உங்களால் சுறுசுறுப்பாக உணர முடியவில்லை என்றால், நீங்கள் ஏன் எப்போதும் சோர்வாக இருக்கிறீர்கள் என்பதற்கான காரணங்களை கண்டுபிடிக்க வேண்டும். நம் வாழ்வு முறையின் சில சிறிய அம்சங்களின் மீது நாம் பெரும்பாலும் கவனம் செலுத்துவதில்லை. ஆனால் அவைகள் நம்மை சுறுசுறுப்புடன் வைத்திருக்க மிக முக்கிய பங்கை புரிந்து வரும். வேலை நாட்களின் போது நீங்கள் செய்யும் அனைத்தும், நீங்கள் உண்ணும் அனைத்தும் உங்கள் உடல் அமைப்பின் மீது சில தாக்கங்களை உண்டாக்கும். சில நேரங்களில் சுறுசுறுப்புடன் உணர்வீர்கள். சில நேரங்களில் சோர்வாக உணர்வீர்கள்.
நீங்கள் எப்போதுமே சோர்வாக உள்ளீர்கள் என்றால் அதற்கு பின்னால் சில காரணங்கள் இருக்கும். இந்த காரணங்களுக்கு உங்களால் ஏதாவது செய்ய முடிந்தால், உங்கள் வாழ்க்கை மீண்டும் இயல்பு நிலையை அடையலாம். உங்கள் உடலில் போதிய அளவிலான ஆற்றல் திறன் இருந்தால், உங்கள் அன்றாட நடவடிக்கைகள் மற்றும் வேலைகளை மிக சுலபமாக செய்யலாம். உங்களை சோர்வடையச் செய்யும் சில காரணிகளைப் பற்றி இப்போது பார்க்கலாமா? அவைகளைப் பற்றி தெரிந்து கொண்டால், சுறுசுறுப்புடன் இருப்பதற்கான ஆயத்தங்களை மேற்கொள்ளலாம்.
இரும்புச்சத்தை உட்கொள்ளுதல்
உங்கள் உடலில் போதிய இரும்புச்சத்து இல்லையென்றால் நீங்கள் சோர்வடைவீர்கள். முட்டை, சீஸ், கிட்னி பீன்ஸ், நட்ஸ் மற்றும் வேர்க்கடலை வெண்ணெய்யை உட்கொண்டால் நீங்கள் இயல்பாக இருக்கலாம்.
ஜங்க் உணவுகள்
ஜங்க் உணவு அல்லது சர்க்கரை சேர்த்துள்ள உணவுகளாலும் கூட நாள் முழுவதும் நீங்கள் சோர்வடையலாம். ஆகவே அவைகளை குறைக்க முடியுமா என பாருங்கள்.
நடு ராத்திரியில் குடிப்பது
உங்களுக்கு நடு ராத்திரியில் மதுபானம் குடிக்கும் பழக்கம் இருந்தால், உங்கள் உடல் அமைப்பிற்கு அது நல்லதல்ல. காலையில் எழுந்திருக்கும் போது சோர்வாக உணர்வீர்கள். உங்கள் தூக்க அமைமுறை தொந்தரவுக்கு உள்ளாகும்.
நீங்கள் பூரணத்துவம் நிறைந்தவரா?
நீங்கள் எப்போதும் சோர்வாக இருப்பதற்கு இதுவும் கூட ஒரு காரணமாக இருக்கும். நீங்கள் பூரணத்துவம் நிறைந்தவராக இருந்தால், எப்போதும் வேலையின் மீது கவனமாக இருப்பதால், நீங்கள் சோர்வடைவீர்கள். நீங்கள் அப்படிப்பட்டவர் என்றால் இந்த குணத்தை கொஞ்சம் குறைத்துக் கொள்ளலாம் அல்லவா?
காலை உணவை தவிர்த்தல்
எப்போதும் சோர்வாக இருப்பதற்கு இதுவும் ஒரு காரணமாக இருக்கும். இரவு முழுவதும் சாப்பிடாமல் இருப்பதால் உங்கள் உடலுக்கு காலை உணவு அவசியமான ஒன்றாகும். காலை உணவை தவிர்ப்பவர்கள் சுறுசுறுப்புடன் இருக்க மாட்டார்கள்.
வார இறுதி தூக்கம்
நீங்கள் எப்போதும் சோர்வாக இருப்பதற்கு இதுவும் கூட ஒரு ஆச்சரியமான காரணமாகும். உங்கள் வார இறுதி நாட்களை ஓய்வு எடுப்பதற்கு பயன்படுத்தாமல் பேச்சுலர் பார்ட்டிகள் என சுற்றிக் கொண்டிருந்தால், இந்த பழக்கத்தை மாற்ற வேண்டிய நேரம் இதுவாகும். ஆம், திங்கட்கிழமை வந்து விட்டால், அலுவலகத்திற்கு செல்லும் போது சோர்வாக காணப்படுவீர்கள்.
உடற்பயிற்சிகளை தவிர்த்தல்
உடற்பயிற்சி செய்வதால் சோர்வடைவோம் என நீங்கள் நினைக்கலாம். ஆனால் அதற்கு நேர் எதிர் தான் பல நேரங்களில் நடக்கும். வேலையே செய்யாமல் இருப்பவர்களுக்கு உடற்பயிற்சி அவசியமான ஒன்றாகும். உடற்பயிற்சிகளை தவறாமல் செய்து வருபவர்களுக்கு சோர்வு ஏற்படாது.
உங்கள் மேஜை குப்பையாக உள்ளதா?
குப்பையாக இருக்கும் உங்கள் அலுவலக மேஜையை சுத்தப்படுத்துவது நல்லது. அப்படி செய்யும் போது உங்கள் வேலை பளு தாங்கிக் கொள்ளும் அளவாக தெரியும். இதனால் சோர்வடையாமலும் இருப்பீர்கள்.