? காய்களில் தக்காளி என்பது மிக எளிதாகவும், விரைவாகவும் செரிமானமாகக்கூடியது. அவற்றை சமையலில் அதிகமாக பயன்படுத்துவதால் பல நன்மைகள் உண்டு.
? உடம்புக்கு ஆரோக்கியம் அளிக்கும் மூன்று விதமான புளிப்புகளும் தக்காளிப் பழத்தில் உள்ளது.
1) பாலிக் அமிலம்.
2) சிட்ரிக் அமிலம்.
3) பாஸ்பாரிக் அமிலம்.
இத்தகைய தக்காளியை நாம் உட்கொள்வதால் பலவிதமான நன்மைகள் நமக்குக் கிடைக்கின்றன.
? நன்மைகள்:
தக்காளி உடலில் சேரும் கிருமிகளைக் கொன்று அவை சுரக்கும் அமிலங்களைச் சக்தியற்றவையாக்குகிறது.
? இருதயம் சம்பந்தமான நோய்களுக்கு மிகவும் ஏற்றது.
? பலவீனம், சோம்பல் இவற்றை நீக்கிச் சுறுசுறுப்பைத் தருகிறது.
? மலச்சிக்கலை நீக்கவும் மற்ற உணவுப் பதார்த்தங்களை விடத் தக்காளியில் அதிக அளவில் மக்னீசியம் இருக்கிறது.
? தக்காளியிலுள்ள மக்னீசியம் எலும்புகளையும் பற்களையும் உறுதிப்படுத்துகிறது.
? இரும்பு, பாஸ்பரஸ், பொட்டாசியம், செம்பு சிறிது கால்சியம் ஆகியவையும் தக்காளியில் இருக்கின்றது.