எல்லா வயதினருக்கும் வரக்கூடியது தேமல். தேமல் ஏன் வருகிறது என்று யாருக்கும் தெரிவதில்லை. இது ஒரு வகை தோல் நோயாகும். இதில் வெள்ளைத்தேமல், கருந்தேமல், ரத்த தேமல், சொறித்தேமல் புள்ளி மற்றும் படர் தேமல், காளான் வகை தேமல் என பல வகை தேமல்கள் உள்ளன.
சருமத்தை சுத்தமாக பராமரிக்காமல் இருப்பதே, பலருக்கு தேமல் வரக் காரணமாகிறது. மார்க்கெட்டில் எந்த சோப்பு, ஷாம்பூ புதிதாக அறிமுகம் ஆனாலும், அதை உடனே வாங்கி பயன்படுத்துவோர் உள்ளனர். அந்த மாதிரி நபர்களுக்கு, தேமல் வருவதை தடுக்கவே முடியாது.
இன்றைக்கு, 90 சதவீதம் பேர் உடம்பில் எண்ணெய் தேய்ப்பதில்லை. படுக்கும் முன் அல்லது குளித்து முடித்த பின், உடம்பில் தேங்காய் எண்ணெய் தேய்க்கும் பழக்கம் இருக்க வேண்டும். தோல் வறண்டு போனால், வெடிப்பும் ஏற்படும். தேமல் வர உடல் சூடும் ஒரு காரணம். வாரத்தில் ஒரு நாள் தலைக்கு நல்லெண்ணெய் தேய்த்து குளிப்பது நல்லது.
உடம்பில் தேமல் அதிகம் இருப்பவர்கள், வெள்ளைப்பூண்டுடன் வெற்றிலை சேர்த்து, மசிய அரைத்து தினமும் தோலில் தேய்த்து, குளித்து வந்தால், தேமல் இருந்த இடம் தெரியாமல் போய்விடும். இதுதான் பக்கவிளைவு இல்லாத எளிய மருந்து.
Related posts
Click to comment