26.2 C
Chennai
Saturday, Dec 21, 2024
mlkjlkl
மருத்துவ குறிப்பு

பித்தப்பையில் ஏன் கற்கள் உருவாகிறது அதற்கான காரணங்கள் என்ன என்பதைப் பார்க்கலாமா?

ஒருவரது உடலில் பித்தநீரில் இருக்கும் கொழுப்புகளின் அளவு, வழக்கத்தை விட குறைவாக இருந்தால் பித்தக்கற்கள் உருவாகும். உடலில் இருக்கும் ஈரலானது, இரத்தத்தில் உள்ள கொழுப்பை உறிஞ்சி, பித்தநீராக வெளியேற்றுகிறது.

இந்த பித்தநீரில் இருக்கும் கொழுப்பின் அளவு, சரியானஅளவாகஇருந்தால் ஒன்றும் செய்யாது. ஆனால் கொழுப்பின் செறிவு அதிகமாக இருக்கும் போது, இவை கொழுப்பு கற்களாக மாறுகிறது என்றார்கள்.

பித்தநீர் வெளியேறும் உணவுக் குழாய்களுக்குள், ஏதேனும் அடைப்புகள் இருந்தாலும், பித்தகற்கள் உருவாவதற்கு வாய்ப்புண்டு. பெரும்பாலும் பித்தப்பையில் கற்கள் வரும் வாய்ப்பு ஆண்களை விட பெண்களுக்கே அதிகம் தாக்குகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

உணவு முறைகளில் மாற்றமும், பித்தப்பையில் கற்கள் உண்டாக வாய்ப்புண்டு. நார்ச்சத்து மிக்க உணவுகளின் அளவு குறைந்ததும், கொழுப்புச்சத்துஅதிகமுள்ள உணவுகள் அதிகரித்ததுமே, பித்தப்பை கற்கள் அதிகரிக்க காரணம் என்கிறார்கள் மருத்துவர்கள். வயது வித்தியாசமின்றி யாருக்கு வேண்டுமானாலும் பித்தப்பையில் கற்கள் வரலாம்.

உடல்பருமனைக் கொண்டிருப்பவர்களால், உடலில் இருக்கும் அதிக கொழுப்புகள் வெளியேறும் பித்தநீரில் அதிக கொழுப்புகளை உண்டாக்கி, பித்தப்பையில் கற்களை உண்டாக்குகின்றன. 90 சதவீதம் கற்கள் கொழுப்பினால் மட்டுமே உண்டாகின்றன.
mlkjlkl
சிலர் உடல் உழைப்பை கொண்டிருக்காமல் இருப்பார்கள். அவர்களுக்கும் பித்தப்பையில் கற்கள் உருவாக வாய்ப்புண்டு. அதிகப்படியான கொழுப்பு உணவுகளை உண்டு, உடல் உழைப்பு இல்லாமல் இருப்பவர்களுக்கும் கற்கள் உண்டாகலாம். பரம்பரையாகவும், நீரிழிவு கட்டுப்பாட்டில் இல்லாதவர்களுக்கும் கூட இந்தக் குறைபாடு தோன்றலாம். குடிப்பழக் கம்,புகைப்பழக்கமும் கூட பித்தப்பையில் கற்களை உண்டாக்கும்.

உடல்எடையைக் குறைக்க விரும்புவர்கள் சத்தில்லாமல் அதிதீவிரமான டயட்டைப் பின்பற்றும்போது மிகக் குறுகிய காலத்தில் எடையைக் குறைப்பார்கள். இவர்களுக்கும், பித்தப்பையில் கற்கள் எளிதாக உருவாகும். கொழுப்புக் கற்களாக இருந்தால் அதிகம் பிரச்னைகளை உண்டாக்காது என்றாலும், கால்சியம் கார்பைடால் உருவாகும் கறுப்பு நிற கற்கள் எண்ணிக்கையிலும் அதிகமாக இருக்கும். இந்த வகையான கற்கள் பித்தப்பையை அடைக்கும் வகையில் அதிகமாக இருக்கும்.

பித்தப்பை கற்களை ஆரம்பத்தில் கண்டறிவது சற்று கடினம் என்றாலும், இதன் அறிகுறிகள் வயிற்று வலி மட்டுமல்லாமல் வாந்தி, காய்ச்சல், மஞ்சள்காமாலை, பசியின்மை போன்றவையும் உண்டாகும். பித்தப்பை கற்களைக்கண்டறிந்தால், அதன் அளவை பொறுத்து மாத்திரைகளின் மூலமும் கரைக்க முடியும்.

ஆனால் இது 10% சதவீதத்தினருக்கு மட்டுமே பலனளிக்கும் என்பது கவனிக்க வேண்டியது. அப்படியே மருந்தை சாப்பிட்டாலும், சிலருக்கு மருந்தை நிறுத்தினால் மீண்டும் கற்கள் உருவாகிவிடும். சிலருக்கு மாத்திரைகளால் பக்கவிளைவுகள் ஏற்படவும் வாய்ப்புகள் உண்டு.

பித்தப்பை கற்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு, லேப்ராஸ்கோப்பி மூலம் அறுவை சிகிச்சை எளிமையாகி இருக்கிறது. பித்தப்பையில் நோய்த் தொற்று உண்டாகும் போது, அறுவை சிகிச்சையின் மூலம் பித்தப்பையையே நீக்குவதும் உண்டு. இதனால் உடலுக்கு எவ்வித பாதிப்பும் உண்டாகாது. செரிமான மண்டலத்துக்கு தேவையான நீரை மற்ற துணை உறுப்புகள் உற்பத்தி செய்துவிடும்.

சாப்பிட்டு முடித்ததும் வரும் வயிறு வலியை அலட்சியம் செய்யாமல், உரிய நேரத்தில் மருத்துவரிடம் சென்று சிகிச்சை எடுத்துகொள்வது நல்லது.

Related posts

பெண்களே தெரிஞ்சிக்கங்க…’அங்க’ ரொம்ப அரிக்குதா? அதுக்கு இதெல்லாம் தான் காரணம்!

nathan

பிறந்த குழந்தை ஏன் அழுகிறது தெரியுமா?

nathan

பித்தவெடிப்பு குணமாக:

nathan

டீன் ஏஜ் பெண்களுக்கு ஏற்படும் உடல்நல பிரச்னைகள் என்ன?

nathan

உங்களுக்கு முப்பது வயசு ஆகபோகுதா? அப்ப இதெல்லா நீங்க கண்டிப்பா மாத்திக்கணும்!!!

nathan

பற்களில் படிந்திருக்கும் கறைகளை நீக்குவது எப்படி?

nathan

பொது வை-பை பயன்படுத்தும் போது கவனிக்க வேண்டியவை

nathan

சினைப்பை கட்டிகள் எப்படி உருவாகிறது? தடுக்கும் வழிமுறைகள்

nathan

உங்களுக்கு தொியுமா ? எந்தவொரு நச்சு கூறுகளையும் உடலிலிருந்து அடித்து விரட்டும் இயற்கை பானம்!

nathan