தேவையான பொருட்கள்:
சிக்கன்- அரை கிலோ
புதினா – ஒரு கட்டு
பச்சை மிளகாய் – 4
உப்பு – தேவையான அளவு
மஞ்சள் தூள் – கால் டீஸ்பூன்
மிளகாய் தூள் – அரை டீஸ்பூன்
கரம் மசாலா – ஒரு டீஸ்பூன்
சீரகம் – ஒரு டீஸ்பூன்
தயிர் – அரை கப்
எண்ணெய் – தேவையான அளவு
செய்முறை:
ஒரு தேக்கரண்டி எண்ணெயில் புதினா, பச்சை மிளகாயை வதக்கி அரைத்துக் கொள்ளுங்கள். அரைத்த விழுதை தயிரில் போட்டு அரை மணி நேரம் ஊற வையுங்கள்.
குக்கரில் எண்ணெய்விட்டு காய்ந்ததும் சீரகம் போட்டு தாளித்து சிக்கனைப் போடுங்கள். அடுத்து இதில் மஞ்சள் தூள், மிளகாய் தூள், கரம் மசாலா, உப்பு சேர்த்து கிளறுங்கள். ஏற்கனவே தயாரித்து வைத்திருக்கும் புதினா கலவையை சேர்த்து தயிரை இதில் கொட்டி கலந்து குக்கரை மூடி விசில் போடுங்கள். இரண்டு விசில் வரும்வரை வேக வைத்து பரிமாறுங்கள்.