24.3 C
Chennai
Thursday, Dec 19, 2024
1452758811 937
மருத்துவ குறிப்பு

பல நோய்கள் ஏற்பட காரணமாய் இருக்கும் மலச்சிக்கல்

வழக்கத்திற்கு மாறாக மலம் வெளியேறாமல் இருப்பது, மலம் இறுகிப்போவது, மலம் கழிப்பதில் சிக்கல், மலம் முழுவதுமாகப் போகவில்லை என்கிற உணர்வு, மலம் கொஞ்சம்கூட போகாமல் ஆசனவாயை அடைத்துக் கொள்வது போன்ற நிலைமைகளை ‘மலச்சிக்கல்’ என்று அழைக்கிறோம்.

வருடத்துக்கு இரண்டு முறை பேதிக்குச் சாப்பிட்டு வாய் முதல் ஆசனவாய்வரை உள்ள உணவுப் பாதையை முழுமையாகச் சுத்தப்படுத்திக்கொள்ள வேண்டும். சரியான நேரத்துக்குச் சத்தான அறுசுவை உணவை அளவோடு எடுத்துக்கொள்ள வேண்டும். வயிற்றை அரைப் பங்கு உணவு, கால் பங்கு நீர், கால் பங்கு வெற்றிடமாக வைத்துக்கொள்ள வேண்டும்.

தூண்டும் காரணிகள் மலச்சிக்கலுக்கு முக்கியக் காரணி நம் உணவுமுறை. கொழுப்பு மிகுந்த உணவுகள் மற்றும் பாஸ்ட் புட் உணவுகளை அதிகமாகச் சாப்பிடுவது. பால் சார்ந்த உணவுகளை அதிகமாகச் சாப்பிடுவது, விரைவு உணவுகளையும் பதப்படுத்தப்பட்ட உணவுகளையும் அதிக அளவில் சாப்பிடுவது. நார்ச்சத்துள்ள உணவு வகைகளைக் குறைவாகச் சாப்பிடுவது. தண்ணீர் குறைவாகக் குடிப்பது,

காய்கறி, கீரை, பழங்களைச் சாப்பிடாதது போன்ற தவறான உணவுப் பழக்கங்கள்தான் பலருக்கும் மலச்சிக்கலை உண்டாக்குகின்றன.

அடுத்து, தினமும் மலம் கழிக்கும் முறை சரியாக அமையாவிட்டால் அது நாளடைவில் மலச்சிக்கலுக்குப் பாதை அமைக்கும். குறிப்பாக, மலம் வருகின்ற உணர்வு உண்டாகும்போது கழிப்பறை அருகில் இல்லாதது, முக்கிய வேலையில் ஈடுபட்டிருப்பது, பயணத்தில் இருப்பது போன்ற காரணங்களால் மலம் கழிப்பதைத் தவிர்த்தால் காலப்போக்கில் பெருங்குடலில் உள்ள உணர்வு நரம்புகள் செயலிழந்து மலத்தை வெளியேற்ற வேண்டும் என்கிற உணர்வைத் தெரிவிக்காது. இதன் காரணமாக மலச்சிக்கல் ஏற்படும்.

பொதுவாகவே வயது ஆக ஆக மலம் போவது குறையும். முதுமையில் உணவுமுறை மாறுவது, உடற்பயிற்சி குறைவது, தேவையான அளவுக்குத் தண்ணீர் குடிக்காதது மலச்சிக்கலுக்கு வழிவிடும்.

மூட்டுவலி, இடுப்புவலி உள்ள முதியவர்கள் அடிக்கடி மலம் கழிப்பதைத் தவிர்ப்பதால் அவர்களுக்கு மலச்சிக்கல் வருகிறது.

வேறு உடல் பிரச்னைகளுக்காக நாம் சாப்பிடும் மருந்துகளும் மலச்சிக்கலுக்குக் காரணமாகலாம். மலச்சிக்கலைப் போக்குவதற்காக பேதி மாத்திரைகளைச் சாப்பிடுகிறோம். ஆனால், அந்த பேதி மாத்திரைகளை அடிக்கடி சாப்பிட்டாலும் நாளடைவில் மலச்சிக்கல் உண்டாகும்.

காய்ச்சல், வாந்தி, பசிக்குறைவு போன்ற பொதுவான பிரச்னைகள் ஏற்படும்போதும், வெயிலில் அதிகம் அலையும்போதும் உடலில் நீர்ச்சத்து குறைந்துவிடும். அப்போது மலச்சிக்கல் ஏற்படும்.

மூலம் நோய், ஆசனவாய் வெடிப்பு, ஆசனவாய் சுருங்குதல், குடல் அடைப்பு, குடலில் கட்டி, பெருங்குடல் புற்றுநோய், ‘டைவர்ட்டிகுலைட்டிஸ்’ எனும் குடல் தடிப்பு நோய், நீரிழிவு நோய், தைராய்டு குறைவாகச் சுரப்பது, பேராதைராய்டு அதிகமாகச் சுரப்பது, குடலிறக்கம், பித்தப்பைக் கற்கள், பார்க்கின் நோய், மூளைத்தண்டுவட நோய்கள், மன அழுத்தம், தூக்கமின்மை ஆகிய பாதிப்புகள் இருக்கும்போது மலச்சிக்கல் ஒரு முக்கியமான அறிகுறியாக வெளிப்படும்.

வயதுக்குத் தேவையான உடற்பயிற்சி இல்லாதது, முதுமையின் காரணமாகவோ அல்லது நோயின் காரணமாகவோ படுக்கையில் நீண்டகாலம் படுத்தே இருப்பது போன்றவையும் மலச்சிக்கலை வரவேற்பதுண்டு. எப்போது கவனிக்க வேண்டும்? மலச்சிக்கலை ஆரம்பத்திலேயே கவனிக்காமல் விட்டால் ஆசனவாயில் விரிசல் ஏற்பட்டு ரத்தக்கசிவு உண்டாகும்.

அஜீரணம், வாயுத் தொல்லை, வயிற்று உப்புசம், குடலிறக்கம், குடல் அடைப்பு, சிறுநீர் அடைப்பு, நெஞ்சுவலி, மயக்கம் ஏற்படலாம். எனவே, மலச்சிக்கலுடன் பின்வரும் அறிகுறிகள் தெரிந்தால் உடனே மருத்துவரிடம் பரிசோதித்துக் கொள்ள வேண்டும்:
1452758811 937

Related posts

நீங்கள் தினமும் கழுத்து வலியால் கஷ்டப்படுறீங்களா?அப்ப இத படிங்க!

nathan

பெண்களே தெரிஞ்சிக்கங்க… பெண்களின் மாதவிலக்கு கோளாறை நீக்கும் ஒரு அற்புத வைத்தியம்!!

nathan

400க்கும் மேல சர்க்கரையின் அளவும் சட்டென குறையும்! இதோ எளிய நிவாரணம்

nathan

உங்க நுரையீரல் பாதையில் அடைத்திருக்கும் மொத்த சளியை அகற்ற சூப்பர் டிப்ஸ்….

nathan

இதோ உடல் எடையை அதிகரிக்கும் வழிமுறைகள்!இதை முயன்று பாருங்கள்…

nathan

குங்குமப்பூ சாப்பிட்டால் குழந்தை சிவப்பாக பிறக்குமா?

nathan

3 வகையான உடல்வாகு கொண்ட மனிதர்கள்

nathan

பெண்களே பேஸ்புக் ரோமியோக்களிடம் இருந்து தப்பிக்க டிப்ஸ்..!

nathan

பெண்கள் ஷாப்பிங்கில் அதிக நேரம் செலவிட என்ன காரணம்

nathan