பொதுவாக தேன் மருத்துவ குணம் வாய்ந்த ஓர் அற்புத பொருள். அந்த தேனில் எண்ணற்ற சத்துக்கள் அடங்கியுள்ளது. குறிப்பாக தேனில் ஆன்டி-பாக்டீரியல் மற்றும் பூஞ்சை எதிர்ப்பு பொருள் அதிகம் உள்ளது. இதனால் தான் பல நூற்றாண்டுகளாக ஆரோக்கிய பிரச்சனைகளுக்கு சிகிச்சையளிக்கப் பயன்படுத்தப்பட்டு வருகிறது.
மேலும் இது ஓர் இயற்கை சுவையூட்டி என்பதால், சர்க்கரைக்கு பதிலாக இவற்றை உணவுப் பொருட்களில் கலந்து உட்கொண்டு வந்தால், உடல் ஆரோக்கியம் மேம்படும். குறிப்பாக தேனை ஒருசில பொருளுடன் கலந்து குடித்து வருவதால், உடலின் பல பிரச்சனைகள் குணமாகும்.
இங்கு தேனை எதனுடன் சேர்த்து உட்கொண்டால் என்ன பலன் கிடைக்கும் என்று தெளிவாக கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து அவற்றை பின்பற்றி பலன் பெறுங்கள்.
பாலுடன் தேன் இரவில் படுக்கும் முன் பாலுடன் தேன் கலந்து சாப்பிட்டால், நல்ல தூக்கம் வருவதோடு, இதயமும் பலம் பெறும்.
பழச்சாறுடன் தேன் பழங்களை ஜூஸ் போட்டு குடிக்கும் போது, அத்துடன் தேன் கலந்து குடித்தால், உடலின் சக்தி அதிகரிக்கும்.
எலுமிச்சையுடன் தேன் எலுமிச்சை சாற்றுடன் தேன் கலந்து குடித்து வர, இருமல் பிரச்சனை நீங்கும்.
மாதுளையுடன் தேன் மாதுளையை ஜூஸ் போட்டு குடிக்கும் போது, அத்துடன் தேன் கலந்து குடித்து வர, உடலில் ரத்தத்தின் அளவு அதிகரிக்கும்.
சுடுநீருடன் தேன் தேனை சுடுநீருடன் கலந்து சாப்பிட்டால், ஆஸ்துமாவில் இருந்து நிவாரணம் கிடைக்கும்.
இஞ்சியுடன் தேன் இஞ்சி சாற்றுடன் தேன் கலந்து குடித்தால், உடலில் உள்ள பித்தம் நீங்கும்.
ரோஜாப்பூவுடன் தேன் ரோஜாப்பூவை தேனில் ஊற வைத்து சாப்பிட்டால், உடலில் உள்ள அதிகப்படியான சூடு குறையும்.
நெல்லிக்காய் சாறுடன் தேன் நீரிழிவு நோயாளிகள் நெல்லிக்காய் சாற்றில் தேன் கலந்து குடித்து வர, இன்சுலின் சுரப்பு அதிகமாகும்.
தேங்காய் பாலுடன் தேன் தேங்காய் பாலுடன் தேன் கலந்து குடித்தால், குடல் புண் மற்றும் வாய்ப்புண் குணமாகும்.
கேரட் சாற்றுடன் தேன் கேரட் சாற்றுடன் தேன் கலந்து சாப்பிட, இரத்த சோகை பிரச்சனை நீங்கும்.
ஆரஞ்சு பழச்சாற்றுடன் தேன் ஆரஞ்சு பழச்சாற்றுடன சேர்த்து கலந்து குடித்து வர, இரவில் நல்ல நிம்மதியான தூக்கத்தைப் பெற முடியும்.