03 1438577935 5 provideenergy
ஆரோக்கிய உணவு

பிஸ்தா சாப்பிடுவதன் மூலம் கிடைக்கும் நன்மைகள்!!!

பொதுவாக நட்ஸ்களில் எண்ணற்ற சத்துக்கள் நிறைந்துள்ளன என்பது அனைவரும் அறிந்ததே. அதே சமயம் நட்ஸ்கள் மிகவும் விலை அதிகமானதும் கூட. அதனால் அவற்றை வாங்கி சாப்பிடுவது சற்று கடினம் தான். இருப்பினும் உடல் ஆரோக்கியமாக இருக்க வேண்டுமெனில், நட்ஸ்களை அடிக்கடி இல்லாவிட்டாலும், அவ்வப்போது வாங்கி சாப்பிட வேண்டியது அவசியம்.

அதிலும் பிஸ்தாவை வாங்கி சாப்பிடுவது என்பது மிகவும் நல்லது. தினமும் ஒரு கையளவு பிஸ்தா சாப்பிட்டு வந்தால், சில நாட்களில் உடல் ஆரோக்கியமாக இருப்பதை நீங்களே உணர்வீர்கள். மேலும் பிஸ்தாவில் கலோரிகள் குறைவு மற்றும் நார்ச்சத்துக்கள் அதிகம். இதனால் இதயம் மற்றும் இரத்த நாளங்களில் பிரச்சனைகள் ஏற்படுவது தடுக்கப்படும்.

சரி, இப்போது பிஸ்தாவை சாப்பிடுவதன் மூலம் நாம் பெறும் நன்மைகள் என்னவென்று பார்ப்போம்.

கண்களுக்கு நல்லது பிஸ்தா சாப்பிடுவதன் மூலம், கண் பார்வை மேம்படுவதோடு, மாகுலர் திசு செயலிழப்பினால் கண் பார்வையை இழப்பதைத் தவிர்க்கலாம்.

ஆரோக்கியமான மூளை பிஸ்தாவில் வைட்டமின் பி6 என்னும் மூளைக்கு வேண்டிய அத்தியாவசிய வைட்டமின் நிறைந்துள்ளது. எனவே பிஸ்தா சாப்பிட்டால், மூளையில் இரத்த ஓட்டம் அதிகரித்து மூளை பாதிக்கப்படுவது தடுக்கப்படும். அதுமட்டுமின்றி பிஸ்தா ஞாபக சக்தி மற்றும் கவனத்தை அதிகரிக்கும்.

கொலஸ்ட்ராலைக் குறைக்கும் பிஸ்தா இரத்தத்தில் உள்ள கெட்ட கொலஸ்ட்ராலைக் குறைக்கும். இதன் மூலம் மாரடைப்பு மற்றும் பக்கவாமம் ஏற்படுவது தடுக்கப்படும். அதுமட்டுமல்லாமல், பிஸ்தா இரத்த நாளங்களில் கொழுப்புக்கள் தங்குவதைத் தடுத்து, உயர் இரத்த அழுத்தம் ஏற்படுவதைக் குறைக்கும்.

இளமையை தக்க வைக்கும் பிஸ்தாவை தினமும் சிறிது உட்கொண்டு வந்தால், இளமையைத் தக்க வைக்கலாம். இதற்கு அதில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் தான் முக்கிய காரணம்.

ஆற்றலை வழங்கும் பிஸ்தாவை ஸ்நாக்ஸ் நேரத்தில் எடுத்து வந்தால், உடலின் ஆற்றல் மேம்படும். மேலும் பிஸ்தா உடலளவில் மட்டுமின்றி, மனதளவிலும் சுறுசுறுப்புடன் செயல்பட உதவும். பிஸ்தாவில் நார்ச்சத்துக்கள் மற்றும் அத்தியாவசிய ஃபேட்டி ஆசிட்டுகள் அதிக அளவில் உள்ளன.

நீரிழிவைத் தடுக்கும் பிஸ்தாவில் பாஸ்பரஸ் அதிகம் உள்ளது. இவை புரோட்டீன்களை உடைத்து அமினோ ஆசிட்டுகளாக மாற்றும். இந்த அமினோ ஆசிட்டுகள் இன்சுலின் உற்பத்திக்கு உதவி, நீரிழிவு வருவதைத் தடுக்கும்.

இரத்த ஓட்டத்தை அதிகரிக்கும் பிஸ்தா சாப்பிடுவதன் மூலம், உடலில இரத்த ஓட்டம் சீராகி, உடலுறுப்புகள் எவ்வித இடையூறுமின்றி சீராக செயல்படும். முக்கியமாக பிஸ்தா சாப்பிடுவதன் மூலம் உடலின் அனைத்து பாகங்களுக்கும் ஆக்ஸிஜன் கிடைக்கும். மேலும் பிஸ்தா இரத்தத்தின் அளவையும் அதிகரிக்கும்.

புற்றுநோயை தடுக்கும் பிஸ்தாவில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகளான ஸீக்ஸாத்தைன் மற்றும் லுடீன் போன்றவை உள்ளதால், இவை உடலில உள்ள நச்சுமிக்க பொருட்களை உடலில் இருந்து வெளியேற்றி, புற்றுநோய் ஏற்படும் அபாயத்தைத் தடுக்கும்.

03 1438577935 5 provideenergy

Related posts

இந்தப் பழம் பல நோய்களில் இருந்து விடுதலை அளிக்கும்…..

sangika

உடலில் கொழுப்பை குறைக்கும் பச்சை ஆப்பிள்

nathan

உங்களுக்கு உடலில் உள்ள கொழுப்பு, குறைய வேண்டுமா..?

nathan

வெயிலால் சருமத்தின் நிறம் மாறுதா? அப்ப டீ யூஸ் பண்ணுங்க.

nathan

அடேங்கப்பா! பிரபல நடிகருக்கு ஜோடியாகும் தான்யா ரவிச்சந்திரன்

nathan

இந்த சீக்ரெட் பொருள மட்டும் சாப்பிடுங்க… எடை சும்மா விறுவிறுனு குறையும்

nathan

பச்சை பயறு உடல் எடையை சீராக பராமரிக்கவும் சருமம் மற்றும் கூந்தல் பிரச்சினைகளையும் சரி செய்கிறது

nathan

ஆப்பிளுக்கு ஈடான சத்து கொய்யாவில்..

nathan

பிரக்டோஸ் மற்றும் மார்பக கேன்சர் வர வாய்ப்பு உள்ளதாக கூறுகிறது. அதுவும் பால் அதிகமாக அருந்தும்போது ஏற்படும்.

nathan