24.7 C
Chennai
Sunday, Dec 22, 2024
qq6023 1
Other News

பதிவாளர் அலுவலகத்தில் காதல் திருமண ஜோடி திடீர் தர்ணா : வெளியான தகவல்!!

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் பெரியதாரா பகுதியை சேர்ந்தவர் ஜோஷி. நர்சிங் படிப்பை முடித்துவிட்டு கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில் செவிலியராக பணிபுரிந்து வந்தார். அவரைப் போலவே மருத்துவமனையில் பணிபுரிந்த கலைவாணனும் காதலித்து வந்தார்.

 

இருவரும் வெவ்வேறு சமூகத்தைச் சேர்ந்தவர்கள். பெரியோர்கள் சம்மதத்துடன் செப்டம்பர் 13ம் தேதி பெரியதாராவில் உள்ள கிறிஸ்தவ தேவாலயத்தில் இருவரும் திருமணம் செய்து கொண்டனர்.

 

இதையடுத்து தட்டார்மடம் அருகே கொம்மட்டிக்கோட்டையில் உள்ள சார் பதிவாளர் அலுவலகத்தில் திருமண சான்றிதழ் கோரி விண்ணப்பித்தனர். ஒரு மாதத்திற்கு மேலாகியும் சான்றிதழ் வழங்கப்படவில்லை.

இந்நிலையில் நேற்று ஜோஷி, கலைவாணன் இருவரும் கொம்மட்டிக்கோட்டை பதிவு அலுவலக வளாகத்தில் தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

 

உளவுத்துறை போலீசார் அங்கு விரைந்து வந்து காதல் ஜோடியை அழைத்து சமாதானம் செய்தனர். பதிவாளரிடம் அழைத்துச் சென்று சான்றிதழ் வழங்குமாறு அறிவுறுத்தினர். பின்னர் விரைவில் சான்றிதழ் வழங்க நடவடிக்கை எடுப்பதாக பதிவாளர் உறுதியளித்ததையடுத்து கலைந்து சென்றனர்.

Related posts

2024ல் கனடாவிற்குள் வர புதிய கட்டுப்பாடுகள்..!

nathan

கோவேக்ஸின்’ தடுப்பூசியால் 30% பேருக்கு உடல்நல கோளாறு

nathan

பணத்தை காந்தம் போல் ஈர்க்கும் ராசியினர்

nathan

அடேங்கப்பா! சிலம்பம் சுற்றி தமிழ் ரசிகர்களை மிரட்டும் மதுமிதா!

nathan

100க்கு 97 மார்க் எடுத்து கமலக்கனி பாட்டி அசத்தல் சாதனை!

nathan

வானில் பறந்த தமிழும் சரஸ்வதியும் சீரியல் கதாநாயகியின் புகைப்படங்கள்

nathan

பிரபல நடிகருடன் திருமண பார்ட்டியில் ஆட்டம்!! வீடியோ..

nathan

வேண்டுமென்றே மாராப்பை இறக்கி விட்ட DD..!

nathan

ஜோவிகா ஏன் அப்பா பெயரை பயன்படுத்தவில்லை?

nathan