உப்பில்லா பண்டம் குப்பையிலே என்ற பழமொழி, உப்பின் அவசியத்தை உணர்த்துவதாக இருக்கிறது. ஆனால் அதே உப்பு அதிகமாக உட்கொண்டால், அதனால் ஏற்படும் ஆபத்தான விளைவுகளால் நமது உடலும் குப்பையில்தான் இருக்க நேரிடும்.
சிலர் சாப்பிடும் உணவுகபளில் அதிக உப்பு அதிகமாக சேர்த்து சுவைப்பர். சிலர் சிப்ஸ், ஊறுகாய் போன்ற அதிக உப்பு உள்ள உணவுகளை விடாது உண்பர். அதிக உப்பு, அதிக நீர் தேக்கத்தினை உடலில் உண்டாக்கும். இதன் விளைவு உடல் எடை கூடி பல ஆபத்தான நோய்களுக்கும் காணமாக இருக்கும். அதிக உப்பினை குறைத் தால் போதும் நமது ஆரோக்கியம் பெறும். இதனால் உப்பே இல்லாமல் சாப்பிடுவ தும் பெரும் தவறு. இது ஆபத்தான விளைவுகளை ஏற்படுத்தும். இங்கு குறிப்பிடப் படுவது சிப்ஸ், ஊறுகாய், அப்பளம் மற்றும் சாதத்தில் உப்பு போட்டு சமைப்பது இவ ற்றினைத் தவிருங்கள் என்பதுதான். கடைகளில் விற்கப்படும் உப்பு சேர்த்த உணவு வகைகளை முற்றிலும் தவிர்க்க வேண்டும்.