26.2 C
Chennai
Saturday, Dec 21, 2024
19159
மருத்துவ குறிப்பு

நீங்கள் ஒற்றைத் தலைவலியால அவதிப்படறீங்களா?அப்ப இத படிங்க!

இன்றைக்கு நாம் காணவிருக்கும் வைத்தியம் “ஒற்றைத் தலைவலி”.

சிலருக்கு எங்கேயோ கேள்விப்பட்டது போலவும், சிலருக்கு அதை ஏன் நியாபகப்படுத்தினீர்கள் எனவும் தோன்றுகிறதா ??

அறிகுறிகள்

ஆம். உடல் உணர்வுகளில் மாற்றங்கள், தீவிரமான தலைவலி, குமட்டல் போன்ற அறிகுறிகளைக் கொண்ட நரம்பியல் தொடர்பான ஒரு நோயே இந்த “ஒற்றைத் தலைவலி”. ஆண்களை விட பெண்களை அதிகம் தாக்கும் இந்த நோய் பார்வைப் புலத்தில் மாற்றங்கள் (பிரகாசமான ஒளி, கறுப்புப் புள்ளிகள், “Z” வடிவங்கள் தெரிதல்), கழுத்து, தோள்மூட்டுப் பகுதியில் ஊசியால் குத்துவது போன்ற உணர்வு ஏற்படல், உடற் சமநிலை குழம்புதல், பேச்சில் தடுமாற்றம் ஏற்படல், மணம் நுகர முடியாமை போன்ற உணர்வு தொடர்பான மாற்றங்கள் போன்ற அறிகுறிகளோடு நம்மில் நுழைகிறது.

காரணிகள்

1. மனஅழுத்தம், கோபம், பதற்றம், அதிர்ச்சி போன்ற மனோவியல் காரணிகள்

2.களைப்பு, தூக்கமின்மை, அதிக நேர பயணம், மாதவிடாய் நிறுத்தம் போன்ற உடலியல் காரணிகள்

3. உணவின் அளவை அதிகம் கட்டுப்படுத்தல், உணவைக் குறித்த நேரத்தில் எடுக்காதிருத்தல், உடலில் நீரினளவு குறைதல், மதுபானம், காப்பி, தேநீர், சாக்கலேட், பால்கட்டி போன்ற உணவுக் காரணிகள்

4. பிரகாசமான ஒளி, புகைத்தல், அதிக சத்தம், காலநிலை மாற்றங்கள், தூய காற்றின்மை, மருந்துகள் (உ-ம்: கருத்தடை மாத்திரைகள், தூக்க மாத்திரைகள்) போன்ற சூழலியற் காரணிகள்

வைத்தியம்

ஒற்றைத் தலைவலியை பூரணமாகக் குணப்படுத்த முடியாது. ஆனால் மாத்திரைகள் மூலம் கட்டுப்படுத்த முடியும். ஆனால் அம் மாத்திரைகள் மருத்துவரின் ஆலோசனையுடன் பெறப்படல் வேண்டும்.

நீங்கள் ஓற்றைத் தலைவலி நோயாளியானால், அதைத் தூண்டும் காரணிகளை அனுபவத்தின் மூலம் கண்டறிந்து அவற்றைத் தவிர்ப்பதன் மூலம் நோய் தோன்றுவதைத் தவிர்த்துக் கொள்ளலாம்.

தலைவலி வந்துவிட்டால் சப்தமற்ற அமைதியான இடத்தில் ஓய்வெடுங்கள். ஒளி குறைவான அல்லது இருண்ட அறை நல்லது.

முடியுமானால் சற்று நேரம் தூங்குங்கள்.

உணவுகள்

இந்த தலைவலியை குறைக்கும் உணவுகளை சாப்பிட்டு, பின் சிறிது நேரம் ஓய்வான நிம்மதியான தூக்கத்தை மேற்கொண்டால், தலைவலியை சரிசெய்துவிடலாம். இப்போது அந்த ஒற்றைத் தலைவலியை போக்க எந்த உணவுகள் உதவுகிறது என்று பார்ப்போமா

1. மக்னீசியம் சத்துக்கள் அதிகமுள்ள கீரைகள்

2. ஒமேகா -3 , ஃபேட்டி ஆசிட் அதிகமுள்ள மீன் உணவுகள்

3. முழு தானியங்கள் மற்றும் திணை

4. உணவுகளில் இஞ்சி சேர்க்கை

5. பால், காஃபி , பிராக்கோலி மற்றும் ஆளி விதைகள்

கை வைத்தியம்

மருத்துவரை நாடி ஓடாமல் வீட்டில் கிடைக்கும் பொருட்களை கொண்டும் இதைத் தடுக்கலாம். அவை என்னவென்று பார்க்கலாம்.

1. எலுமிச்சைத் தோலை நன்கு காய வைத்து அரைத்து நெற்றியில் பற்றுப் போடுவது நல்ல பலனைத் தரும்.

2. குளிர்ந்த நீரை துண்டில் நனைத்து தலையிலும், கழுத்திலும் கட்டவும். பின் கைகளையும், கால்களையும் சுடுநீரில் விடவும். இந்த முறை, ஒற்றைத் தலைவலிக்கு நல்ல பலனைத் தரும்.

3.தூங்குவதற்கு முன் வெதுவெதுப்பான நீரால் தலையில் ஒத்தடம் தரலாம்.

உச்சந்தலை மசாஜ்

உங்களுடைய உச்சந்தலையில் மசாஜ் செய்வதே ஒற்றைத் தலைவலியைப் போக்க மிகவும் சிறந்த வழி. உங்களுக்கு மசாஜ் செய்துவிட மற்றொரு நபர் இருந்தால் ஒரு பிரச்சனையும் இல்லை. அவ்வாறு இல்லையெனில், நீங்களே செய்யக்கூடிய சில வழி முறைகளும் உள்ளன.

ஒரு அமைதியான அறையில் தனிமையில் அமர்ந்து கொண்டு உங்களுடைய உச்சந்தலையில், உங்களின் விரல்களைப் பயன்படுத்தி மெதுவாக மசாஜ் செய்திடுங்கள். குறைந்த அளவில் அழுத்தம் கொடுத்து சிறிய வட்டங்களாக மசாஜ் செய்திடுங்கள். உங்களுடைய முழு உச்சந்தலையையும் நீங்கள் இவ்வாறு மசாஜ் செய்யலாம். இது உங்களுடைய ஒற்றைத் தலைவலியை விரட்ட உதவலாம்

சூடான குளியல்

உங்களுடைய ஒற்றைத் தலைவலியை நீக்கும் மற்றொரு சிகிச்சையானது மிகவும் பழமையானது. நீங்கள் ஒரு சூடான குளியல் எடுத்துக் கொள்வது உங்களுக்கு புத்துணர்ச்சி தருவதுடன், உங்களுடைய ஒற்றைத் தலைவலியையும் ஓட ஓட விரட்டி விடும்.

லாவெண்டர் எண்ணெய்

நீங்கள் ஒரு பெண்ணாக இருந்தால், உங்களூடைய குளிக்கும் நீரில், லாவெண்டர் வாசனை எண்ணெயை சேர்ப்பது நல்ல பலன் தரும். சிறிது நேரம் நீரின் அருகே அமர்ந்து, நீரை நன்கு கலக்கி, லாவெண்டரின் வாசனையை நன்கு அனுபவியுங்கள். அது உங்களுடைய தலைவலிக்கு இதம் தரும். உங்களுக்கு வாசனை திரவியம் பிடிக்கவில்லை எனில், சூடான நீரில் கண்டிப்பாக குளிக்க முயற்சி செய்யுங்கள். அது கண்டிப்பாக உங்களூடைய தலைவலிக்கு இதம் தரும்.

ஐஸ் கட்டி ஒத்தடம்:

நாம் அனைவரும் முழங்கால் அல்லது முழங்கை காயத்திற்கு ஐஸ் கட்டி கொண்டு ஒத்தடம் கொடுத்திருப்போம். அதையே இப்பொழுது நாம் ஒற்றைத் தலைவலிக்கும் செய்து பார்க்கலாம். உங்களுக்கு ஒற்றைத் தலைவலி வரும் பொழுது ஐஸ் கட்டி கொண்டு மெதுவாக ஒத்தடம் கொடுங்கள். அது உங்களுடைய ஒற்றைத் தலைவலிக்கு கண்டிப்பாக நிவாரணம் தரும்.

மீண்டும் ஒரு புதிய பாட்டி வைத்தியத்துடன் உங்களைச் சந்திக்கும் வரை உங்களிடமிருந்து விடை பெறுவது உங்கள் அன்புப் பாட்டி .19159

Related posts

சிறுநீர் பரிசோதனை செய்யப் போகிறீர்களா?

nathan

உங்க வாய் கப்பு அடிக்குதா?.. அப்படீன்னா இந்த 9 மேட்டர்தான் காரணம் பாஸ்-தெரிஞ்சிக்கங்க…

nathan

ரெட்டை குழந்தை எப்படி உருவாகும்னு தெரியுமா?… தெரிஞ்சிக்கங்க…

nathan

சிறுநீர் பாதை நோய் தொற்றுகளை எதிர்த்து போராடும் உணவுகள்!!!

nathan

பெண்களின் மாதவிடாய் கோளாறுகளை போக்கும் கருஞ்சீரகம்

nathan

தீபாவளிக்கு பட்டாசு வெடிக்க பாதுகாப்பான வழிமுறைகள் மற்றும் முதலுதவி

nathan

தெரிந்துகொள்வோமா? எருக்கஞ் செடியின் மருத்துவ குணங்களும் அதன் பயன்களும்….!!

nathan

பெண்களின் உடல் பற்றிய சில ரகசியங்கள்

nathan

திருமணத்திற்கு முன்பே கர்ப்பமடையும் பெண்கள்

nathan