26.2 C
Chennai
Saturday, Dec 21, 2024
periqure
அழகு குறிப்புகள்கால்கள் பராமரிப்பு

பெடிக்கியூர் செய்வதால் கிடைக்கும் நன்மைகள்!….

நமது மொத்த உடலையும் தாங்கும் பாதங்களின் ஆரோக்கியத்தை கவனத்தில் கொள்ள வேண்டியது மிகவும் முக்கியம். இரவில் உறங்கச் செல்வதற்கு முன்பாக பாதங்களை நன்றாக அழுத்தி சுத்தம் செய்துவிட்டு படுக்கச் செல்வது எப்போதும் நல்லது.

காலுக்கு செய்யப்படும் பெடிக்கியூர் எனப்படும் காஸ்மெட்டிக் டிரீட்மென்டை அழகு நிலையங்களிலும் அதே சமயம் வீட்டில் உள்ள பொருட்களைக் கொண்டு நாமாகவே முயன்றும் செய்து கொள்ளலாம்.

பெரும்பாலும் பார்லரில் செய்யப்படும் பெடிக்கியூர் அதெற்கென பிரத்யேகமாகப் பயிற்சி பெற்ற அழகுக்கலை நிபுணர்களைக் கொண்டு செய்யப்படுவதால் இருபது நாளைக்கு ஒருமுறை எடுத்துக் கொண்டாலே போதுமானது.

வீட்டில் நாமாகவே செய்வதாக இருந்தால் வாரம் ஒரு முறை பாதங்களின் பாதுகாப்பில் கவனம் வைத்தல் வேண்டும்.

periqure

வீட்டில் பெடிக்கியூர் செய்யும் முறை…

குறிப்பு: பெடிக்கியூர் கிட் கடைகளில் கிடைக்கும். நாமே முயன்று நீண்ட நேரம் குனிந்து பெடிக்கியூர் செய்வதைவிட வேறு ஒருவர் செய்வதே எப்போதும் நல்லது.

* பாதம் நனையும் அளவுக்கு ஒரு வட்ட வடிவ பவுலை எடுத்து அதில் வெதுவெதுப்பான நீர், வீட்டில் இருக்கும் கல் உப்பு, லெமன், ரோஸ் ஆயில் சிறிது, ரோஸ் பெடல்ஸ் இணைத்து பத்து நிமிடங்கள் பாதங்களை ஊற வைத்தல் வேண்டும்.

* சிலவகை நெயில் கட்டரில் கூடுதல் இணைப்பாக கியூட்டிக்கல் புஷ்ஷர் மற்றும் நெயில் கிளீனர் இணைக்கப்பட்டிருக்கும். அதைக் கொண்டு நகங்களின் ஓரங்களை சுத்தம் செய்யலாம்.

* முதல் நாள் ப்ரீஸ் செய்த தேங்காய் எண்ணெயை கிட்டிக்கல் கிரீமாக நகங்களில் தடவி புஷ்ஷர் கொண்டு தேவையற்ற தோல்களை நீக்கவும்.

* உடலைத் தேய்த்துக் குளிக்கப் பயன்படுத்தப்படும் பீர்க்கங்காய் நாரில் ஷாம்புவை சேர்த்து, கால்களில் அழுத்தி தேய்க்கும்போது அழுக்கு முழுவதும் நீங்கும். பீர்க்கங்காய் நார் நாட்டு மருந்துக் கடைகளில் கிடைக்கும்.

* பியூமிக் ஸ்டோன் கொண்டு காலை நன்றாக தேய்க்க வேண்டும். வீட்டில் இருக்கும் நல்லெண்ணெய், தேங்காய் எண்ணெய் அல்லது ஆலிவ் எண்ணெய் இவற்றில் ஏதாவது ஒன்றை கால்களில் தடவி சர்க்கிள் மற்றும் ஆன்டி சர்க்கிள் வடிவில் முட்டி முதல் பாதம் வரை நன்றாக மசாஜ் செய்து விடவும்.

பெடிக்கியூர் செய்வதால் கிடைக்கும் நன்மைகள்

* காலில் உள்ள பாத வெடிப்பு மற்றும் குதிகால் வெடிப்புகள் நீங்கும்.

* இறந்த செல்கள் நீங்கும். தடிமனான ஸ்கின்கள் மென்மை அடையும்.

* கால்கள் பளிச்சென எடுப்பாக மென்மையாகத் தெரியும்.

* பாய்ண்ட் பார்த்து ப்ரஷ்ஷர் தருவதால் முழு உடலும் புத்துணர்ச்சி பெறும்.

* கால் வலி, உடல் வலி நீங்கும்.

Related posts

நகம் கடிப்பதால் வரும் செப்சிஸ்!…

sangika

முகத்திற்கு வீட்டில் செய்யக்கூடிய மசாஜ்

nathan

சருமக்குழிகளை சரி செய்துவிட சோற்றுக்கற்றாழையை இவ்வாறு பயன்படுத்துங்கள்!…

sangika

பித்த வெடிப்பு அசிங்கமா தெரியுதா? இப்படி செஞ்சு பாருங்க!!

nathan

வெண்டைக்காய் சாப்பிட்டால் மூளை மட்டும் வளராதுங்க.!அதுவும் வளரும்…

nathan

கால்களை அழகாக்க இத செய்யுங்கள்!…

sangika

இந்த குறிப்பு மிருதுவான மின்னும் பொலிவை தரும்.

sangika

வைரலாகும் வீடியோ! பல்டி அடித்த முன்னணி நடிகை …

nathan

அழகு குறிப்புகள்:கைகளின் அழகு குறையாமலிருக்க. Beautiful hands

nathan