தேவையான பொருட்கள்:
பூசணிக்காய் – 1 துண்டு,
உலர் திராட்சை – 2 டேபிள்ஸ்பூன்,
உப்பு – ருசிக்கேற்ப,
விருப்பப்பட்டால் தேங்காய்த் துருவல் – ஒரு டேபிள்ஸ்பூன்,
கொத்தமல்லித் தழை – சிறிதளவு,
மிளகுத்தூள் – கால் டீஸ்பூன்,
புளிக்காத தயிர் – ஒரு கப்.
செய்முறை:
• பூசணிக்காயை துருணி அதில் உள்ள தண்ணீரை பிழிந்துவிடவும்.
• கொத்தமல்லியை நன்றாக கழுவி பொடியாக நறுக்கி கொள்ளவும்.
• ஒரு பாத்திரத்தில் தயிர் போட்டு அதனுடன் பூசணித் துருவல் மற்றும் கொடுத்துள்ள எல்லாப் பொருட்களையும் சேர்த்துக் நன்றாக கலக்கவும்.
• குளிரவைத்துச் சாப்பிட்டால், சுவை கூடும்.