பொதுவாக உடல் எடையைக் குறைப்பது என்பது ஒரு எளிதான
செயல்தான் ஆனால் நிரந்தரமாக உடல் எடையைக் குறைப்பது என்பது சிலருக்கு மிகவும் கடினம். மேலும் தற்போதைய நவீன டயட் மற்றும் உடற்பயிற்சிகளை தினமும் பின்பற்றுவதன் மூலம் தற்காலிகமாக உடல் எடையை வேகமாக குறைக்கலாம். ஆனால் இந்த உடல் பயிற்சியை திடீரென நிறுத்தினால் மீண்டும் உடல் எடை அதிகரித்துவிடும். எனவே எளிய முறையில் எவ்வாறு உடல் எடையை நிரந்தரமாக குறைக்கலாம் என்பதை பார்க்கலாம்.
எலுமிச்சை மற்றும் உப்பு
தினமும் காலையில் முதல் வேலையாக வெறும் வயிற்றில் வெதுவெதுப்பான நீரில் எலுமிச்சை சாறு மற்றும் உப்பு கலந்து குடிக்க வேண்டும். அப்போது உங்கள் உடல் எடை குறைவதைப்பார்க்கலாம்.
பூண்டு பால்
ஒரு பாத்திரத்தில் ஒரு டம்ளர் பால் சேர்த்து அதனுடன் 4-5 பூண்டை போட்டு பாதியாக சுண்டும் வரை கொதிக்க வைத்து இறக்க வேண்டும். பின் அந்த பாலுடன் பூண்டையும் சாப்பிட வேண்டும். இவ்வாறு செய்து வர பூண்டு உடலில் உள்ள தேவையற்ற கொழுப்புக்களை கரைத்து உடல் எடையை குறைத்து விடும்.
கேரட் மற்றும் மோர்
தினமும் மோரில் கேரட்டை அரைத்து கலந்து குடித்து வர, உடல் எடை குறையும். எனவே உடல் எடையால் அவதிப்படுபவர்கள் இதை தினம் செய்து வாருங்கள்.
பப்பாளிக் காய்
உடல் எடை அதிகம் உள்ளவர்கள் பருப்புடன் பப்பாளிக் காயை சேர்த்து அடிக்கடி சமைத்து சாப்பிட வேண்டும். அதுவும் உடல் எடை குறைய உதவியாக இருக்கும்.
மிளகுத்தூள்
காய்கறிகள் சேர்க்கப்பட்ட சூப் செய்து குடிப்பதும் உடல் எடையைக்குறைக்க உதவும். ஏனெனில் அதில் மிளகுதுாள் சேர்க்கப்படும். இதனால் சூப்பின் மணமும், சுவையும் அதிகரிப்பதோடு, உடலில் உள்ள கொழுப்புக்களையும் அது கரைத்துவிடும்.