25.4 C
Chennai
Sunday, Dec 22, 2024
2 amla 1630
முகப் பராமரிப்பு

பெண்களே தெரிஞ்சிக்கங்க…முகப்பரு மற்றும் சரும கருமையைப் போக்க நெல்லிக்காயை இப்படி யூஸ் பண்ணுங்க…

நெல்லிக்காய் உடல் நலம் தொடர்பான அனைத்து பிரச்சனைகளுக்கும் தீர்வளிக்கக்கூடிய சத்துக்களைக் கொண்டது. குறிப்பாக இதில் வைட்டமின் சி மற்றும் அழற்சி எதிர்ப்பு பண்புகள் அதிகம் உள்ளது. எனவே தினமும் ஒரு நெல்லிக்காயை சாப்பிட்டால், பல ஆரோக்கிய நன்மைகளைப் பெறலாம். குறிப்பாக நெல்லிக்காய் சாப்பிட்டால் இரத்தம் சுத்தமாகும், கொலாஜென் உற்பத்தி அதிகரிக்கும் மற்றும் சருமம் இளமையாகவும், புத்துணர்ச்சியுடனும் காணப்படும்.

Easy Ways To Use Amla in Skincare Routine
ஆனால் நெல்லிக்காயை சாப்பிட மட்டுமின்றி, அழகை மேம்படுத்தவும், அழகு பிரச்சனைகளுக்கு தீர்வு காணவும் பயன்படுத்தலாம் என்பது தெரியுமா? நெல்லிக்காயில் ஏராளமான அழகு நன்மைகள் உள்ளன. அதற்கு நெல்லிக்காயை ஃபேஸ் மாஸ்க்காகவும், ஸ்கரப்பாகவும் பயன்படுத்தலாம். இதனால் முகப்பரு, பிம்பிள், வெயிலால் ஏற்பட்ட சரும கருமை மற்றும் பலல்வேறு சரும பிரச்சனைகளில் இருந்து விடுபடலாம். இப்போது சரும பிரச்சனைகளைப் போக்க நெல்லிக்காயை எப்படியெல்லாம் பயன்படுத்தலாம் என்பதைக் காண்போம்.

நெல்லிக்காய் மற்றும் பப்பாளி மாஸ்க்

நெல்லிக்காயுடன் பப்பாளியை சேர்த்து மாஸ்க் போடும் போது, அந்த ஃபேஸ் மாஸ்க் சருமத் துளைகளின் ஆழத்தில் உள்ள அழுக்குகளை வெளியேற்றி, சரும கருமையைப் போக்கும். இந்த மாஸ்க் தயாரிப்பதற்கு, ஒரு பௌலில் 2 டேபிள் ஸ்பூன் நெல்லிக்காய் சாறு மற்றும் 2 டேபிள் ஸ்பூன் பப்பாளி கூழ் எடுத்துக் கொள்ள வேண்டும். பின் அதை முகத்தில் தடவி 20 நிமிடம் ஊற வைக்க வேண்டும். அதன் பின் குளிர்ந்த நீரால் முகத்தைக் கழுவ வேண்டும். இப்படி ஒருநாள் விட்டு ஒரு நாள் என 2 வாரத்திற்கு தொடர்ந்து மேற்கொண்டால், சருமத்தில் ஒரு நல்ல மாற்றத்தைக் காணலாம்.

நெல்லிக்காய், தயிர் மற்றும் தேன் மாஸ்க்

நெல்லிக்காயில் சருமத்தில் உள்ள கருமையைக் குறைக்கும் பண்புகள் உள்ளன. எனவே வெயிலில் அதிகம் சுற்றுவோருக்கு இந்த மாஸ்க் ஏற்றது. இந்த மாஸ்க் தயாரிப்பதற்கு, ஒரு பௌலில் 2 டேபிள் ஸ்பூன் நெல்லிக்காய் பொடி, ஒரு டேபிள் ஸ்பூன் தயிர் மற்றும் ஒரு டீஸ்பூன் தேன் ஆகியவற்றை எடுத்து நன்கு கலந்து கொள்ள வேண்டும். பின் அதை முகத்தில் தடவி 20 நிமிடம் ஊற வைத்து, குளிர்ந்த நீரால் முகத்தைக் கழுவ வேண்டும்.

நெல்லிக்காய், மஞ்சள் மற்றும் எலுமிச்சை மாஸ்க்

உங்களுக்கு முகப்பரு அதிகம் இருந்து, அடிக்கடி முகப்பருவில் இருந்து சீழ் வருமானால், இந்த மாஸ்க் மாயங்களை ஏற்படுத்தும். இந்த மாஸ்க் தயாரிப்பதற்கு, ஒரு பௌலில் 3 டேபிள் ஸ்பூன் நெல்லிக்காய் பொடி, ஒரு டீஸ்பூன் மஞ்சள் தூள் மற்றும் 2 டேபிள் ஸ்பூன் எலுமிச்சை சாறு ஆகியவற்றை ஒன்றாக எடுத்து கலந்து, முகத்தில் தடவி 20 நிமிடம் ஊற வைத்து, பின் வெதுவெதுப்பான நீரால் முகத்தைக் கழுவ வேண்டும்.

நெல்லிக்காய், சர்க்கரை மற்றும் ரோஸ் வாட்டர் ஸ்க்ரப்

உங்கள் முகத்தில் அழுக்கு நிறைய இருப்பது போல் உள்ளதா? அப்படியானால் இந்த நெல்லிக்காய் ஸ்க்ரப் நல்ல மாற்றத்தைத் தரும். குறிப்பாக இந்த ஸ்க்ரப் பிம்பிள் வருவதைத் தடுக்க உதவும். இந்த ஸ்கரப் தயாரிப்பதற்கு சிறிது நெல்லிக்காய் பொடியுடன், சிறிது சர்க்கரை மற்றும் ரோஸ் வாட்டர் சேர்த்து பேஸ்ட் செய்து, முகத்தில் தடவி மென்மையாக சிறிது நேரம் தேய்க்க வேண்டும். பின் முகத்தை குளிர்ந்த நீரால் கழுவ வேண்டும்.

நெல்லிக்காய், சர்க்கரை மற்றும் எலுமிச்சை சாறு ஸ்க்ரப்

சருமத்தில் உள்ள இறந்த செல்களை நீக்க இந்த நெல்லிக்காய் ஸ்க்ரப் உதவும். அதற்கு ஒரு டேபிள் ஸ்பூன் நெல்லிக்காய் பொடியுடன், அரை டேபிள் ஸ்பூன் எலுமிச்சை சாறு மற்றும் சர்க்கரை சேர்த்து நன்கு கலந்து, முகத்தில் தடவி மென்மையாக சிறிது நேரம் தேய்க்க வேண்டும். பின் குளிர்ந்த நீரால் முகத்தைக் கழுவ வேண்டும். இதனால் சருமத்தில் உள்ள இறந்த செல்கள் நீக்கப்பட்டு, முகம் பளிச்சென்று இருக்கும்.

Related posts

நாள் முழுவதும் மேக்கப் கலையாமல் இருக்க சின்ன சின்ன உத்தி!…

nathan

உங்களுக்கு தெரியுமா ஒயினை கொண்டு இப்படியெல்லாம் செய்யலாமா?

nathan

ஆண்களுக்கு ஏற்படும் கரும்புள்ளி மற்றும் கருமையை போக்க சூப்பர் டிப்ஸ்………

nathan

ஈடில்லா அழகை தரும் இந்த குறிப்பை பற்றி தெரிந்து கொள்ளுங்கள் :

nathan

சருமத்தின் அழுக்கு, எண்ணெய் பிசுபிசுப்பை நீக்கும் பப்பாளி சூப்பர் டிப்ஸ்….

nathan

தெரிஞ்சிக்கங்க…முகம் கழுவும் போது செய்யக்கூடியவைகள் மற்றும் செய்யக்கூடாதவைகள்!

nathan

தெரிஞ்சிக்கங்க…முக அழகை அதிகரிக்க சூப்பரான ஃபேஸ் மாஸ்க்!

nathan

தக்காளி தரும் தங்க நிறம்!…

nathan

சப்போட்டா ஃபேஷியல்

nathan