பெண்களின் அதிக உதிர்போக்கை சரி செய்திடும் -சித்த மருந்துகள்
1 . கோமூத்திரச் சிலாசத்து
இது
வெயில் காலத்தில் மலைகளின் இடுக்குகளிலிருந்து உருகி வெளியாகும் சத்து.
இதை எடுக்கும் போது மண் கலந்திருக்கும். ஆதலால் 10 பலம் கோமூத்திரச்
சிலாசத்தை வெந்நீரில் நன்றாகக் கலக்கி ஒரு வாயகன்ற பீங்கான் கோப்பையில்
இட்டு வெயிலில் வைத்து அப்போதைக்கப்போது மேல் கட்டுகின்ற ஆடையை வழித்து
ஒருங்கு சேர்த்துக் காயவைத்துப் பத்திரப்படுத்துக. இதுவே உயர்ந்த
ரகமானதாகும்.
அதிலுள்ள மண்மாவும் அடியில் நின்றுவிடும். இதைப்போலவே வெந்நீருக்குப்
பதிலாக திரிபலைக் கியாழம் அல்லது வேப்பம் பட்டைக் குடிநீர் இவற்றில்
ஒன்றைக் கரைத்து வெயிலில் வைத்து மேல் கட்டுகின்ற அடையைச் சேகரிப்பது
உண்டு.
அளவு: இதில் வேளைக்கு 1/2 முதல் 3 குன்றி சிறிது நெய்யுடன் சேர்த்து அனலில் காட்டி மத்தித்து தினம் 2 வேளை சாப்பிடலாம்.
ஆரம்பத்தில் 1/2 குன்றியளவு கொடுத்து நோய் குணமாகாவிடில் போகப் போக அளவினை அதிகப்படுத்தி 3 குன்றியளவு வரை கொடுக்கலாம்.
தீரும் நோய்:
மதுமேகம்
கல்லடைப்பு
ஈரல் நோய்கள்
குன்மம்
பெரும்பாடு முதலியன நீங்கும்.
2 . இரத்தப் பிரமியத்திற்கு சூரணம்
பிரப்பங்கிழங்கு
சங்கன் வேர்ப்பட்டை
வெள்ளறுகு
சிவனார் வேம்பு
முற்றின வேப்பம் பட்டை – வகைக்கு 10 பலம்.
இவைகளை இடித்துச் சூரணம் செய்து திரிகடிப் பிரமாணம் 3 நாள் கொள்ள இரத்தப் பிரமியம் நீங்கும்.