என்னென்ன தேவை?
மட்டன் எலும்பு – 150 கிராம்,
நறுக்கிய தக்காளி – 1, நறுக்கிய
வெங்காயம் – 1,
உப்பு, மஞ்சள்தூள், நறுக்கிய கொத்தமல்லித்தழை – சிறிது,
மிளகுத்தூள் – 1/2 டீஸ்பூன்.
எப்படிச் செய்வது?
மட்டன் எலும்பை அலம்பி மஞ்சள்தூள், உப்பு, வெங்காயம், தக்காளி சேர்த்து வேகவைக்கவும். வெந்ததும் வடிகட்டி மிளகுத்தூள், கொத்தமல்லித்தழையை தூவி சூடாக பரிமாறவும்.
குறிப்பு: இதில் மிளகாய்தூள் – 2 டீஸ்பூன், தேங்காய்ப்பால் – 1/2 கப் சேர்த்து கொதிக்க வைத்து சோம்பு, கறிவேப்பிலை தாளித்தும், சாதத்தில் புதினா துவையலுடன் சேர்த்து சாப்பிடலாம். வாய் கசப்பு நீங்கும்.