23.7 C
Chennai
Wednesday, Dec 18, 2024
Kidney stones in womenCauses SECVPF
பெண்கள் மருத்துவம்

பெண்களுக்கு சிறுநீரகத்தில் உண்டாகும் கற்கள்: தென்படும் அறிகுறிகள்

சிறுநீரக கற்கள் இருந்தால், அதனை ஆரம்பத்திலேயே கண்டறிந்து, அதனைக் கரைப்பதற்கான முயற்சியில் ஈடுபட வேண்டும். இல்லாவிட்டால், அதனை அறுவை சிகிச்சை மூலம் தான் நீக்க முடியும். அதிலும் பெண்கள் தான் சிறுநீரக கற்களால் அதிகம் கஷ்டப்படுவார்கள்.

சிறுநீரக கற்கள் வருவதற்கு முறையற்ற டயட் மற்றும் அதிகப்படியான உப்பு நிறைந்த உணவுகளை உண்பது தான் காரணம். அதுமட்டுமின்றி அளவுக்கு அதிகமாக கால்சியம் நிறைந்த மாத்திரைகளை எடுத்து வந்தாலும், சிறுநீரக கற்கள் உருவாகும். இப்போது பெண்களுக்கு சிறுநீரக கற்கள் இருந்தால் தென்படும் அறிகுறிகள் என்னவென்று பார்க்கலாம்..

சிறுநீர் கழிப்பதில் பிரச்சனை இருந்தால், அதனை சாதாணமாக நினைக்காமல், உடனே அதனை பரிசோதித்து, சரிசெய்யும் முயற்சியில் ஈடுபடுங்கள். உங்களுக்கு திடீரென்று குமட்டல் வர ஆரம்பிக்கிறதா? அதிலும் அதிகப்படியான காய்ச்சல் இருந்து குமட்டல் வந்தால், உங்கள் சிறுநீரகங்களில் கற்கள் உள்ளது என்று அர்த்தம். கழிக்கும் சிறுநீர் தெளிவின்றி இருந்தால், அதுவும் சிறுநீரக கற்களுக்கான அறிகுறி. மேலும் தெளிவற்ற சிறுநீர், சிறுநீர் பாதையில் தொற்று இருப்பதையும் குறிக்கும்.

எனவே சிறுநீர் பரிசோதனையை மேற்கொண்டு, உங்கள் சந்தேகத்தை போக்கிக் கொள்ளுங்கள். அடிக்கடி தெளிவற்ற சிறுநீருடன், அடிவயிற்றில் கடுமையான வலியை சந்தித்தால், உடனே சிறுநீர் பரிசோதனையை மேற்கொண்டு, உங்கள் சந்தேகத்தைப் போக்கிக் கொள்ளுங்கள். அவசரமாக சிறுநீர் வருவது போன்ற உணர்வு ஏற்படுவதற்கு பல காரணங்கள் இருக்கலாம். இருப்பினும் இங்கு கொடுக்கப்பட்டுள்ள அறிகுறிகளுடன் இந்த உணர்வு ஏற்பட்டால், அது சிறுநீரக கற்கள் இருப்பதற்கான அறிகுறியாகும்.

வழக்கத்திற்கு மாறாக பிறப்புறுப்பைச் சுற்றி மற்றும் முகத்தில் வியர்வை அதிகமாக வெளியேறினால், அதனை சாதாரணமாக நினைக்காமல், உடனே இரத்தம் மற்றும் சிறுநீர் பரிசோதனை மேற்கொள்ளுங்கள். ஏனெனில் இதுவும் சிறுநீரக கற்கள் இருப்பதற்கான அறிகுறிகளுள் ஒன்று. சிறுநீர் கழிக்கும் போது, அத்துடன் இரத்தம் வெளியேறினால், சிறுநீரக கற்கள் சிறுநீரகங்களில் காயங்களை ஏற்படுத்தி, அதனால் இரத்தக்கசிவு ஏற்பட்டுள்ளது என்று அர்த்தம்.

பிறப்புறுப்பைச் சுற்றி அடிக்கடி கடுமையான வலி ஏற்பட்டால், அதுவும் சிறுநீரக கற்கள் இருப்பதற்கான அறிகுறிகளுள் ஒன்று. சிறுநீர் கழிக்கும் போது கற்கள் சிறுநீர் வடிகுழாய் வழியே நகர்வதால் தான் பிறப்புறுப்பைச் சுற்றி வலி ஏற்படுகிறது. சிறுநீர் கழிக்கும் போது எரிச்சல் ஏற்படுகிறதா? அதுவும் சிறுநீரக கற்கள் இருப்பதற்கான அறிகுறியே. அதிலும் அந்த எரிச்சலானது சிறுநீர் கழித்து 5-6 நிமிடங்கள் வரை இருக்கும். – இந்த அறிகுறிகள் உங்களுக்கு இருந்தால் அலட்சியம் செய்யாமல் உடனே மருத்துவரை பார்ப்பது மிகவும் நல்லது.Kidney stones in womenCauses SECVPF

Related posts

முப்பதை தாண்டாதீங்க..

nathan

குழந்தை வரம் பெற சில எளிய ஆலோசனை , கை வைத்திய முறைகள்

nathan

குண்டாக இருப்பவர்கள், ஒல்லியாகத் தோற்றமளிக்க

nathan

சரியாக சாப்பிடாத பெண்களுக்கு வரும் மூட்டு வலி

nathan

நீர்க்கட்டிகளை விரட்டினால்… வாரிசு ஓடி வரும்!

nathan

குழந்தை பெற்ற தாய்மார்கள் தாய்ப்பால் வராத போது என்ன செய்யலாம்

nathan

மன அழுத்தத்தால் எடை கூடும்!

nathan

பாலிசிஸ்டிக் ஓவரியன் சிண்ட்ரோம் (பி.சி.ஓ.எஸ்.,) (P C O S)

nathan

ஹார்மோன் கோளாறு ஆகும். பி.சி.ஓ.எஸ் கொண்ட பெண்களுக்கு கொரோனா தொற்று எளிதில் தாக்க அதிக வாய்ப்பு…

nathan