கொழுப்பை எரிக்க உங்களுக்கு தோதுபடுகிற மாதிரி 10 நிமிட உடற்பயிற்சிகள் பற்றி தெரிந்து கொள்ள வேண்டுமா? நாம் அனைவருமே செய்யலாம்! கொழுப்பை எரிக்க, 10 நிமிட பயிற்சிகள் எப்படி உடல் எடையை குறைக்க உதவுகிறது என்பதை பற்றி தான் பேச போகிறோம்.
அதற்கு தேவையானது எல்லாம் சிறிது நேரமும் ஆற்றல் திறனும் மட்டுமே. அதனுடன் சேர்ந்து வண்டி வண்டியாக மன உறுதியும் தேவையானது. அப்படி இருக்கும் பட்சத்தில் நீங்கள் தேர்ந்தெடுக்கும் முறையை பொறுத்து 100-250 கலோரிகள் வரை குறைக்கலாம். உங்களுக்கு நேரம் கிடைக்கும் போதெல்லாம் நாங்கள் கூற போகும் 6 உத்திகளை பின்பற்றினால். உங்கள் உடல் நல்ல வடிவத்தை பெறும்.
10 நிமிடங்களுக்கு ஜூம்பா
தென் அமெரிக்க தாளத்திற்கு ஏற்றார் போல் ஆடப்படும் ஏரோபிக் உடற்பயிற்சி நடனமான ஜூம்பா என்பது குஷியுடன் உடம்பை கட்டுக்கோப்பாக வைத்திருக்கும் வழியாகும். இசையை உணர்ந்து, அதற்கேற்ப உடம்பை அசைந்து கொடுத்து, அதனால் ஊக்கமடைந்து உடல் எடையை குறைக்கலாம். ஜூம்பாவுடன் இணைந்து கொள்ள, நல்ல ஷூக்கள் மட்டுமே தேவை. உடல் எடை, பாலினம், கட்டுக்கோப்பின் அளவு மற்றும் இதர ஃபிசிகல் காரணிகளின் அடிப்படையில், ஒரு மணி நேரத்திற்கு 400-600 கலோரிகளை வரை எரிக்கலாம்.
10 நிமிடத்திற்கு சுத்தப்படுத்துதல்
வீட்டை சுத்தப்படுத்தி பொருட்களை ஒதுக்கினால், உடலை சற்று கட்டுக்கோப்புடன் வைத்துக் கொள்ளவும், அழுத்தத்தை நீக்கவும் உதவும். இதனுடன் சேர்த்து போனஸாக உடல் எடையும் குறையும். உங்கள் வீட்டு அலமாரியை 2 மணிநேரம் சுத்தப்படுத்தினால் போதும், அது 20 நிமிடங்களுக்கு ட்ரெட்மில்லில் பயிற்சி செய்வதற்கு சமமாகும். இதனால் 200-300 கலோரிகள் வரை எரிக்கப்படும். இருப்பினும் 10 நிமிடங்கள் துணி துவைப்பது போன்ற வேலைகளால் மட்டும் கொழுப்பு குறையும் என எண்ணி விடாதீர்கள். நீங்கள் ஈடுபடும் வேலையை ரசித்து செய்தால், 20-20% வரை உடல் எடை குறையும்.
10 நிமிடங்களுக்கு தீவிர இடைவெளி பயிற்சி
10 நிமிடங்களுக்கு தீவிர இடைவெளி பயிற்சியில் ஈடுபட்டால், 150-250 கலோரிகளை வரை குறைக்கலாம். உடல் பருமன் பிரச்சனையால் அவதிப்படுபவர்கள் இதனை முயற்சி செய்யலாம். இதய துடிப்புக்கு சவால் விடும் விசேஷமான உடற்பயிற்சி இது. வயது, சக்தி, தாங்கும் உறுதி மற்றும் உங்கள் உடலால் தாங்கப்படும் பயிற்சியின் எண்ணிக்கைகள் போன்றவற்றின் அடிப்படையில், இந்த பயிற்சியின் வகையையும், அளவையும் நீங்கள் மாற்றிக் கொள்ளலாம். இதனை அன்றாடம் பயன்படுத்தி வந்தால், உங்கள் தாங்கும் திறன் மேம்படும். ஆகவே உங்கள் தேவைகேற்ப இந்த பயிற்சியில் ஈடுபடுங்கள்.
10 நிமிடங்களுக்கு ஸ்கிப்பிங் போடுவது
இந்த பயிற்சியை 10 நிமிடங்களுக்கு செய்யுங்கள். புஷ் அப் (10 முறை), குந்துகைகள் (15), க்ரஞ்சஸ் (25), ஸ்கிப்பிங் (முடிந்த வேகத்தில் 100-200 முறை). 1-2 நிமிடம் ஓய்வு எடுத்துக் கொண்டு, இந்த மொத்த சுற்றையும், உங்கள் உடலைப் பொறுத்து, 2-3 முறைகள் தொடர்ந்து செய்யுங்கள்.
10 நிமிடங்களுக்கு சுறுசுறுப்பாக நடை கொடுத்தல்
சுறுசுறுப்பாக நடை கொடுப்பதற்கு எந்த ஒரு விசேஷ கருவியும் தேவையில்லை. அதற்கு தேவையானது எல்லாம் நல்ல ஷூக்கள் மட்டுமே. இந்த பழக்கத்தை அன்றாடம் 10-20 நிமிடங்களுக்கு செய்யலாம். முடிந்த வரை வேகமாக நடங்கள். கூடுதல் தசைகளுக்கு வேலை கொடுக்க, நடப்பதில் போட்டி கூட வைத்துக் கொள்ளலாம். அமெரிக்கன் காலேஜ் ஆஃப் ஸ்போர்ட்ஸ் மெடிசின் படி, 10 நிமிடங்களுக்கு சுறுசுறுப்பாக நடந்தால் தோராயமாக 106 கலோரிகள் வரை குறைக்கலாம். இப்படி நடக்கையில், கைகளை நன்றாக மேலேயும் கீழேயும் அசையுங்கள். அப்போது தான் வேகமாக நடக்க முடியும்.
உடலுக்கு வேலை கொடுக்கும் வீடியோ கேம்கள்
பிரிக்ஹாம் யங் பல்கலைகழகம் மற்றும் மாசசூசெட்ஸ் பல்கலைகழகத்தை சேர்ந்த விஞ்ஞானிகள் படி, வீடியோ கேம்களால் உங்கள் குழந்தைகளும், நீங்களும் உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளலாம். இங்கு நாம் கவனிக்க வேண்டியது, வீடியோ கேம் விளையாடும் போது உடலுக்கு வேலை கொடுப்பதே. உங்கள் ஆற்றல் திறனுக்கு தீனி போடும் வீடியோ கேம்களை தேர்ந்தெடுங்கள். அது உங்கள் மற்றும் உங்கள் குழந்தையின் உடல் எடைக்கு ஏற்ற வகையில் இருக்க வேண்டும். கொஞ்ச நேரம் வீடியோ கேம் விளையாடினால் போதும், அது 10 நிமிடங்கள் ட்ரெட்மில்லில் நடப்பதற்கு சமமாகும்.
இதுப்போன்று சுவாரஸ்யமான மற்றும் பயனுள்ள பல தகவல்களைப் பெற எங்கள் ஃபேஸ்புக் பக்கத்தை லைக் செய்து தொடர்பில் இருங்கள்…