26.4 C
Chennai
Sunday, Dec 22, 2024
pai
அசைவ வகைகள்

பைனாப்பிள் ரைஸ்

தேவையான பொருட்கள்:
பைனாப்பிள் – 1 (சிறியது)
பாசுமதி அரிசி – கால் கப்
நெய் – ரெண்டு ஸ்பூன்
இஞ்சி – சிறிய துண்டு
சிவப்பு மிளகாய் – ஒன்று
உப்பு – தேவையான அளவு

செய்முறை :
* இஞ்சியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
* சிவப்பு மிளகாயை ஒன்றும் பாதியாக நசுக்கி வைக்கவும்.
* இதுக்குக் கொஞ்சம் புளிப்பும் இனிப்புமான செம்பழம் தான் சுவையாக இருக்கும். பழுத்த பைனாப்பிள் பழத்தில் செய்யக்கூடாது. மீடியம் சைஸ் பழம் ஒற்றை எடுத்து தோல் சிவி, பழத்தைச் சின்னச் சின்ன துண்டுகளாக வெட்டி வைக்கவும்.
* ஒரு கப் சாதத்துக்கு கால் கப் பழம் என்ற கணக்கில் தேவைப்படும். பாசுமதி அரிசியைப் பொலபொலனு வடிச்சு ஆற வைக்கவும்.
* வாணலியில் ரெண்டு ஸ்பூன் நெய் விட்டு, காய்ந்ததும் பொடியாக நறுக்கிய இஞ்சி, சுவைக்கேற்ப உப்பு, சிவப்பு மிளகாயை போட்டு வதக்கி, பைனாப்பிள் துண்டுகளைப் போட்டு நன்றாக வதக்கணும்.
* கடைசியா சாதத்தைப் போட்டு அடுப்பை மிதமான தீயில் வைத்து 5 நிமிடம் லேசா கிளறி கொத்தமல்லி தழை தூவி இறக்கவும்.
* பிரமாதமான பைனாப்பிள் ரைஸ் ரெடிpai

Related posts

சுவையான கேரளா சிக்கன் ப்ரை

nathan

சத்தான கேரட் – முட்டை பொரியல்

nathan

முப்பதே நிமிடங்களில் மொறுமொறு சிக்கன் பக்கோடா!

nathan

கொத்தமல்லி சிக்கன் வறுவல்

nathan

கிராமத்து கோழி குழம்பு

nathan

சில்லி இறால் -கொஞ்சம் வித்தியாசமாக செய்து பாருங்கள்.

nathan

சூப்பரான சிக்கன் பட்டர் மசாலா

nathan

பெண்களே தெரிஞ்சிக்கங்க…குக்கரில் சிக்கன் பிரியாணி குழையாமல் செய்வது எப்படி

nathan

ஆந்திரா ஸ்டைல் இறால் ப்ரை ரெடி!!!

sangika