கர்ப்பம் என்றாலே பெரும்பாலான பெண்கள் பயந்து கொள்ளும் விஷயங்களாக ஹார்மோன் மாற்றங்கள், வரக்கூடிய சிக்கல்கள் மற்றும் பிரசவ வேதனை ஆகியவை மட்டுமே இருப்பதில்லை. கர்ப்பம் காரணமாக எடை கூடிய பின்னர் தாங்கள் எப்படி இருப்போம், சருமத்தில் ஏற்படும் மாற்றங்கள் மற்றும் குழந்தை இருப்பதால் உப்பி இருக்கும் வயிறு போன்றவைகளுக்காகவும் அவர்கள் யோசித்துக் கொண்டிருப்பார்கள்.
கர்ப்ப காலங்களில் நேர்மறையான சுய மதிப்பீடையும் மற்றும் சுய கௌரவத்தையும் கொண்டிருக்க வேண்டியதும் அவசியமாகும். ஏனெனில், இவை தான் மகிழ்ச்சியான மற்றும் ஆரோக்கியமான கர்ப்பத்திற்கு வழி வகுக்கின்றன. இவ்வளவு கவனிக்கத்தக்க விஷயங்கள் இருந்தாலும், கர்ப்ப காலம் பெண்மையையும், தாய்மையையும் போன்றும் விறுவிறுப்பான பருவமாகவே உள்ளது.
இந்த கட்டுரையின் மூலம் கர்ப்ப காலத்திலும் கூட பெண்கள் எப்படி ஃபிட்டாகவும், கவர்ச்சியாகவும் இருக்கலாம் என்ற குறிப்புகளை கொடுத்துள்ளோம்.
உடற்பயிற்சி
கர்ப்ப காலம் முழுவதுமாக வாரம் இருமுறை உடற்பயிற்சிகள் செய்து வருவது நல்ல பலன்களை உங்களுக்குத் தரும். நடத்தல், நீச்சல், யோகா மற்றும் ஏரோபிக்ஸ் போன்றவையே தகுதியான உடற்பயிற்சிகளாகும். நீங்கள் எவ்வளவு சுறுசுறுப்பாக இருக்கிறீர்கள் என்பதைப் பொறுத்தே உடற்பயிற்சிகளைச் செய்ய முடியும். கடினமான உடற்பயிற்சிகளால் பிரசவ கால சிக்கல்களும் மற்றும் கர்ப்ப காலத்திற்கு பின்வரும் நாட்களிலும் சிக்கல்கள் வரக்கூடும். இந்த பயிற்சிகளைச் செய்யும் போது நிறைய தண்ணீர் குடிக்க வேண்டும். இதன் மூலம் நீங்கள் புத்துணர்வு பெறுவதுடன், உடலின் நீர்ம அளவும் அதிகமாக இருக்கும். இதன் மூலம் தோலும் சரியாக பராமரிக்கப்படும். எனினும், கடினமான உடற்பயிற்சிகளை செய்யத் துவங்கும் முன்னர், உங்களுடைய மருத்துவரின் ஆலோசனைகளை கேட்கத் தவற வேண்டாம்.
உடைகள்
கர்ப்ப காலத்தில் உங்களை புத்துணர்வுடனும், கவர்ச்சியாகவும் வைக்கும் உடைகளை அணிந்திருங்கள். கர்ப்பமாக இருக்கும் பெண்கள் பெரிய அளவிலான மற்றும் பழைய பேஷன்களைச் சேர்ந்த உடைகளை அணிவதை நீங்கள் கண்டிருக்கலாம். அவை அணிவதற்கு நன்றாக இருந்தாலும், கவர்ச்சியான உடைகளை நீங்கள் அணிய முற்பட்டால் ஒரு முறைக்கு இருமுறை யோசித்து நவீனமான உடைகளை வாங்கி அணியுங்கள். அவை நீங்கள் அணிய வசதியாக இருக்க வேண்டும் என்பதை மறக்க வேண்டாம்.
சரிவிகிதமான உணவு
நீங்கள் சாப்பிடும் உணவில் பழங்கள் மற்றும் காய்கறிகளை தாராளமாக சேர்த்துக் கொள்ளுங்கள். அவற்றிலிருந்து உங்களுக்குத் தேவைப்படும் வைட்டமின்கள் மற்றும் தாதுக்களைப் பெற முடியும். கொழுப்பு மற்றும் இறைச்சி வகைகளை தவிர்ப்பது நலம். காப்ஃபைன் நிறைந்த காபி குடிப்பதை நீங்கள் மறந்து விட வேண்டும். ஏனெனில், காபியில் உங்களுடைய தூக்கம் மற்றும் ஓய்வை தூண்டும் குணம் உள்ளது. மேலும், காபைன் சாப்பிடுவதால் பிறக்கும் குழந்தையின் ஆரோக்கியமும் பாதிக்கப்படும்.
தலைமுடியின் ஸ்டைல்
கர்ப்ப காலத்தில் ஏற்படும் ஹார்மோன் மாற்றங்களால் சிறப்பான, பொலிவான மற்றும் அடர்த்தியான முடி கிடைக்கும் என்பது உங்களுக்குத் தெரியுமா? எனவே, அதனை வெட்டியோ அல்லது குதிரைவால் ஜடையாக போட்டோ வீணடிக்க வேண்டாம். மாறாக, ஒரு நல்ல ஹேர் ஸ்டைலிஸ்டிடம் சென்று, எந்த ஸ்டைல் உங்களுக்கு சிறப்பானதாக இருக்கும் என்று அறிவுரை கேளுங்கள். ஏனெனில், உங்களுடைய தலைமுடி அழகாக மாறிவிடும் போது, உங்களுடைய தோற்றமும் கவர்ச்சியானதாக மாறிவிடும்.
கர்ப்ப காலத்திற்கான மேக்கப்
கர்ப்ப காலத்தில் மேக்கப் மற்றும் அழகு சாதனங்களை மறந்து விட வேண்டும் என்பது அவசியமில்லை. எனினும், கர்ப்ப காலங்களில் பயன்படுத்தும் மேக்கப் சாதனங்களில் உள்ள இரசாயனங்களை சற்றே கவனித்து பயன்படுத்தவும். அது உங்களுடைய குழந்தையை பாதிக்கலாம். இந்த ஒரு காரணத்திற்கான மேக்கப் சாதனங்களை அறவே ஒதுக்கி விடவும் வேண்டாம். குழந்தை பெறப்போகும் பெண்களுக்கு ஏற்ற பல மேக்கப் பொருட்கள் இன்று கடைகளில் கிடைக்கின்றன. அதே நேரம், மருத்துவரின் பரிந்துரையுடன் செயல்படுவதும் சிறப்பான பலனைக் கொடுக்கும்.
எண்ணம்
இவை எல்லாவற்றிற்கும் மேலாக, உங்களுடைய எண்ணம் தான் உங்களை கவர்ச்சியாக தோற்றமளிக்கச் செய்யும் என்பதை மறந்து விடாதீர்கள். நீங்கள் கவாச்சியாக இருக்கிறீர்கள் என்று நம்பினாலேயே, அவ்வாறு தோற்றமளிக்க முடியும். எதிர்மறையான எண்ணங்களை நேர்மறையான எண்ணங்களால் தோற்கடிக்க முயலுங்கள்.