நுங்கின் பலாபலன்கள் என்ன?படிக்கத் தவறாதீர்கள்..!
பூலோக கற்பக தரு என அழைக்கப்படுகிறது நாம் அனைவரும் அறிந்த பனைமரம் காரணம் பனைமரத்தின் அத்தனை பகுதிகளும் மனிதப்பயன் பாட்டுக்கு உகந்த வகையில் இருப்பது தான்.
நம்மைப் பாதுகாக்க இயற்கை தந்துள்ள வரப்பிரசாதம் பனைமரம். பனைவெல்லம், பனங்கற்கண்டு, பனங்கிழங்கு, மட்டை, ஓலை என பனையில் இருந்து கிடைக்கும் அனைத்துப் பொருட்களுமே மருத்துவ குணம் வாய்ந்தவை.
நுங்கின் பலாபலன்கள் என்ன?படிக்கத் தவறாதீர்கள்..!
இதில் பனைமரத்தின் முற்றாத பனங்காயை நுங்கு என அழைப்போம். நுங்கு மிகவும் சுவையான ஒரு பானம். நுங்குக்கு என ஒரு நுணுப்பமான பருவம் உள்ளது. இந்தப் பருவத்திலே நுங்கில் காணப்படும் வழுவழுப்பான, திரவநிலை கலந்த திண்ம விதையானது மிகவும் இனிப்பாகவும், உண்பதற்கு சுவையானதாகவும் இருக்கும். இந்தப் பருவம் தாண்டி சற்று முற்றி விட்டால் இதன் சுவை குன்றி விடும்னொன்னகோடையில் நம் உடலுக்குத் தேவையான நீர்ச்சத்துக்களை வாரி வழங்குகிறது நுங்கு.
B, C, இரும்புச்சத்து, கால்சியம், துத்தநாகம், சோடியம், மக்னீசியம், பொட்டாசியம், தயாமின், அஸ்கார்பிக் அமிலம் மற்றும் புரதம் போன்ற சத்துகள் அதிகம் காணப்படுகின்றன.
நொங்குக்குக் கொழுப்பைக் கட்டுப்படுத்தி, உடல் எடையைக் குறைக்கும் தன்மை அதிகம். உடல் எடையைக் குறைக்க நினைப்பவர்கள் உணவுக் கட்டுப்பாட்டுடன் நொங்கை அதிகம் சேர்த்துக் கொள்ளலாம்.
வயிற்றை நிரப்பி, பசியையும் தூண்டும். மலச்சிக்கல் மற்றும் வயிற்றுப் போக்கு இரண்டுக்குமே நொங்கு மருந்தாக இருப்பது அதிசயம் .நொங்கைச் சாப்பிட்டால் உடனடியாக நிவாரணம் கிடைக்கும். சிலருக்கு உடல் உஷ்ணம் காரணமாக எவ்வளவுதான் தண்ணீர் குடித்தாலும் தாகம் அடங்காது. அவர்கள் நொங்கைச் சாப்பிட்டால் தாகம் அடங்கிவிடும்.
நுங்கின் பலாபலன்கள் என்ன?படிக்கத் தவறாதீர்கள்..!
ரத்தசோகை உள்ளவர்கள் நொங்கைத் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் விரைந்து குணமாகி உடல் சுறுசுறுப்பாகும். நொங்கில் அந்த்யூசைன் எனும் ரசாயனம் இருப்பதால் பெண்களுக்கு மார்பகப் புற்றுநோய்க் கட்டிகள் வருவதைத் தடுக்கும். வெயில் காலத்தில் ஏற்படும் அம்மை நோய்கள் வருவதைத் தடுத்து உடலுக்கு நோய் எதிர்ப்பு சக்தியைத் தரும்.
நுங்கு 10-11% வெல்லத்தையும், 2% புரதத்தையும், கொண்டுள்ளது.நுங்கு சாப்பிட்டபின் மிகுதியாக இருக்கும் பகுதி கோம்பை என அழைக்கப்படும். இதனை சிறு துண்டுகளாக வெட்டி மாடுகளுக்கு உணவாகக் கொடுப்பார்கள். மொத்தத்தில் மனிதன் முதல் விலங்குகள் வரை இந்த நுங்கின் பயன்பாடுபரந்து பட்டதாக காணப்படுகிறது என்பது வெளிப்படை உண்மை.
* தகவலை பிறரும் அறிந்து கொள்ளும் வண்ணம் தயவுசெய்து அதிகமாகப் பகிருங்கள்…