கூந்தல் வளைந்து, அலை போல இருப்பது சிலருக்கு பிடிக்காது. இன்னும் சிலருக்கு ஒரே மாதிரியான கூந்தல் அலுத்துவிடும், ஒரு மாற்றத்திற்காக சுருள் கூந்தலை நேராக்க விரும்புவார்கள்.
பார்லர் சென்று ஆயிரக்கணக்கில் செலவிட வேண்டுமே என விரும்பிய வகையில் நேர்படுத்தாமல் இருப்பார்கள். அவ்வாறு கெமிக்கல் மற்றும் அதிக வெப்பம் பாய்ச்சி செய்யப்படும் இந்த விதமான ஸ்ட்ரெடியிட்டனிங் கூந்தலுக்கு நல்லதல்ல
கூந்தல் கொத்து கொத்தாக உதிரும். முடி வளர்ச்சி தடைபடும். இயற்கையான முறையில் கூந்தலை நேர்படுத்த இங்கே சில குறிப்புகள் கொடுக்கப்பட்டுள்ளது. பயன்படுத்திப் பாருங்கள்.
முல்தானி மட்டி : நிறைய பேர் முல்தானி மட்டி சருமத்திற்கு மட்டும்தான் என நினைக்கிறார்கள். இது கூந்தலுக்கும் உபயோகப்படுத்தலாம். முல்தானி மட்டி பொடியில் நீர் கலந்து குழைத்துக் கொள்ளுங்கள். இதனை தலைமுடியில் தடவுங்கள். பிறகு மெதுவாக ஒரு சீப்பில் சீவவும். 1 மணி நேரம் கழித்து தலையை அலசுங்கள். பிறகு பாருங்கள்
பால் மற்றும் முட்டை ; 1 கப் பாலில் 2 முழு முட்டையை ஊற்றி 1 நிமிடம் வரை நன்றாக கலக்குங்கள். இந்த கலவையை தலையில் தடவவும். தலைமுடியை கொண்டை போல் போட்டு 1 மணி நேரம் அப்படியே விடுங்கள். பிறகு ஷாம்புவினால் தலை முடியை அலசவும்.
சோளமாவு மற்றும் தேங்காய் பால் : தேங்காய் பால் அதிக ஊட்டச் சத்தை தரும். 1 கப் தேங்காய் பாலில் 2 டேபிள் ஸ்பூன் ஆலிவ் எண்ணெய், அரை மூடி எலுமிச்சை சாறு, மற்றும் 2 டேபிள் ஸ்பூன் சோள மாவு ஆகியவற்றை கலந்து அடுப்பில் வைத்தி சில நிமிடங்கள் சூடாக்கவும். பிறகு அடுப்பை அணைத்து இந்த கலவையை ஆற விடுங்கள். ஆறியதும் அதனை தலையில் தடவவும்.1 மணி நேரம் கழித்து தலைமுடியை அலசுங்கள்.
வாழைப்பழம் மற்றும் தேன் : ஒரு வாழைப்பழத்தை மசித்துக் கொள்ளுங்கள். அதில் அரை கப் யோகர்ட், 2 ஸ்பூன் ஆலிவ் எண்ணெய், 3 ஸ்பூன் தேன் ஆகியவற்றை நன்றாக கலந்து கொள்ளுங்கள். இதனை தலை முடியில் தடவி 1 மணி நேரம் காய விடவும். பிறகு வெதுவெதுப்பான நீரில் அலசவும்
ஆளி விதை மற்றும் கற்றாழை : ஒரு கப் நீரில் ஆளிவிதை 2 டீஸ்பூன் போட்டு குறைந்த தீயில் கொதிக்க விடுங்கள். பிறகு அடுப்பை அணைத்து ஆற வைத்து வடிகட்டி எடுத்துக் கொள்ளுங்கள். இந்த நீரில் சோற்றுக் கற்றாழை 2 டேபிள் ஸ்பூன், எலுமிச்சை சாறு 1 டேபிள் ஸ்பூன், 2 டீஸ்பூன் தேன் ஆகியவ்ற்றை கலந்து தலையில் தடவுங்கள்.காய்ந்தபின் தலைமுடியை அலசவும்.