1450166795 814
சிற்றுண்டி வகைகள்

மட்டன் போண்டா

அசைவ பிரியர்களுக்கேற்ற மட்டன் போண்டா, இவை சுவையாகவும் வித்தியாசமானதாகவும் இருக்கும்.

தேவையான பொருட்கள்:

உளுந்துமாவு- 100 கிராம்
அரிசி மாவு – 1 மேஜைக்கரண்டி
பச்சை மிளகாய் – 4
அவித்து அரைத்த கறி – 2 கப்
எண்ணெய் – தேவைக்கேற்ப
இஞ்சி விழுது – 1 தேக்கரண்டி
கொத்தமல்லி – 1 மேஜைக்கரண்டி
உப்பு – தேவைக்கேற்ப

தயார் செய்து கொள்ள வேண்டியை:

உளுந்தை 1 மணி நேரம் ஊற வைத்து மிருதுவான மாவாக அரைத்து கொள்ளவும்.

எலும்புகள் நீக்கப்பட்ட மட்டனை வாங்கி, வேகவத்து மிக்சியில் அரைத்து கொள்ள வேண்டும்.

செய்முறை:

கெட்டியாக அரைத்த உளுந்து மாவுடன் அரிசி மாவு, அரைத்த கறி, இஞ்சி விழுது, பொடியாக நறுக்கிய பச்சைமிளகாய், கொத்துமல்லி, உப்பு எல்லாவற்றையும் ஒன்றாக கலந்து பிசையவும்.

அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெய் விட்டு மிதமாக காய்ந்ததும் பிசைந்த மட்டன் கலவையை உருண்டையாக எடுத்து எண்ணெயில் பொரித்து எடுக்கவும். கிளறி விட்டு பொன்னிறமாக பொரிக்கவும்.

மனமுள்ள, ருசியான மட்டன் போண்டாவை தேனீருடனும் உணவுடனும் ரசித்து உண்ணலாம்.1450166795 814

Related posts

உப்புமா

nathan

ஸ்வீட் கார்ன் சீஸ் ரோல்

nathan

பலாப்பழம் பர்பி

nathan

ஸ்வீட் பிரெட் டோஸ்ட்

nathan

லெமன் இடியாப்பம்

nathan

கார்ன் சீஸ் டோஸ்ட்

nathan

முட்டை பரோட்டா

nathan

சூப்பரான மக்ரோனி ரெசிபி

nathan

சாமைக் காரப் புட்டு செய்வது எப்படி

nathan