23.3 C
Chennai
Sunday, Dec 15, 2024
1 8ear pain
மருத்துவ குறிப்பு

தொிந்துகொள்ளுங்கள்! காதுகளில் ஏற்படும் வலியை நீக்குவதற்கான சில எளிய வீட்டு சிகிச்சைகள்!!!

காது வலி என்பது குழந்தைகளுக்கு மட்டுமல்லாது பெரியவர்களுக்கும் அது பெரிய தொந்தரவாக இருக்கும். அதனால் தான் குழந்தைகளுக்கு காது வலி ஏற்படும் போது உடனடி சிகிச்சைக்காக அவர்களை மருத்துவர்களிடம் அழைத்து வருவது வாடிக்கையான ஒன்றாக உள்ளது. பெரியவர்களை விட குழந்தைகளை தான் கிருமிகளும், சளியும் வேகமாக தாக்கும். அதே போல் குழந்தைகளுக்கு தான் நோய் எதிர்ப்பு சக்தி வளர்ச்சியானது அதிகரித்துக் கொண்டு இருக்கும். அதனால் குழந்தைகளுக்கு தான் பெரும்பாலும் காது வலி ஏற்படுகிறது.

காது வலி ஒரே சீராக, தொடர்ச்சியாக இருக்கும் அல்லது அதிகரிக்கலாம் அல்லது படிப்படியாக குறையலாம். இந்த வலி வலிமையாக இருக்கலாம், லேசாக இருக்கலாம், எரிச்சல் தன்மையுடன் இருக்கலாம் அல்லது துடிக்க வைக்கும் அளவிலும் இருக்கலாம். இந்த வலியை குறைக்க நாம் பல வீட்டு சிகிச்சைகளையே பின்பற்றலாம். நீங்கள் மருத்துவரை சந்தித்து அவர் சரியான மருந்தை பரிந்துரைக்கும் வரை வலி குறைந்து விடாது தானே! அதனால் அது வரை சிறந்த வீட்டு சிகிச்சைகளை நாம் பின்பற்றலாம். தொற்று அல்லது அழற்சி போன்ற பொதுவான அறிகுறிகளை நீக்கவும் இந்த எளிய வீட்டு சிகிச்சைகள் உதவும்.

வெதுவெதுப்பான ஒத்தடம்

வெதுவெதுப்பான ஒத்தடம் காது வலியை குறைக்க பெரிதும் உதவும்.

• அதன் வெப்பம் நிவாரணத்தை அளிக்கும்

• வீக்கம் இருந்தால் வற்றி விடும்

• சளியினால் ஏற்பட்டுள்ள காது வலி என்றால், அந்த வலியை குறைக்க உதவும்.

வீட்டிலேயே வலிக்கான மருந்துகளை வைத்திருத்தல்

உங்களால் உடனடியாக மருத்துவரிடம் செல்ல முடியாத போது, அதற்கேற்ப வழியும் அதிகமாக இருக்கும் போது, இதனை பின்பற்றுங்கள்.

• ஐப்ரூஃபன் எடுத்துக் கொள்ளுங்கள்.

• ஆஸ்பிரின் அல்லது அசிடாமினோபென் எடுத்துக் கொள்ளுங்கள்.

இருப்பினும் 18 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு இந்த மருந்துகளை கொடுக்கக்கூடாது. அவர்களுக்கு ஏதாவது ஒரு மருந்தை கொடுப்பதற்கு முன் மருத்துவரை சந்திப்பது சிறந்தது.

ஆலிவ் எண்ணெய்

வெதுவெதுப்பான ஆலிவ் எண்ணெய் காது வலிக்கு பெரிய மாயங்களை நிகழ்த்தும் என்பது அறியப்பட்ட ஒன்றே.

• ஆலிவ் எண்ணெயை லேசாக சூடாக்கவும்.

• குறுகிய வாயை கொண்ட ஒரு சுத்தமான குப்பியில் அதனை அடைக்கவும்.

• அதிலிருந்து சில சொட்டுக்களை பாதிக்கப்பட்ட காதில் ஊற்றவும்.

• உள்ளே சென்ற எண்ணெய் வெளியே வராமல் பார்த்துக் கொண்டால், அது அதன் வேலையை திறம்பட முடித்து விடும்.

மூக்கை சுத்தப்படுத்துங்கள்

உங்களுக்கு மூக்கடைப்பும் காது வழியும் சேர்ந்து இருந்தால், அது சளியினால் இருக்கலாம். மூக்கை சுத்தப்படுத்தினால், கீழ்கண்ட பயன்கள் கிடைக்கும்.

• சுவாச பாதையில் இடைஞ்சல் இல்லையென்றால் காதில் ஏற்பட்டுள்ள அழுத்தம் குறையும்.

• இது வலியை குறைக்க உதவும்.

வெங்காயத்தின் பயன்பாடு

அழற்சியில் இருந்து விடுபட நீங்கள் வெங்காயத்தை ஒரு பேஸ்ட்டாக பயன்படுத்தலாம். வீக்கத்தால் உங்களுக்கு காது வலி ஏற்பட்டிருந்தால்,

• வெங்காய பொடி மற்றும் தண்ணீரை கொண்டு பேஸ்ட் செய்யவும்.

• இந்த பேஸ்ட்டை காதின் வெளிப்பகுதிகளில் தடவினால் நிவாரணம் கிடைக்கும்.

பூண்டு மற்றும் முல்லைன் பூ

உங்களிடம் ஆலிவ் எண்ணெய் இல்லையென்றால் கீழ்கூறிய சேர்க்கையை பயன்படுத்தலாம்.

• பூண்டு எண்ணெய் மற்றும் முல்லைன் எண்ணெயின் கலவை

• நோய்களை உண்டாக்கும் நுண்ணுயிரிகளை எதிர்த்து போராடவும் அழற்சியை குறைக்கவும் இந்த கலவை உதவும்.

லாவெண்டர் எண்ணெய்

உங்களுக்கு வெளிப்புற காதுகளில் எரிச்சல் இருந்தால்,

• வெளிப்புற காதுகளில் லாவெண்டர் எண்ணெய்யை ஊற்றி மெதுவாக தடவவும்.

• இது மென்மையாக ஒத்தனம் கொடுப்பதை போல் இருக்கும். இதனை நாள் முழுவதும் செய்யலாம்.

காதை வேகமாக அசைப்பது

கீழ்கூறிய வகையில் காதை வேகமாக அசைத்தால், குழந்தைகளுக்கு சற்று நிவாரணியாக அது அமையும்:

• கொட்டாவி விடுதல் அல்லது காதை வேகமாக அசைத்தால், காது இணைப்புக் குழலில் உள்ள அழுத்தம் நீங்கும்.

• அழுத்தம் நீங்குவதால், தேங்கியிருந்த நீர் வெளியேறும்.

ஆவியும் யூகலிப்டஸ் தைலமும்

மூக்கு குழாய்கள் மற்றும் காதுகளில் சேர்ந்திருக்கும் நீரை வெளியேற்ற

• நீரை கொதிக்க வைத்து, அதில் கொஞ்சம் யூகலிப்டஸ் தைலத்தை ஊற்றுங்கள்.

• ஆவி பறக்கும் இந்த தண்ணீரை சுவாசித்து, அடைப்பட்டிருக்கும் நீரை இந்த எண்ணெய் வெளியேற்ற உதவும்.

வைட்டமின் உட்கொள்ளுதலை அதிகரித்தல்

சளியினால் காதில் வலி ஏற்படுத்தால், உங்களின் உணவில் இவைகளை சேர்த்துக் கொள்ள வேண்டும்.

• வைட்டமின் ஏ

• வைட்டமின் சி

• வைட்டமின் ஈ

இதன் விளைவுகள் மறைமுகமாக இருந்தாலும் கூட, உங்கள் நோய் எதிர்ப்பு சக்தியை இது வலுவடையச் செய்யும்.

தாடை பயிற்சிகள்

காதுகளின் வாயை திறப்பதற்கு கீழ்கூறிய எளிய படிகளை நீங்கள் பின்பற்றலாம்.

• மேலும் கீழுமாக தாடைகளை வேகமாக ஆட்டவும்.

• இதனை தினமும் செய்தால், அடைபட்டிருக்கும் காதின் வாய் திறந்து விடும்.

காதில் எதையும் திணிப்பதை தவிர்க்கவும்

காதில் கீழ்கூறிய எதையும் திணிக்க முயற்சி செய்யாதீர்கள்.

• கூர்மையான பொருட்கள்

• பஞ்சுருண்டை

• அழுக்கை நுழைய விடுதல்

உங்களுக்கு காதில் வலி உள்ளதா? அப்படி வலி இருந்து அதற்கு எப்படி தீர்வு காண்பது என தெரியவில்லையா? அப்படியானால் மேற்கூறிய எளிய சிகிச்சைகளைப் பின்பற்றலாம்.

Related posts

இதோ சில எளிய வழிகள்! இயற்கையான முறையில் தொப்பையைக் குறைக்க வேண்டுமா?

nathan

நீங்கள் இத காதில் வைத்து கொள்வதால் இவ்வளவு நன்மைகளா??

nathan

உங்களுக்கு தெரியுமா ஆண்களையும் அச்சுறுத்தும் ‘மார்பகப் புற்றுநோய்’..!!

nathan

திருமண வாழ்க்கையை குழப்பும் உறவுகளின் தலையீடு -தெரிந்துகொள்வோமா?

nathan

10 நாட்களில் குடலில் உள்ள நச்சை முழுமையாக வெளியேற்ற வேண்டுமா? அப்ப இத படிங்க…

nathan

உங்களுக்கு தெரியுமா வாய்விட்டு சிரிப்பதால் கிடைக்கும் ஆரோக்கிய நன்மைகள்!!!

nathan

அலட்சியமா இருக்காதீங்க…! இந்த அறிகுறிகள் உணவுக்குழாய் புற்றுநோயின் ஆரம்ப நிலையாக இருக்கலாமாம்…

nathan

கர்ப்பமாக முயற்சிக்கும் முன் பெண்கள் இந்த சோதனைகளை கண்டிப்பாக செய்யணும்…

nathan

சுவையின்மைக்கான சித்த மருந்துகள்

nathan