27 C
Chennai
Thursday, Dec 19, 2024
22 623b
Other News

நித்தியானந்தா மீது பெண் பரபரப்பு புகார் -‘கைலாசாவில் பெண்களை துன்புறுத்தி பாலியல் வன்கொடுமை நடக்கிறது

பாலியல் புகார் குற்றச்சாட்டில் சிக்கிய நித்தியானந்தா சாமியார், இந்திய நாட்டை விட்டே ஓடி ஒளிந்தார்.

திடீரென்று சமூகவலைத்தளத்தில் தோன்றி நான் தனித்தீவில் ஒரு நாட்டையே உருவாக்கிவிட்டேன் என்றும், அந்நாட்டிற்கு கைலாசா என்று பெயர் வைக்கப்பட்டுள்ளதாகவும் கூறியது அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தினார். நித்தியானந்தா இருக்கும் இடத்தை யாராலையும் இதுவரை கண்டுபிடிக்க முடியவில்லை.

அது ரகசியமாகவே உள்ளது. அடிக்கடி நித்தியானந்தாவின் பிரசங்க வீடியோக்களை வெளியிட்டு வருகிறார்கள். அந்த வீடியோக்களில் அவர் ஆன்மீக சொற்பொழிகள் ஆற்றி வருவார்.

கைலாசா நாடு அமெரிக்காவின் கடல்பகுதியில் உள்ள ஏதே ஒரு தீவில் நித்யானந்தா உருவாக்கி இருக்கிறார் என்றும், இல்லை..

அவர் இந்தியாவிலேயே தான் இருந்து கொண்டு பேசுகிறார் என்றும் வதந்திகள் பரவின.

இந்நிலையில், கைலாச நாட்டில் தங்கியிருந்த சாரா லாண்டரி என்ற வெளிநாட்டுப் பெண் ஒருவர் நித்தியானந்தா மீது பரபரப்பு புகார் கொடுத்துள்ளார்.

பெங்களூருவில் உள்ள பிடதி போலீசாருக்கு இமெயில் மூலமாக இந்தப் புகாரை அனுப்பி இருக்கிறார்.

அந்த புகாரில், கைலாச நாட்டில் நித்தியானந்தாவும், அவரது சீடர்களும் அங்குள்ள பெண்களை அடித்து துன்புறுத்துகின்றனர்.

மேலும், பல பெண்களுக்கு பாலியல் வன்கொடுமை அளித்து வருகின்றனர். எனக்கும் பாலியல் தொந்தரவு நித்யானந்தா கொடுத்து வருகிறார் என்று தெரிவித்துள்ளார்.

இப்புகாரின் அடிப்படையில் போலீசார், இதுபோன்ற இ-மெயில் புகார்களை ஏற்றுக் கொள்ள முடியாது.நீங்கள் பயப்படாமல், இந்தியாவிற்கு சென்று அங்குள்ள காவல் நிலையத்தில் புகார் கொடுங்கள் என்று பதில் அனுப்பி உள்ளனர்.

 

Related posts

விஜய்யின் அரசியல் வருகை குறித்து பிரகாஷ்ராஜ் அதிரடி

nathan

இந்த 5 ராசிக்காரங்க உங்களுக்கு துரோகம் பண்ண மாட்டாங்களாம்!

nathan

சுக்கிரன் பெயர்ச்சி.. பணம், புகழ், அதிர்ஷ்டம்,

nathan

பிரியா பவானி ஷங்கருக்கு ரூட் போட்ட இயக்குனர்..!

nathan

டயர் இல்லாத கார்.. ஆன எப்படி ஓடுது?வீடியோ

nathan

அந்தரங்கப் பகுதியில் எண்ணெயை ஊற்றிய மனைவி…!

nathan

பூமிகாவின் பிறந்தநாள் கொண்டாட்டம்

nathan

2வது திருமணம் செய்து கொண்ட சின்னத்திரை நடிகை!

nathan

2035ஆம் ஆண்டுக்குள் செயற்கை சூரியனை அமைக்க சீனா முயற்சி

nathan