பலர் ஞாயிற்றுக்கிழமை விடுமுறை என்பதால் அன்று எண்ணெய் தேய்த்து குளிப்பதை வழக்கமாக்கியுள்ளனர்.
உங்களுடைய பிறந்த நட்சத்திரம், திகதி, கிழமைகளில், குளிக்க கூடாது என்பது ஐதீகம். பொதுவாக, ஆண்கள் புதன் மற்றும் சனி கிழமைகளில் குளிப்பது உசிதம். ஏனென்றால் சனி பகவான் அசதி, சோம்பேறித்தனம் நிறைந்த தமோ குணத்தின் அதிபதி.
எனவே எண்ணெய் குளியல் முடிந்த பின் மனிதனின் சுறுசுறுப்பு குறைந்து அசதியும், உறக்கமும் வருகிறமாதிரி ஒரு உணர்வு ஏற்படும்.
பெண்கள் செவ்வாயக்கிழமை மற்றும் வெள்ளிக்கிழமைகளில் எண்ணெய் தேய்த்து குளித்துக் கொள்ளலாம்.
அதேநேரம் செவ்வாய்க்கிழமையும், வெள்ளிக்கிழமையும் பெண்களுக்கு உகந்த கிரகங்களின் நாட்களாகும். எனவே இந்தக் கிழமைகளில் பெண்கள் எண்ணை தேய்த்துக் குளித்தல் நன்மை பெருமளவில் நமக்கு கிடைக்கும்.
இதேபோல் காலை வேளையில் 8 மணிக்கு முன் மற்றும் மாலை 5 மணிக்கு பின் எண்ணெய் தேய்த்து குளிக்க கூடாது. ஏனெனில் உடலில் சூடு அதிகரிப்பதால் பல பிரச்னைகள் ஏற்படும்.
ஏன் எண்ணெய் தேய்த்து குளிக்கணும்?
நமது உடலில் ஏற்படும் கொப்புளங்கள், வேர்க்குரு போன்ற பல பிரச்சனைகளிலிருந்து பாதுகாத்துக்கொள்ள எண்ணெய் தேய்த்து குளிக்கலாம்.
உடலில் எண்ணெய்யை நன்றாக அழுத்தி தேய்ப்பதன் மூலம் தோலிலுள்ள மேல் அடுக்குகளுக்குள் சென்று பல நல்ல விளைவுகளை ஏற்படுத்தும்.
தோலில் ஏற்பட்டுள்ள அழுக்குகளையும், நுட்பமான அடைப்புகளையும் எண்ணெய்க் குளியல் நீக்கிவிடும்.
மேலும் எண்ணெய் தேய்த்துக் குளிப்பதால் தோலில் பளபளப்புக் கூடும். வறண்ட தோல் உள்ளவர்கள் எண்ணெய் தேய்த்துக் குளிப்பது மிகவும் அவசியமாக உள்ளது.