சாப்பிட்ட பின் மீதமாகும் உணவுகளை குளிர்சாதன பெட்டியில் வைத்து சாப்பிடும் பழக்கம் நம்மில் பலருக்கு உள்ளது. அது பெரும் ஆரோக்கியக்கேடு. அதிலும் சில குறிப்பிட்ட வகை உணவுகளை பிரிட்ஜில் வைத்து சாப்பிடுவதால், ஆபத்தான நோய்க்கு நீங்கள் பலியாகலாம்.
உருளைக்கிழங்கு என்பது அனைவராலும் விரும்பப்படும் ஒரு காய்கறி. உருளைக்கிழங்கு, சாதம், சப்பாத்தி உட்பட பல உணவுகளுடன் சேர்த்து சாப்பிட மிகவும் சிறந்தது கருதப்படுகிறது. உருளைக்கிழங்கு இந்திய உணவுகளில் அதிக அளவில் பயன்படுத்தப்படுகிறது.
சமைத்த உருளைக்கிழகு கறி அல்லது, வேக வைத்த உருளைக்கிழங்கை அடுத்த நாள் பயன்படுத்த ப்ரிட்ஜில் வைத்து உபயோகிப்பது பெரும் ஆபத்தானது என்பதை நீங்கள் அறிவீர்களா? இது உங்கள் ஆரோக்கியத்திற்கு பெரும் கேடு. ஃப்ரிட்ஜில் வைக்கப்படும் உருளைக்கிழங்கு காய்கறிகளை சாப்பிடுவதால் ஏற்படும் தீமைகளை தெரிந்து கொள்வோம்.
புற்றுநோய்: உருளைக்கிழங்கு காய்கறியை குளிர்சாதன பெட்டியில் வைப்பதால், அதில் உள்ள மாவுச்சத்து சர்க்கரையாக மாறுகிறது என சில நிபுணர்களின் கூறுகின்றனர். இதன் காரணமாக புற்றுநோய் உண்டாகும் வாய்ப்பு அதிகரிப்பதாகவும் கூறுகின்றனர்
ஆரோக்கியத்திற்கு கேடு: பிரிட்ஜில் உருளைக்கிழங்கில் உள்ள சர்க்கரை, அமினோ அமிலங்கள் மற்றும் அஸ்பாரஜின் ஆகியவை ஒரு இரசாயனத்தை உருவாக்குகின்றன. பிளாஸ்டிக் மற்றும் காகிதம் தயாரிப்பதற்காக இது செய்யப்படுகிறது. இதை உட்கொள்வது ஆரோக்கியத்திற்கு பெரும் கேடு விளைவிக்கும்.
நீரிழிவு நோயாளிகளுக்கு தீங்கு விளைவிக்கும் – உருளைக்கிழங்கை குளிர்சாதன பெட்டியில் வைத்திருப்பது அதன் மாவுச்சத்தை சர்க்கரையாக மாற்றுகிறது, இதன் காரணமாக இது நீரிழிவு நோயாளிகளுக்கு மிகவும் ஆபத்தானது.
அதிக வெப்பநிலையில் உருளைக்கிழங்கை சமைக்க வேண்டாம் – அதிக வெப்பநிலையில், உருளைக்கிழங்கை சமைப்பதைத் தவிர்க்க வேண்டும். மேலும், உருளைக்கிழங்கை சமைப்பதற்கு முன், அவற்றின் தோலை நீக்கி 15 முதல் 30 நிமிடங்கள் தண்ணீரில் ஊறவைக்கலாம். இதைச் செய்வதன் மூலம், சமைக்கும் போது உருளைக்கிழங்கில் அக்ரிலாமைடு உருவாகும் வாய்ப்பு குறைகிறது.