625.500.560.350.160.300.053.800 4
மருத்துவ குறிப்பு

பெண்களே தெரிஞ்சிக்கங்க…ஒரே மாதத்தில் இரண்டு முறை மாதவிடாய் வந்தால்.. இந்த பிரச்சினையாகவும் இருக்குமாம்…!

பெண்களுக்கு மாதவிடாய் காலங்களில் வயிற்று வலிகள் பெரும் பிரச்னையாக அமைகிறது. இது அவர்களை மன ரீதியாகவும், உடல் ரீதியாகவும் சோர்வடைய வைக்கிறது.

பெண்களுக்கு மாதவிடாய் நாட்கள் ஒவ்வொரு மாதமும் முன், பின் என மாறிவருவது இயல்பு. அதுவே 10 நாட்களுக்கு மேல் தள்ளிப்போதல், ஒரே மாதத்தில் இரண்டு முறை வருதல் போன்ற பிரச்னைகளை உடனே கண்டறிந்து உரிய மருத்துவம் எடுத்துக்கொள்ளுதல் அவசியம். அப்படி ஒரே மாதத்தில் இரண்டு முறை மாதவிடாய் வர என்ன காரணம் என்று பார்க்கலாம்.

முதலில் ஒரே மாதத்தில் இரண்டாவது முறையும் வருவது மாதவிடாய் தானா அல்லது வெஜினாவிலிருந்து இரத்தக் கசிவா எனக் கண்டறிவது அவசியம்.

அதற்கு மாதவிடாய் போன்று உதிரப்போக்கு வந்துகொண்டிருந்தால் அது மாதவிடாய் தான் அவ்வாறு அல்லாமல் சிறிது உதிரம் மட்டுமே வந்து நாப்கின் முழுமையாக பயன்படுத்தவில்லை எனில் அது இரத்தம் கசிவதாக இருக்கலாம்.

இந்த, வெஜினாவில் இரத்தக் கசிவு என்பது உடலுறவு கொள்ளுதல் காரணமாகவோ, கருக்கலைந்தாலோ அல்லது பிரசவ காலத்திலோதான் பெரும்பாலும் நிகழும். இதுதான் காரணம் என்றால் உடனே மருத்துவரை அணுகி ஆலோசனை பெறுதல் அவசியம்.

உங்களுக்கு மாதவிடாயாக இருக்கும் பட்சத்தில் அது ஒவ்வொரு மாதமும் தொடர்கதையானால் சில பிரச்னைகள் காரணமாக இருக்கலாம்.

அதாவது உங்களுக்கு தைராய்டு அதிகம் சுரத்தாலோ அல்லது குறைவாக சுரத்தாலோ இந்தப் பிரச்னை வரலாம்.

ஒருவேளை நீங்கள் மாதவிடாய் நிற்கும் தருவாயில் இருக்கிறீர்கள் என்றாலும் இந்தப் பிரச்சனை வரலாம்.

நீங்கள் அதிகம் கருக்கலைப்பு மாத்திரைகளை உட்கொள்கிறீர்கள் என்றாலும் இரண்டு முறை மாதவிடாய் வரலாம். மன அழுத்தம் காரணங்களால் சரியான உணவின்மை, தூக்கமின்மை காரணங்களாலும் மாதவிடாய் இரண்டு முறை வரலாம்.

திடீரென அதிக உடல் குறைத்தல் அல்லது அதிகரித்தல் என இருந்தாலும் இந்த பிரச்னை இருக்கலாம்.

மேலே குறிப்பிட்ட விஷயங்கள் உங்கள் வாழ்க்கை முறையோடு ஒத்துப்போவதாகக் கருதினால் இதை சாதாரணமாக கடந்து செல்லாமல் மருத்துவரை அணுகி உரிய சிகிச்சைப் பெறுவது அவசியம்.

Related posts

காயத்தால் ஏற்படும் தழும்புகள் மறைய இயற்கை மருத்துவம் -தெரிந்துகொள்வோமா?

nathan

உயர் ரத்த அழுத்த நோய் தீர ஆயுர்வேத மருத்துவம்

nathan

குழந்தை ஆணா பெண்ணா..?!

nathan

”வளர்த்தியில்லாம போய், அதனாலயே பதினாறு வயசாகியும் பொண்ணு வயசுக்கு வராம இருந்தா, வெந்தய லேகியம் பண்ண…

nathan

பெண்களே தெரிஞ்சிக்கங்க… அம்மாவாகப் போகிறீர்கள் என்பதைத் தெரியப்படுத்தும் ஆரம்ப அறிகுறிகள்!

nathan

உங்களுக்கு தெரியுமா பெற்றோர்களின் சண்டை குழந்தையின் உடல்நலத்தை பாதிக்கும் தெரியுமா?

nathan

இன்சுலின் சுரக்க உதவுகிறது ஆப்பிள்!

nathan

பித்தத்தை சமன்படுத்தும் நெல்லிக்காய்

nathan

சுகமாய் ஆண்கள்… சுமைதாங்கி பெண்கள்…

nathan