தொண்டை நோய்கள், கபநோயை குணமாக்கும் தன்மை கொண்டது சித்தரத்தை தேநீர். இதை எப்படி செய்வது என்று பார்க்கலாம்.
தொண்டை நோய்களை குணமாக்கும் சித்தரத்தை தேநீர்
தேவையான பொருட்கள் :
(நான்கு பேர் பருகுவதற்குரியது)
சித்தரத்தை – 10 கிராம்
பனங்கற்கண்டு – 2 தேக்கரண்டி
தண்ணீர் – 500 மி.லி.
செய்முறை :
* சித்தரத்தையை இடித்து, நீரில் கொதிக்கவைத்து வடிகட்டி பனங்கற்கண்டு கலந்து பருகவேண்டும்.
* 150 மி.லி. அளவுக்கு பருகினால் தொண்டை நோய்கள், கபநோய்கள் அஷீரணம், மூட்டுவலி, தசைபிடிப்பு, சீதோஷ்ண நிலை மாற்றத்தால் உண்டாகக்கூடிய காய்ச்சல் போன்றவை கட்டுப்படும்.
* இது மழைக்காலத்திற்கு மிகவும் ஏற்றது.