பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளின் பரிட்சை ரிசல்ட் வந்தவுடன் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். பிள்ளைகள் நடவடிக்கைகளை கவனிக்க வேண்டும்.
பரிட்சையில் தோல்வியடையும் மாணவர்கள் கவனிக்க வேண்டியவை
நிறைய மாணவர்கள் தாங்கள் அல்லது பெற்றோர் மற்றும் ஆசிரியர்கள் எதிர்பார்த்த அளவு மார்க் வரவில்லையென்றால் மனச்சோர்வு அடைவார்கள். சில மாணவர்கள் தற்கொலை செய்யும் அளவிற்கு துணிந்தும் விடுவார்கள். பெற்றோர்கள், ஆசிரியர்களின் எதிர்பார்ப்பின்படி நம்மால் மதிப்பெண் வாங்க முடியவில்லையே, பின் வாழ்ந்து என்ன செய்யப்போகிறோம் என்ற எண்ணத்தோடு தாழ்வு மனப்பான்மையும் சேர்ந்து கொள்ள, தற்கொலை முயற்சியில் ஈடுபடுகிறார்கள்.
ஆராய்ச்சியின்படி, தேர்வில் தோல்வியுற்றவர்களில் 10 சத வீத மாணவர்கள் தற்கொலை முயற்சியில் ஈடுபடுகிறார்கள், ஒரு சிலர் அதிலும் வெற்றியும் பெற்றுவிடுகிறார்கள். உலகத்திலே உருவாக்க முடியாதது என்று ஒன்று உண்டென்றால் அது உயிர் மட்டும் தான். உயிர் போய்விட்டது என்றால் திரும்ப வாங்க முடியாது.
எனவே பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளின் பரிட்சை ரிசல்ட் வந்தவுடன் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். பிள்ளைகள் நடவடிக்கைகளை கவனிக்க வேண்டும். அவர்களுக்கு தன்னம்பிக்கையும், ஊக்கத்தையும் அளிக்க வேண்டும். வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவது போல கடின வார்த்தைகளைக் கூறி மேலும் அவர்களை மனசோர்வுக்கு ஆளாக்கக்கூடாது.
1. தனிமையில் இருப்பதை தவிர்க்க வேண்டும்.
2. பிரச்சனைகள் மனதில் அடைத்து வைத்தால் மன பாரம் அதிகரிக்கும். எனவே மனதில் உள்ள பாரத்தை அல் லது பிரச்சனைகளை பெற்றோ ரிடமோ, ஆசிரியர்களிடமோ அல்லது நண்பர்களிடமோ பகிர்ந்து கொள்ள வேண்டும். பிரச்சனைகளைப் பேசினால் தான் தீர்வு கிடைக்கும்.
3. உடற்பயிற்சி, விளையாட்டு மற்றும் சினிமா போன்ற மனதை ரிலாக்ஸ் பண்ணக் கூடிய விஷயங்களில் தங்களை ஈடுபடுத்திக்கொள்ள வேண் டும்.
4. பெயில் ஆகிவிட்டோமே என்று எண்ணி நெகட்டிவாக எண்ணங்களை அசை போட் டுக் கொண்டு இருப்பதை நிறுத்திவிட்டு மேற்கொண்டு என்ன செய்யலாம் என்பதில் கவனம் செலுத்த வேண்டும். உதாரணமாக டுட்டோரியலில் சேர்ந்து படிக்கலாமா அல்லது தொழிற்கல்வியில் சேரலாமா என்று யோசிக்க வேண்டும்.
5. முடிந்த அளவு முன்பு இருந்தது போல் இயல்பாக எல்லோரிடமும் பேசி, பழகி இருக்க முயல வேண்டும்.
6. சிகரெட், மது போன்ற பழக்கங்களில் ஈடுபடாமல் இருக்க வேண்டும்.
7. ஒரு நிமிடம், இந்த சூழ் நிலையில் என் நண்பன் இருந் தால் அவனுக்கு என்ன யோசனை நான் கூறுவேன் என்று யோசித்து அதனை தான் கடைபிடிக்க முயல வேண்டும்.
8. உணர்ச்சிகள் அதிகம் இருந்தால் தலையனையில் முகம் மூடி அழுது கொள்ள லாம் அலலது கையால் தலை யணையை குத்திக் கொள்ள லாம். ஆனால் தன்னைத்தானே காயப்படுத் திக் கொள்கிற முயற்சியில் ஈடுபடக்கூடாது.
இது போன்ற விசயங்களை பெற்றோர்களும், மாணவர்க ளும் கடைபிடித்து வாழ்க்கை யில் ஏற்படுகிற சில பின்ன டைவுகளை எதிர்த்து “வாழ்க்கை வாழ்வதற்கே” என்ற தன்னம்பிக்கையோடு இருக்க வேண்டும்.