பொதுவாக நம் உணவு பழக்கவழக்கங்களில் சாப்பாட்டிற்கு மட்டும் முக்கியத்துவம் கொடுக்காமல் பழங்களுக்கும் அதிக முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்.
உணவை விட சத்தானது பழங்கள் தான். சாப்பாடும் சாப்பிட வேண்டும் அதே சமயம் பழங்கள் நிறைய எடுத்து கொள்ள வேண்டும். பழங்கள் சாப்பிட்டவுடன் தண்ணீர் குடிக்க கூடாது. அப்படி குடித்தால் சில உடல் உபாதைகள் ஏற்படும்.
அனைத்து பழங்களிலும் சர்க்கரை மற்றும் ஈஸ்ட் அதிகம் உள்ளது. அவை செரிமானம் சீராக நடைபெற உதவும். நிறைய செரிமான நொதிகளை உற்பத்தி செய்யும்.
வயிற்றில் உற்பத்தியாகும் ஹைட்ரோ குளோரிக் அமிலம் உணவு பொருட்கள் எளிதில் செரிமானம் ஆவதற்கு உதவும். ஆனால் பழங்கள் சாப்பிட்ட உடனே தண்ணீர் குடித்தால் செரிமானத்துக்கு இடையூறு ஏற்பட்டது போல் ஆகிவிடும்.
தண்ணீர் உடனே குடித்தால் செரிமான அளவான பி.எச் குறைந்து விடும். அதனால் வயிற்று போக்கு ஏற்பட வாய்ப்புள்ளது, வயிற்று பிரச்னைகள் அதிகம் ஏற்படும்.
தண்ணீர் குடித்து விட்டால் செரிமான சூழற்ச்சி குறையும் அதனால் வயிற்று பிரச்னைகள் வரும். சாப்பிடும் உணவிற்கு போதுமான நொதிகள் உற்பத்தியாகவில்லை எனில் நெஞ்செரிச்சல் ஏற்படும்.
செரிமானத்திற்கு பாதிப்பு ஏற்படாமல் இருக்க உணவு சாப்பிட்ட ஒரு மணி நேரத்திற்கு பின் பழம் சாப்பிடுங்கள்.