தம்பதிகள், ஓவுலேசன் காலத்தில் உடலுறவில் ஈடுபட்டால் விரைவில் கருத்தரிக்கலாம். பெண்ணின் கருவளமிக்க நாட்களை கண்டறிவது எப்படி என்று பார்க்கலாம்.
பெண்ணின் கருவளம் மிக்க நாட்களை கண்டறிவது எப்படி?
வேகமாக கருத்தரிக்க நினைக்கும் தம்பதிகள், ஓவுலேசன் காலத்தில் உடலுறவில் ஈடுபட்டால் விரைவில் கருத்தரிக்கலாம். இங்கு ஒரு பெண்ணின் கருவளமிக்க நாட்களை கண்டறிவது எப்படி என்று கொடுக்கப்பட்டுள்ளது.
நன்கு முதிர்ந்த கருமுட்டை அண்டகத்தில் இருந்து கருப்பையினுள் வெளித்தள்ளும் நிகழ்வு தான் அண்டவிடுப்பு அல்லது ஓவுலேசன் என்று அழைக்கப்படுகிறது. ஒரு பெண் கருத்தரிப்பதற்கு ஓவுலேசன் மிகவும் முக்கியமானது. ஓவுலேசன் காலத்தில் உடலுறுவில் ஈடுபடும் போது, பெண்ணின் உடலினுள் நுழையும் விந்தணு கருமுட்டையுடன் இணைந்து கருப்பையினுள் கருவாக உருவாகும்
ஆகவே வேகமாக கருத்தரிக்க நினைக்கும் தம்பதிகள், ஓவுலேசன் காலத்தில் உடலுறவில் ஈடுபட்டால் விரைவில் கருத்தரிக்கலாம். இருப்பினும் ஒரு பெண்ணின் ஓவுலேசன் காலத்தை எப்படி கண்டறிவது என நீங்கள் கேட்கலாம். அதைத் தெரிந்து கொள்ளவும், ஓவுலேசன் காலத்தின் போது வெளிப்படும் சில அறிகுறிகளையும் தொடர்ந்து படித்து தெரிந்து கொள்ளுங்கள்.
ஓவுலேசன் காலமானது முதல் மாதவிடாய் சுழற்சி ஆரம்பித்த 13 அல்லது 14 நாட்களில் ஆரம்பமாகும். சில பெண்களுக்கு இது வேறுபடும். இங்கு குறிப்பிட்ட நாட்களில் இருந்து சிலருக்கு முன்பும், இன்னும் சிலருக்கு தாமதமாகவும் கூட ஆரம்பமாகலாம். இருந்தாலும் குறிப்பிட்ட அறிகுறிகளைக் கொண்டு, பெண்ணின் ஓவுலேசன் காலத்தை அறியலாம்.
சில நாட்களாக உங்களது பாலுணர்ச்சி அதிகமாக இருந்தால், அது ஓவுலேசன் காலத்தைக் குறிக்கும். இக்காலத்தில் உடலுறவு கொண்டால், வேகமாக கருத்தரிக்கலாம்.
ஓவுலேசன் காலத்தில் பிசுபிசுப்பான வெள்ளை நிறத் திரவம் யோனியில் இருந்து வெளியேறும். இதுவும் ஒரு பெண்ணின் ஓவுலேசன் காலத்தை சுட்டிக் காட்டும்.
நிறைய பெண்களுக்கு மாதவிடாய் சுழற்சிக்குப் பின் மார்பகங்கள் புண்ணாக இருக்கும். இது குறைந்த முக்கியத்துவமுடைய அடையாளம் தான். இருந்தாலும், மாதவிடாய் சுழற்சிக்கு பின் இந்த அறிகுறி தென்பட்டால், அது ஓவுலேசன் காலத்தைக் குறிக்கும்.
ஒரு பெண்ணிற்கு ஓவுலேசன் காலத்தின் போது, தன் துணையின் மீது ஈர்ப்பு அதிகரிக்கும். இதற்கு ஆணின் உடலில் உள்ள செக்ஸ் ஹார்மோன் பெண்ணின் வாசனை உணர்வை அதிகரித்து ஈர்ப்பது தான்.
ஓவுலேசன் காலமாக இருந்தால், யோனியின் வாய் திறந்தும், மென்மையாகவும் இருக்கும். மேலும் இக்காலத்தில் உடலுறவில் ஈடுபடும் போது, குறைவான வலியை உணரக்கூடும். அதுமட்டுமின்றி, ஓவுலேசன் காலமாக இருந்தால், யோனிப்பகுதி வறட்சியுடனேயே இருக்காது.
சில பெண்களுக்கு அடிவயிற்று லேசான வலி ஏற்படும். அதுவும் இந்த வலி சில நிமிடங்கள் அல்லது மணிநேரங்கள் வரை நீடித்திருக்கும். அதோடு, குமட்டல் அல்லது வெள்ளைப்படுதலுடன் வலியையும் அனுபவித்தால், அதுவும் ஓவுலேசன் காலத்தைக் குறிக்கும்.
ஓவுலேசன் காலத்தில் பெரும்பாலான பெண்களுக்கு யோனியில் இருந்து, இரத்தம் கலந்த நிறத்தில் வெள்ளைப்படிதல் ஏற்படும். எனவே இம்மாதிரியான அறிகுறி தென்பட்டால், ஓவுலேசன் காலம் ஆரம்பமாகிவிட்டது என்று அர்த்தம்.