25.6 C
Chennai
Sunday, Dec 15, 2024
11 green peas kurma 300
சைவம்

பட்டாணி குருமா

மதிய வேளையில் சாதத்துடன் குருமா வைத்து சாப்பிட்டால், அருமையாக இருக்கும். அதிலும் பட்டாணியை வைத்து சாப்பிட்டால், அதன் சுவைக்கு அளவே இல்லை. மேலும் அத்துடன் உருளைக்கிழங்கை சேர்த்து செய்தால், அனைவருமே இதை சுவைத்து சாப்பிடுவார்கள். சரி, இப்போது அந்த பட்டாணி குருமாவை எப்படி செய்வதென்று பார்ப்போமா!!!

தேவையான பொருட்கள்:
காய்ந்த பச்சை பட்டாணி – 1 கப் (நீரில் 5 மணிநேரம் ஊற வைத்தது) பட்டை – 1 இன்ச் கிராம்பு – 3 வெங்காயம் – 1 (நறுக்கியது) தக்காளி – 1 (நறுக்கியது) இஞ்சி பூண்டு விழுது – 1 1/2 டேபிள் ஸ்பூன் மிளகாய் தூள் – 1 டேபிள் ஸ்பூன் மல்லி தூள் – 1 டேபிள் ஸ்பூன் சோம்பு தூள் – 1/2 டீஸ்பூன் மஞ்சள் தூள் – 1/4 டீஸ்பூன் தேங்காய் பால் – 1/2 கப் உருளைக்கிழங்கு – 1 (வேக வைத்து தோலுரித்தது) எண்ணெய் – தேவையான அளவு உப்பு – தேவையான அளவு

செய்முறை:
குக்கரை அடுப்பில் வைத்து, அதில் ஊற வைத்துள்ள பட்டாணியைப் போட்டு, தேவையான அளவு உப்பு மற்றும் தண்ணீர் ஊற்றி, 1 விசில் விட்டு இறக்க வேண்டும்.

பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி, காய்ந்ததும், பட்டை, கிராம்பு போட்டு தாளித்து, பின் நறுக்கிய வெங்காயத்தை போட்டு பொன்னிறமாக வதக்க வேண்டும்.

பின்பு தக்காளி, இஞ்சி பூண்டு விழுது, மிளகாய் தூள், மல்லி தூள் மற்றும் மஞ்சள் தூள் சேர்த்து நன்கு வதக்க வேண்டும்.

அடுத்து வேக வைத்து தோலுரித்து நறுக்கிய உருளைக்கிழங்கை போட்டு, தண்ணீர் ஊற்றி, சிறிது நேரம் கொதிக்க விட வேண்டும்.

பிறகு அதில் வேக வைத்துள்ள பட்டாணியைப் போட்டு சிறிது நேரம் கொதிக்க விட வேண்டும்.

பின்னர் சோம்பு தூள் சேர்த்து கிளறி, தேங்காய் பாலை ஊற்றி, உப்பின் சுவை பார்த்து, வேண்டுமெனில் உப்பை போட்டு, 3 நிமிடம் கொதிக்க விட்டு இறக்க வேண்டும்.

இப்போது சுவையான பச்சை பட்டாணி குருமா ரெடி!!! இதனை சாதத்துடன் சாப்பிட்டால் அருமையாக இருக்கும்.
11 green peas kurma 300

Related posts

பொங்கல் ஸ்பெஷல்: கதம்ப சாம்பார்

nathan

மாங்காய் சாம்பார்

nathan

குதிரைவாலி கொத்தமல்லி சாதம்

nathan

சில்லி காளான்

nathan

ஐயங்கார் எள் சாதம் செய்வது எப்படி

nathan

முளைகட்டிய பயிறு அகத்திக்கீரை சுண்டல்

nathan

புளியோதரை

nathan

சுவையான தீயல் குழம்பு

nathan

சப்ஜி பிரியாணி

nathan