22 62086af9d95
ஆரோக்கிய உணவு

பச்சை மாங்காய் ஒரு துண்டு மதிய வேளையில் சாப்பிட்டால் என்ன நடக்கும் தெரியுமா?தெரிஞ்சிக்கங்க…

பச்சை மாங்காய் யாருக்கு தான் பிடிக்காது? பலருக்கும் மாங்காயைக் கண்டால் நாவில் இருந்து எச்சில் ஊறும். ஆனால் மாங்காய் சாப்பிட்டால் உடல் வெப்பம் அதிகரிக்கும், பருக்கள் வரும் என்று பலரும் அதை வாங்கி சாப்பிடமாட்டார்கள்.

ஆனால், மாங்காயில் ஏராளமான ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன என்பது உங்களுக்கு தெரியுமா?

மாங்காயில் பொட்டாசியம் அதிகம் உள்ளது. இது உடலில் எலக்ட்ரோலைட் அளவை பராமரிக்க உதவி, அதனால் இரத்த அழுத்தத்தைக் கட்டுப்பாட்டுடன் வைத்து, இதய நோயின் அபாயத்தில் இருந்து பாதுகாக்கும்.

பச்சை மாங்காயில் ஆவியாகக் கூடிய உட்பொருட்கள் மற்றும் நார்ச்சத்து உள்ளது. இது செரிமான திரவத்தின் உற்பத்தியைத் தூண்டி, செரிமான பிரச்னைகளில் இருந்து தடுத்து, செரிமான மண்டலத்தின் ஆரோக்கியத்தை மேம்படுத்தும்.

நெஞ்செரிச்சலால் அவஸ்தைப்பட்டு வந்தால், பச்சை மாங்காயை சாப்பிடுங்கள். அந்தப் பிரச்னையில் இருந்து உடனடி நிவாரணம் கிடைக்கும்.

பச்சை மாங்காயை மதிய வேளையில் ஒரு துண்டு சாப்பிட்டால், மதிய வேளையில் வரும் தூக்கத்தைத் தவிர்க்கலாம் என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.

பச்சை மாங்காய் கல்லீரல் சம்பந்தமான பிரச்னைகளைத் தடுக்கும். ஏனெனில் மாங்காய் பித்தநீரின் சுரப்பை அதிகரிக்கும் மற்றும் குடலை பாக்டீரியா தொற்றுக்களில் இருந்து பாதுகாக்கும்.

மாங்காயில் வைட்டமின் சி அதிகம் உள்ளது. அதிலும் மாங்காயை உட்கொண்டு வந்தால், இரத்த நாளங்களின் நெகிழ்வுத்தன்மை அதிகரிக்கும்.

மாங்காயில் உள்ள உட்பொருட்கள், சருமத் துளைகளில் எண்ணெய் மற்றும் அழுக்குகள் தேங்குவதைத் தடுக்கும்.

Related posts

பெண்களே தெரிஞ்சிக்கங்க…பிரசவத்திற்குப் பின் பெண்கள் தவறாமல் சாப்பிட வேண்டிய உணவுகள்!

nathan

உங்களுக்கு தெரியுமா இதய நோய், பக்கவாதத்தை தவிர்க்கும் முட்டை

nathan

முருங்கைக்கீரை சூப்

nathan

உடல்வலி நீக்கும் நாவல் பழச்சாறு பற்றி தெரியாத விடயங்கள்!

nathan

எந்த எண்ணைய் பாதுகாப்பானது?

nathan

உங்கள் கவனத்துக்கு உருளைக்கிழங்கை தோலுடன் சாப்பிடுவது நல்லதா?

nathan

தெரிஞ்சிக்கங்க…அதிக அளவில் வைட்டமின் சி அடங்கிய உணவுகள் எவை தெரியுமா?

nathan

இந்த எண்ணெய் ஆரோக்கியத்தை தருவதோடு, சருமம் நன்கு மென்மையாகவும் அழகாக பொலிவோடு இருக்கவும் உதவும்

sangika

இந்த காய்கறிகள் உண்மையில் வித்தியாசமான பக்க விளைவுகளை ஏற்படுத்துமாம் தெரியுமா?

nathan