27.5 C
Chennai
Sunday, Dec 15, 2024
natural homemade hair dye
தலைமுடி சிகிச்சை

பெண்களே தெரிஞ்சிக்கங்க… வீட்டிலேயே இயற்கை முறையில் ஹேர் டை தயாரிப்பது எப்படி?

வீட்டிலே ஹோம்மேட் ஹெர்பல் ஹேர் டை செய்து கொண்டு, அதைப் பயன்படுத்தினால் எந்த வித பாதிப்பும் ஏற்படாமல் தவிர்க்கப்படும். இதைப் பற்றி விளக்கமாக பார்க்கலாம்.
வீட்டிலேயே இயற்கை முறையில் ஹேர் டை தயாரிப்பது எப்படி?
வீட்டிலே ஹோம்மேட் ஹெர்பல் ஹேர் டை செய்து கொண்டு, அதைப் பயன்படுத்தினால் எந்த வித பாதிப்பும் ஏற்படாமல் தவிர்க்கப்படும். இதைப் பற்றி விளக்கமாக பார்க்கலாம்.

ஹோம்மேட் ஹேர் டை தயாரிப்பது எப்படி?

* தேவையான பொருட்கள்

மருதாணி பவுடர் – 1 கப்
அவுரி இலை பவுடர் – 1 கப்

செய்முறை

முன்னாள் இரவே மருதாணி பவுடரை தண்ணீரில் கரைத்து பேஸ்டாக கலக்கி வைக்கவும். மறுநாள், எண்ணெய் இல்லாத முடியில் மருதாணி பேஸ்டை பூசி கொள்ளவும். ஒரு மணி நேரம் கழித்து வெறும் தண்ணீரில் அலசி விடுங்கள்.

முடியை நன்கு உலர்த்திய பிறகு, அவுரி இலை பொடியை தண்ணீர் ஊற்றி பேஸ்ட் போல செய்து, அதை உடனே தலை முடியில் பூசி விடுங்கள். மீண்டும் ஒரு மணி நேரம் ஊறவிட்டு பின்னர், முடியை வெறும் தண்ணீரில் அலசி விடுங்கள்.

இந்த முறையில் முடிக்கோ மண்டைக்கோ எந்த பாதிப்பும் கிடையாது. 100% இயற்கையானது. ஒரு மாதம் வரை முடி கருப்பாக இருக்கும். பிறகு மீண்டும் வெள்ளையானால் மீண்டும் இதேபோல செய்து தலை முடியில் பூசிக்கொள்ளுங்கள்.

* தேவையான பொருட்கள்

உலர்ந்த நெல்லி – 100 கி

செய்முறை

உலர்ந்த நெல்லியில் கொட்டைகள் இருந்தால் நீக்கி கொள்ளவும். சிறிது சிறிதாக அறிந்து அதை இரும்பு வாணலியில் போட்டு வறுக்கவும். வறுக்க, வறுக்க நெல்லி பெரிதாகும்; கருப்பாகும். பின்னர் ஒரு டம்ளர் தண்ணீர் விட்டு 10 நிமிடங்கள் மிதமான தீயில் வேக விடவும். நெல்லி வெந்ததும் அடுப்பை நிறுத்தி விடவும்.

கருப்பான தண்ணீரில், இரும்பு வாணலியில் நெல்லி இரவு முழுவதும் ஊறட்டும். மறுநாள் காலை நெல்லியை மட்டும் எடுத்து மிக்ஸியில் போட்டு மையாக அரைக்கவும். இதில் ஊறவைத்த நெல்லி தண்ணீரே கொஞ்சம் கொஞ்சமாக சேர்த்துக் கொள்ளவும்.

சுத்தமான, இயற்கையான நெல்லி ஹேர் டை தயார். எண்ணெய் இல்லாத தலைமுடியில் தடவி ஒரு மணி நேரம் ஊற வைத்த பின், வெறும் தண்ணீரில் அலசி விடுங்கள். அவரவர் உடல்நலத்துக்கு ஏற்ப கருமை நிறம், தலை முடியில் நீடிக்கும். அவரவர் பயன்படுத்தும் ஷாம்பு மற்றும் எத்தனை முறை தலைக்கு குளிக்கிறார்கள் என்பது பொறுத்து கருமை நீடிக்கும்.

* தேவையான பொருட்கள்

மருதாணி பவுடர் – 2 டேபிள் ஸ்பூன்
அவுரி இலை பவுடர் – 3 டேபிள் ஸ்பூன்
நெல்லி பவுடர் – 1 டேபிள் ஸ்பூன்
டீ தூள் – 1 டேபிள் ஸ்பூன்
தயிர் – 2 டேபிள் ஸ்பூன்

செய்முறை

ஒரு பாத்திரத்தில் ஒரு டம்ளர் தண்ணீர் ஊற்றி, டீ தூள் போட்டு நன்றாக கொதிக்க விடவும். பின் வடிகட்டி டிகாஷனை வைத்திருக்கவும். ஒரு பவுலில் மேற்சொன்ன 3 பவுடர்களையும் போட்டு நன்றாகக் கலக்கவும். இதில் தயிரை ஊற்றி கலக்கவும். பின் சிறிது சிறிதாக டீ டிகாஷனையும் கலந்து கலக்கவும். பேஸ்டாக வரும் வரை கலக்கவும்.

பின்னர் ஒரு வெள்ளை துணி போட்டு மூடி ஒரு மணி நேரம் ஊற வைத்து விடுங்கள். அவ்வளவுதான். நேச்சுரல் ஹேர் டை தயார். எண்ணெய் இல்லாத முடியில் பூசி, 1 மணி நேரம் கழித்து மிதமான ஷாம்புவால் அலசிவிடுங்கள். ஒரு மாதம் வரை இந்த நிறம் நீடிக்கும். natural homemade hair dye

Related posts

தலைக்கு குளிக்கும் போது நம்மை அறியாமல் நாம் செய்யும் தவறுகள்…!

nathan

நரை முடி கருப்பாக எளிய டிப்ஸ் -தெரிந்துகொள்ளுங்கள் !

nathan

பெண்களே தெரிஞ்சிக்கங்க…ஆயில் மசாஜ் செய்தால் கூந்தல் வளருமா?

nathan

ஆயுர்வேதம் சொல்லும் கூந்தல் பராமரிப்பு மற்றும் வளர்ச்சி

nathan

வாரம் ஒருமுறை வாழைப்பழத்தை பீர் சேர்த்து பிசைந்து தலைக்கு போட்டால் ஏற்படும் அதிசயம்!

nathan

எவ்வித பக்கவிளைவும் இல்லாத ஷாம்பூ கண்டிஷனர் மாஸ்க்

nathan

முயன்று பாருங்கள் வறண்ட கூந்தலுக்கு என்ன செய்யலாம்?

nathan

இந்த டிப்ஸ் ஃபாலோ பண்ணா முடி உதிர்வை நிறுத்தி வழுக்கை விழாமல் தடுக்கும் …!

nathan

முடி வளர்ச்சியை அதிகரிக்கும் எண்ணெய் தயாரிப்பு!

nathan