25.1 C
Chennai
Tuesday, Dec 17, 2024
ld4147
மருத்துவ குறிப்பு

பெண்களை தாக்கும் கல்லீரல் நோய்கள்

எச்சரிக்கை

மது அருந்துபவர்களுக்கு கல்லீரல் பாதிக்கும். மஞ்சள் காமாலை, ஹெபடைடிஸ் வரும் என்பதை நாம் அறிவோம்.சுத்தமில்லாத தண்ணீர் கூட கல்லீரலை தாக்கும் என்கிறார்கள் இன்றைய நவீன மருத்துவர்கள். கல்லீரல் நோய்கள் பற்றியும் அதிலும் பெண்களை மட்டுமே குறி வைத்து தாக்கும் பிரச்னைகள் குறித்தும் விவரிக்கிறார் கல்லீரல் சிறப்பு சிகிச்சை நிபுணர் ஜாய் வர்கீஸ்…

ஃபேட்டி லிவர் (Fatty liver) பிரச்னை பெண்

களுக்கு வரக்கூடிய முக்கிய கல்லீரல் நோயாகும். மது குடித்தால்தான் கல்லீரல் நோய் வரும் என்று இல்லை. கொழுப்பு மற்றும் கார்போஹைட்ரேட் உணவுகளை அதிகம் சாப்பிடுவது, ஆரோக்கியமற்ற பழக்கவழக்கங்கள், உடற்பயிற்சியில்லாத வாழ்க்கைமுறை இவையெல்லாம் கூட பெண்களுக்கு கல்லீரல் நோயை கொண்டுவரும். சுத்தமில்லாத தண்ணீரைக் குடித்தால் கூட கல்லீரல் நோய்கள் வரும். எனவே, இந்த விஷயத்தில் கவனம் தேவை.

உயரத்தை விட அதிக பருமன் கொண்ட பெண்களுக்கும் ஃபேட்டி லிவர் பிரச்னை அதிகம் வருகிறது. இதை எளிதாக கண்டு பிடிக்கவும் முடியாது. 10 வருடங்கள் இந்தப் பிரச்னை இருந்தாலும் மெதுவாகத்தான் அறிகுறிகளைக் காட்டும். ஃபேட்டி லிவர் பிரச்னை வந்தாலே லிவர் சிரோசிஸ் என்னும் கல்லீரல் சீர்கேடு பிரச்னை வருமோ என சிலர் பயப்படுவது உண்டு. ஏனென்றால் சிரோசிஸ் வந்துவிட்டால் எந்த வகை சிகிச்சை அளித்தாலும் கல்லீரலை செயல்பட வைக்க முடியாது.

கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை தான் செய்ய வேண்டியிருக்கும். ஃபேட்டி லிவர் பிரச்னை வந்தவர்களில் 10 முதல் 20 சதவிகிதம் பேருக்கு மட்டுமே லிவர் சிரோசிஸ் ஆக மாற வாய்ப்புண்டு. கர்ப்பிணிப் பெண்கள் சிலருக்கு முதல் குழந்தை பிரசவிக்கும் போது மட்டும் கல்லீரலை மஞ்சள் காமாலை தாக்கும். ப்ரி எக்ளாம்சியா’ என்ற பிரச்னை கர்ப்பிணிகளுக்கு ஏற்பட்டால் அது உயிருக்கே கூட ஆபத்தாக முடியும்.

கால் வீக்கம், கை கால் வலி, உயர் ரத்த அழுத்தம், பார்வை மங்குதல், தலைவலி என எல்லா பக்க விளைவுகளையும் கர்ப்ப காலத்தில் ஏற்படுத்தும். கல்லீரலையும் பெருமளவு பாதிக்கும். Termination of Pregnancy என்னும் முறையில் குழந்தையை வெளியில் எடுத்தால்தான் தாயை காப்பாற்ற முடியும்.குழந்தை கருவில் இருக்கும் போது ஹெபடைடிஸ் பி அல்லது சி தாக்கினால் அதற்குரிய சிகிச்சையை கொடுப்பதன் மூலம் குழந்தைக்கு அந்த நோய் பரவாமல் தடுத்து விட முடியும்.

கர்ப்பம் தரித்தவுடன் தாய் கல்லீரல் சார்ந்த பரிசோதனைகளை செய்து கொள்வது அவசியம். முதல் இரண்டு மாதங்களில் தகுந்த சிகிச்சை கொடுத்து எளிதாக சரி செய்ய முடியும். வட இந்தியாவில் ஹெபடைடிஸ் ஈ என்னும் ஒரு வகை வைரஸ் பெண்களை தாக்கு கிறது. சுத்தமில்லாத, கிருமிகள் நிறைந்த தண்ணீரை குடிப்பதுதான் இதற்குக் காரணம். சத்தான உணவுகள், உடற்பயிற்சி நிறைந்த வாழ்க்கைமுறை, சுத்தமான குடிநீர், முறையான பரிசோதனை என வாழ்க்கையை அமைத்துக் கொண்டாலே கல்லீரலை நோய்கள் தாக்காது.”

ld4147

Related posts

மலம் கழிக்காமல் அடக்கியதால் இறந்த 16 வயது ஐரோப்பிய பெண் – மருத்துவர்கள் எச்சரிக்கை!!!

nathan

தெரிஞ்சிக்கங்க…அடிக்கடி பாதங்கள் மரத்துப் போகுதா? அப்ப இந்த நோயா இருக்க வாய்ப்பிருக்கு…

nathan

சப்பாத்திக் கள்ளியின் மருத்துவ குணங்கள்

nathan

சூப்பர் டிப்ஸ்! தினமும் கொஞ்சம் துளசிய இந்த மாதிரி சாப்பிடுங்க… இந்த நோய் உடனே தீரும்…

nathan

உங்களுக்கு தெரியுமா இரத்தத்தில் உள்ள கிருமிகளை நீக்கி சுத்தப்படுத்தும் அற்புதமான பழம்!!

nathan

எலும்புகளை பாதுகாக்க தினசரி இந்த உணவுகளை எடுத்துக்கொள்ளுங்கள்…

nathan

அவசியம் படிக்க..இம்யூனிட்டி ஹெல்த்தி வழிகாட்டி

nathan

கார்சினோஜென்கள் எப்படி புற்றுநோயை ஏற்படுத்துகிறது என்பது தெரியுமா?

nathan

கொழுப்பை எரித்து உங்களை பேரழகாக மாற்றும் பழம்… இனி சாப்பிட்டாம விட்டுறாதீங்க..!

nathan