நாள் முழுவதும் நல்ல பலத்தோடு சுறுசுறுப்பாக இயங்க வேண்டுமெனில் ஆரோக்கியமான உணவுகளை சாப்பிட வேண்டியது அவசியம்.
நம்மால் சுறுசுறுப்பாக இயங்க முடியாமல் இருப்பதற்கு முதல் காரணம் ஹீமோகுளோபின் குறைவு தான்.
உடலின் பாகங்கள் சுறுசுறுப்பாக இயங்கமுடிவதில்லை, உடல் களைப்பு அடைகிறது, இதனால் களைப்பு நீங்கி பலம் கொடுக்கும் உணவுகளை உண்ண வேண்டும்.
பேரீச்சம்பழம்
பேரீச்சம்பழத்தில் இரும்புசத்து அதிகம் உள்ளது. எந்த காரணத்தினால் உடல் இளைத்து இருந்தாலும் பேரீச்சம்பழத்தை முறையாக உணவோடு சேர்த்து எடுத்துக்கொண்டால் மெலிந்த உடல் தேறும். களைப்பு நீங்கும், தாது விருத்தியும் பலமும் உண்டாகும்.
முருங்கை
முருங்கையை நறுக்கி மிளகு ரசத்தில் போட்டு கொதிக்க வைத்து உணவுடன் சேர்த்துச் சாப்பிட்டு வந்தால் கை கால்கள் உடல் அசதிகள் நீங்கும். உடலில் பலமும் ஏறும்.
உடலைத் தேற்றும் நல்ல உணவாகும்.
அருகம்புல்
அருகம்புல்லை வேரோடு பறித்து சுத்தம் செய்து சிறிது தண்ணீர் சேர்த்து அம்மியில் வைத்து மை போல அரைத்து சம அளவு வெண்ணெய் கலந்து காலை மாலை என நீண்ட நாட்கள் சாப்பிட்டு வர உடலில் பலம் ஏறும்.
வெந்தயக்கீரை
வெந்தயக்கீரையை அடிக்கடி சமைத்து சாப்பிடுவது நல்லது. உடலுக்கு பலத்தைக் கொடுக்கும். கண் சம்பந்தமான கோளாறுகள் நீங்கும். பார்வை தெளிவடையும். சொரி சிறங்கை அகற்றும் மேலும் அஜீரணத்தை போக்கும்.
வேப்பம்பூ
வேப்பம்பூ , நிலவேம்பு ஒரு அவின்ஸ், எடுத்து இரண்டையும் நன்றாக நசுக்கி அதில் 1 டம்ளர் கொதிக்கும் நீரை ஊற்றி வைத்துவிட்டு இரண்டு மணி நேரத்திற்கு பிறகு வடிகட்டி வேளைக்கு 2 அவுன்ஸ் வீதம் சாப்பிட்டு வர பலவீனங்களும் காய்ச்சலுக்கு பின் உண்டாகும் பலவீனங்களும் சரியாகிவிடும்.