26.4 C
Chennai
Sunday, Dec 22, 2024
2 1551443970
மருத்துவ குறிப்பு

பெண்களோட மார்புல அரிப்பும் அழற்சியும் ஏற்பட்டால் என்ன பொருள்?

தாய்ப்பால் கொடுக்கும் தாய்மார்கள் பொதுவாக தாய்ப்பால் கொடுப்பதில் சிரமப்படுகிறார்கள். இதனால் மார்பில் கடுமையான வலி ஏற்படுகிறது. உங்களுக்கு காய்ச்சல் இருக்கலாம். இந்த முலையழற்சி பிரச்சனை பிறந்த மூன்றாவது மாதத்தில் அல்லது தாய்ப்பால் கொடுக்கும் போது ஏற்படலாம்.

சில சந்தர்ப்பங்களில், இது மார்பகத்தின் ஒரு பக்கத்தை மட்டுமே பாதிக்கும் மற்றும் வீக்கத்தை ஏற்படுத்தும். இந்த முலையழற்சி மார்பகத்தின் குழாய்களைத் தடுக்கலாம், தொற்று மற்றும் முலையழற்சியை ஏற்படுத்தும்.

அறிகுறிகள்
மார்பக வலி, வீக்கம், அழற்சி, சிவந்து காணப்படுதல்,கட்டி மாதிரி இருத்தல், சூடாக காணப்படுதல் போன்றவை ஏற்படும். சில சமயங்களில் தாய்மார்களுக்கு காய்ச்சல் கூட ஏற்படும். இதனால் குழந்தையை கவனிக்க முடியாமல் தாய்மார்கள் சிரமப்படுவார்கள்.

 

தாய்ப்பால் கொடுங்கள்

இப்படி பால் கட்டிக் கொண்டு அவஸ்தை பட்டால் கூட குழந்தைக்கு தாய்ப்பால் கொடுங்கள். கொடுக்க கொடுக்க கட்டியுள்ள தாய்ப்பால் கரைந்து விடும். இதனால் குழந்தைக்கு எந்த பாதிப்பும் இருக்காது. உங்களுக்கு மிகுந்த வலி இருந்தால் அடிக்கடி கையை வைத்து லேசாக பிதுக்கி பாலை வெளியேற்றி விடுங்கள். இது மறுபடியும் பால் கட்டுவதை தவிர்க்கும். அதே நேரத்தில் இந்த மார்பு அழற்சியை தடுக்க சில வீட்டு முறைகளும் இங்கே கொடுக்கப்பட்டுள்ளது. வாங்க பார்க்கலாம்.

மசாஜ்

மார்பு அழற்சிக்கு மசாஜ் செய்வது ஒரு சிறந்த முறையாகும். இந்த மசாஜ் கட்டியுள்ள பால் குழாயை திறந்து வீக்கத்தை குறைத்து விடும். வெளியே இருந்து மார்பக காம்புகளை நோக்கி சுழற்சி முறையில் மசாஜ் செய்ய வேண்டும். பாதிக்கப்பட்ட இடத்தில் கொஞ்சம் அழுத்தமாக மசாஜ் செய்யுங்கள்.

செய்யும் முறை

ஆப்ரிகாட் எண்ணெய் மற்றும் கோதுமை விதை எண்ணெய் இரண்டையும் ஒன்றாக கலந்து கொள்ளுங்கள். இந்த ஆயிலை மார்பகத்தில் தடவி மேல் நோக்கி மசாஜ் செய்யவும். இதை ஒரு நாளைக்கு சில தடவை என்று செய்து வாருங்கள்.

சில துளிகள் கற்பூர எண்ணெய், 2 டேபிள் ஸ்பூன் ஆலிவ் ஆயில் இரண்டையும் சேர்த்து மசாஜ் செய்யவும். ஒரு நாளைக்கு சில முறை என செய்து வாருங்கள். இந்த மசாஜ்க்கு பிறகு பால் கொடுக்கும் போது சுடுநீரில் மார்பக காம்பை கழுவி விட்டு குழந்தைக்கு தாய்ப்பால் கொடுங்கள்.

சூடான மற்றும் ஐஸ் ஒத்தடம்

முலையழற்சியை போக்க சுடு தண்ணீர் மற்றும் ஐஸ் ஒத்தடம் பயன்படுகிறது. ஐஸ் ஒத்தடம் வீக்கத்தை குறைக்கவும், வலியை போக்கவும், அடைப்பை நீக்கவும் பயன்படுகிறது. சூடு நீர் ஒத்தடம் இரத்த ஓட்டத்தை அதிகரித்து பால் கட்டியிருப்பதிலிருந்து சரிசெய்கிறது. சுடு தண்ணீரை ஒரு பாட்டிலில் ஊற்றி ஒரு டவல் கொண்டு மார்பகத்தில் கட்டிக் கொள்ளுங்கள்.

ஐஸ் ஒத்தடம் கொடுக்க சில ஐஸ் கட்டிகளை துண்டில் கட்டிக் கொண்டு ஒத்தடம் கொடுங்கள். 15 நிமிடங்கள் இந்த ஒத்தடத்தை கொடுக்க வேண்டும். 5 நிமிடங்கள் ஐஸ் ஒத்தடம் கொடுங்கள். இதை 2-3 தடவை செய்யுங்கள். தேவைப்படும் போது இதை செய்து கொள்ளுங்கள்.

 

முட்டைகோஸ் இலை ஒத்தடம்

முட்டைகோஸ் இலைகள் தொற்று ஏற்பட்டுள்ள மார்பகத்திற்கு மிகவும் சிறந்தது. இதிலுள்ள சல்பர் அழற்சியையும் வீக்கத்தையும் குறைக்கிறது. எனவே பாலூட்டும் தாய்மார்களுக்கு இது சிறந்தது. முட்டைகோஸ் இலைகளை பிரிட்ஜில் வைத்து 30 நிமிடங்கள் குளிர வைக்கவும். தொற்று ஏற்பட்ட இடத்தில் குளிர்ந்த முட்டைகோஸ் இலைகளை வைத்து ஒத்தடம் கொடுங்கள்.

அந்த இலையில் குளிர் போய் விட்டால் மறுபடியும் குளிர்ந்த இலையை மாற்றி கொள்ளுங்கள். இதை ஒரு நாளைக்கு சில முறை என செய்து வந்தால் நல்ல மாற்றத்தை காணலாம்.

பூண்டு

பூண்டில் இயற்கையாகவே ஆன்டி பயாடிக் உள்ளது. இந்த ஆன்டி பயாடிக் முலையழற்சிக்கு காரணமான பாக்டீரியாவை அழிக்கிறது. மேலும் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து மார்பு அழற்சியை விரைவாக குணப்படுத்த உதவுகிறது.

வெறும் வயிற்றில் 2 பூண்டு பற்களை சாப்பிடுங்கள். ஒரு நாளைக்கு இன்னும் சில பூண்டுகளை சாப்பிட்டு வாருங்கள். உங்களுக்கு பூண்டு பிடிக்கவில்லை என்றால் வெறும் தண்ணீரில் ஆரஞ்சு ஜூஸ் கலந்து குடியுங்கள். இதை சில வாரங்களுக்கு பின்பற்றவும். மருத்துவரின் அனுமதி பெற்று பூண்டு மாத்திரைகளை கூட நீங்கள் எடுத்து கொள்ளலாம்.

எச்சினஷியா

எச்சினஷியா என்ற மூலிகை நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது. இதில் ப்ளோனாய்டுகள், ஆன்டி பயோடிக், ஆன்டி மைக்ரோ பியல், அழற்சி எதிர்ப்பு பொருள் போன்றவை உள்ளன. எச்சினஷியா வேர் மருந்தை பாதிக்கப்பட்ட பகுதிகளில் தடவி வரலாம்.

ஒரு நாளைக்கு 4-5 முறை செய்து வரலாம். இந்த மருந்தை 3-4 துளிகள் ஒரு கிளாஸ் தண்ணீரில் கலந்து ஒரு நாளைக்கு 3-4 முறை குடிக்கவும். ஒரு வாரத்திற்கு மேல் இந்த முறையை செய்ய வேண்டாம்.

ஆப்பிள் சீடர் வினிகர்

ஆப்பிள் சீடர் வினிகர் முலையழற்சியை போக்க உதவுகிறது. இதில் ஆன்டி பாக்டீரியல் மற்றும் அழற்சி எதிர்ப்பு பொருள் உள்ளன. எனவே இது தொற்றை பெரிதாகாமல் தடுக்கிறது. மேலும் ஆற்றலை அதிகரிக்க பயன்படுகிறது.

1 பங்கு ஆப்பிள் சீடர் வினிகரை 2 பங்கு வெதுவெதுப்பான நீரில் கலந்து கொள்ளவும். ஒரு காட்டன் பஞ்சில் இதை நனைத்து பாதிக்கப்பட்ட இடத்தில் தடவுங்கள். 15 நிமிடங்கள் அப்படியே விட்டு விட்டு வெதுவெதுப்பான நீரில் கழுவவும். 2-3 முறை இதை திரும்பவும் செய்யவும்.

1 டேபிள் ஸ்பூன் ஆப்பிள் சீடர் வினிகர், கொஞ்சம் தேன் சேர்த்து ஒரு கப் தண்ணீரில் கலந்து கொள்ளுங்கள். இதை ஒரு நாளைக்கு 3 தடவை என 1-2 வாரங்கள் சமைத்து வாருங்கள்.

வெந்தயம்

ஆயுர்வேத முறைப்படி வெந்தயம் பால் உற்பத்தி செய்யும் சுரப்பியை தூண்டுகிறது. அதே நேரத்தில் இது மார்பு அழற்சியை போக்கவும் உதவுகிறது. இதிலுள்ள ப்ளோனாய்டுகள் அழற்சி மற்றும் தொற்றை போக்குகிறது.

4 டேபிள் ஸ்பூன் வெந்தயத்தை இரவிலே ஊற வைத்து விடுங்கள். ஊற வைத்த வெந்தயத்தை மிக்ஸியில் போட்டு அரைத்து கொள்ளுங்கள். ஒரு சுத்தமான துணியில் இந்த வெந்தய பேஸ்ட்டை வைத்து மைக்ரோவேவ் ஓவனில் வைத்து சூடுபடுத்துங்கள். பாதிக்கப்பட்ட இடத்தில் இதை வைத்து ஒத்தடம் கொடுக்க வேண்டும். ஒரு நாளைக்கு இரண்டு முறை என 1-2 வாரங்கள் இதை செய்து வாருங்கள். ஒரு நாளைக்கு 2-3 முறை என வெந்தய டீ குடித்து வரலாம்.

கற்றாழை ஜெல்

கற்றாழை ஜெல்லில் இயற்கையாகவே காயங்களை குணப்படுத்தும் ஆற்றல் உள்ளது. மார்பக அழற்சியால் ஏற்படும் வலியை குறைக்கிறது. பாதிக்கப்பட்ட இடத்தில் ஏற்பட்ட சரும திசுக்கள் பாதிப்பை சரி செய்கிறது. கற்றாழை ஜெல்லை தனியாக பிரித்து கொள்ளுங்கள். இந்த ஜெல்லை பாதிக்கப்பட்ட இடத்தில் தடவுங்கள். நன்றாக காய விடுங்கள்

வெதுவெதுப்பான நீரில் கழுவி துண்டை கொண்டு நல்லா துடைத்து விடுங்கள். இது ஒரு நாளைக்கு என சில வாரங்கள் செய்ய வேண்டும். கற்றாழை ஜெல்லை நன்றாக கழுவி விட்டு குழந்தைக்கு தாய்ப்பால் கொடுங்கள்.

கேண்டுலா

மார்பக தொற்றில் ஏற்படும் வீக்கம் மற்றும் வலியை போக்க கேண்டுலா பயன்படுகிறது. இதிலுள்ள ஆன்டி பாக்டீரியல் பொருட்கள் தொற்றை போக்க உதவுகிறது.

கேண்டுலா பூக்கள் மற்றும் கம்பிரே இலைகளை சம அளவு எடுத்து நன்றாக பேஸ்ட்டாக்கி கொள்ளுங்கள். மார்பகத்தில் தடவி 15 நிமிடங்கள் அப்படியே வைத்து இருக்கவும். 15 நிமிடங்கள் கழித்து வெதுவெதுப்பான நீரில் கழுவவும். ஒரு நாளைக்கு 3-4 தடவை என செய்து வாருங்கள். பாதிக்கப்பட்ட இடத்தில் கேண்டுலா களிம்பை கூட சில நாட்கள் தடவி வரலாம். குழந்தைக்கு தாய்ப்பால் கொடுப்பதற்கு முன் மார்பக காம்புகளை நன்றாக கழுவி விட்டு கொடுங்கள்.

விட்டமின் சி உணவுகள்

விட்டமின் சி மார்பு அழற்சியை எதிர்த்து போரிடுகிறது. பாதிக்கப்பட்ட சரும செல்களை சரி செய்கிறது. மேலு‌ம் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது. ஆரஞ்சு, எலுமிச்சை, கிவி பழங்கள், கொய்யா பழங்கள், பப்பாளி பழங்கள், ஸ்ட்ரா பெர்ரி, கீரைகள், கடுகு கீரைகள், பிரக்கோலி, பார்சிலி போன்ற உணவுகளை சேர்த்துக் கொள்ளுங்கள். மருத்துவரின் அனுமதி பெற்று விட்டமின் சி மாத்திரைகளை கூட எடுத்துக் கொள்ளுங்கள்.

 

நிறைய தண்ணீர் குடியுங்கள்.

இது பால் சுரப்பதை சரியாக வைக்கும். மார்பக காம்புகளை குழந்தை கடிக்காமல் பார்த்து கொள்ளுங்கள். இதனால் மன அழுத்தம் ஏற்படாமல் பார்த்து கொள்ளுங்கள்.

நர்ஸிங் பேடுகளை வைத்து எப்பொழுதும் மார்பக காம்புகளை துடைத்து தூய்மையாக வைத்துக் கொள்ளுங்கள்.

Related posts

பெண்களே தெரிஞ்சிக்கங்க…கர்ப்ப காலத்தில் இரத்தக்கசிவு ஏற்படுவதற்கான காரணங்கள்!!!

nathan

தெரிஞ்சிக்கங்க…முதல் மாதவிடாய் குறித்து பெண்கள் ஒவ்வொருவரும் தெரிந்து கொள்ள வேண்டிய சில முக்கிய விஷயங்கள்!

nathan

உடலில் கொலஸ்ட்ரால் அதிகரிக்கும் போது கீழ்கண்ட அறிகுறிகள் தோன்றும், கவனமாக இருங்கள்!

nathan

அவதி நிறைந்த அவசர பயணம்

nathan

உங்களுக்கு தெரியுமா மன உளைச்சலை குறைக்க 5 வழிகள்

nathan

உங்களுக்கு தெரியுமா எலுமிச்சை தோல் கொதிக்க வைத்த தண்ணீரின் நன்மைகள்…!!

nathan

உங்களுக்கு தெரியுமா ‘கக்கா’ வெச்சே புற்றுநோய் இருக்கா இல்லையான்னு தெரிஞ்சுக்கலாம் .

nathan

வெந்நீரே… வெந்நீரே…

nathan

உங்களுக்கு தெரியுமா மிகக்கொடிய நோயான புற்று நோயை வெறும் 24 மணி நேரத்தில் குணமாக்கும் பழம்!

nathan