நடிகை பிரியாமணி தமிழ் சினிமாவிற்கு கண்களால் கைது செய் என்ற திரைப்படம் மூலம் அறிமுகமானார், இப்படத்தை இயக்குனர் பாரதி இயக்கியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இப்படத்தை தொடர்ந்து அவர் நடிப்பில் கடந்த 2006 ஆம் ஆண்டு வெளியாகியிருந்த பருத்திவீரன் திரைப்படம் பெரிய வரவேற்பை பெற்றது. இப்படத்திற்காக நடிகை பிரியாமணி தேசிய விருதை தட்டி சென்றார்.
பின் தொடர்ந்து பிரியாமணி தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் நடித்து தென்னிந்தியளவில் மிகவும் பிரபலமான நடிகையாக மாறினார்.
மேலும் சென்சேஷன் ஏற்படுத்திய The Family Man என்ற சீரிஸிலும் பிரியாமணி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.
இந்நிலையில் அவரின் அறிமுக திரைப்படமான கண்களால் கைது செய் திரைப்படம் குறித்து தற்போது பேட்டி ஒன்றில் பேசியுள்ளார். அவர் கூறியதாவது “இயக்குனர் பாரதிராஜா இயக்கிய எனது அறிமுக திரைப்படத்தில் நடிக்க நான் ரொம்ப பயந்தேன்.
பாரதிராஜா முன்கோபகாரர், ரொம்ப சீக்கிரமே கோபமடைந்திடுவார் ஏன்னென்றால் அவரின் திரைப்படம் சரியாக இருக்க வேண்டும் என நினைப்பார்.
பெரிய நடிகைகளாக உள்ள ராதிகா, ராதா உள்ளிட்ட நடிகைகள் அவரிடம் அடிவாங்கியுள்ளார்கள், அவர் அடித்தால் அதிர்ஷ்டம் எனவும் கூறுவார்கள். ஆனால் நான் அடிவாங்க கூடாது என நினைத்தேன். அதிர்ஷ்டவசமாக என்னையும் அவர் அடித்துள்ளார்” என தெரிவித்துள்ளார்.