தொடர்ந்து பல ஆண்டுகளாக ஆசியாவின் கவர்ச்சியான பெண், இந்தியாவின் கவர்ச்சியான பெண் என்ற பெயரை தக்கவைத்துக் கொள்வது என்பது அவ்வளவு சுலபமான காரியம் அல்ல. ஆனால், கத்ரீனா கைப்க்கு இது கைவந்த கலை. ஒன்று, இரண்டல்ல பல ஆண்டுகள் அவர் தொடர்ந்து இந்த பெயரை தக்கவைத்திருந்தார்.
இன்றளவும் கத்ரீனா கைப் தன் கொடியிடை அழகில் சிறிதளவும் கொழுப்பும் சேராமல் சிக்கென்று இருக்க காரணம் அவர் பின்பற்றி வரும் டயட்டும், ஃபிட்னஸ் பயிற்சிகளும் தான். எத்தனை பிசியாக இருந்தாலும் தினமும் யோகா செய்வதையும், உணவில் கவனமாக இருப்பதையும் கத்ரீனா சீராக கடைபிடித்து வருகிறார்.
அதிகாலை!
அதிகாலை எழுந்ததும் நான்கு டம்ளர் தண்ணீர் பருகுவதை வழக்கமாக வைத்திருக்கிறார் கத்ரீனா கைப்.
காலை உணவு!
காலை உணவில் கத்ரீனா, தானியங்கள், ஓட்ஸ், மாதுளை ஜூஸ் மற்றும் வெண்புரதம் / வெள்ளை முட்டை போன்றவற்றை சேர்த்துக் கொள்கிறார்.
மதிய உணவு
பருப்பு வகைகள், பச்சை காய்கறி சாலட் மற்றும் சிறிதளவு சாதம் எடுத்துக் கொள்கிறார் கத்ரீனா. மேலும், மதிய வேளைகளில் வறுத்த உணவுகளை கத்ரீனா முற்றிலுமாக தவிர்த்து விடுகிறார். கொழுப்பு குறைவான உணவுகளை மட்டுமே சேர்த்துக் கொள்கிறார்.
இரவு உணவு
உறங்குவதற்கு இரண்டு மணி நேரத்திற்கு முன்பாகவே இரவு உணவை எடுத்துக் கொள்ளும் பழக்கத்தை பின்பற்றி வருகிறார் கத்ரீனா. இரவு உணவாக காய்கறி சூப், பருப்பு, சப்பாத்தி, வேகவைத்த காய்கறிகள் போன்றவற்றை எடுத்துக் கொள்கிறார்.
சல்சா!
கத்ரீனா கைப் சல்சா நடனம் என்றால் மிகவும் பிரியம். இதை அவர் கற்று தேர்ந்தவரும் கூட. அவரது கொடியிடை அழகிற்கு சல்சாவும் ஓர் முக்கிய காரணம் ஆகும்.
யோகா!
கத்ரீனாவுக்கு யோகா செய்வதில் மிகுந்த ஈடுபாடு உண்டு. மனதை அமைதியாக வைத்துக் கொள்ளவும், உடல் வடிவை பேணிக்காக்கவும் கத்ரீனா தவறாமல் யோகா செய்கிறார்.
ஸ்விம்மிங்
இது சல்மான் கான் சொல்லிக் கொடுத்த பயிற்சி! ஸ்லிம்மான உடல் வாகை வைத்துக் கொள்ள ஸ்விம்மிங் மற்றும் சைக்ளிங் செய்ய கூறி சல்மான்கான் அறிவுரைப்பாராம். மேலும், சல்மான் கானுக்கும் சைக்ளிங் பிடித்தமான பயிற்சி. மேலும், இது உடலை கட்டுக்கோப்பாக வைத்துக்கொள்ள சிறந்த பயிற்சியும் கூட.
ஜாக்கிங்!
தினமும் ஜாக்கிங் பயிற்சியை தவறாமல் செய்கிறார் கத்ரீனா கைப். இது இலகுவாக உணர உதவுகிறது என கத்ரீனா கருதுகிறார். இதனால் ஜிம் பயிற்சிகளில் எளிதாக ஈடுபட முடியும் எனவும் கூறுகிறார்.
ஜிம்
பிசியாக நடித்து வருவதால் அன்றாடம் இவரால் ஜிம் செல்ல முடிவதில்லை. ஆயினும், தனியாக தனக்கென ட்ரைனர் வைத்துக் கொண்டு வாரத்திற்கு மூன்று முறை பயிற்சிகளில் ஈடுபடுகிறார் கத்ரீனா.