கீரை உணவை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால், உடல் பொலிவு பெறும்.