இன்றைய ஆரோக்கியமற்ற வாழ்க்கை முறையினால் இளமையிலேயே முதுமைத் தோற்றத்தைப் பெற்றுவிடுகின்றோம். ஃபேஷன் என்று தற்போது உண்ணும் உணவில் கூட ஃபேஷனை பின்பற்ற ஆரம்பித்துவிட்டோம். இப்படி ஆரோக்கியமற்ற உணவுகளை உண்பதால், உடல் ஆரோக்கியம் பாதிக்கப்படுவதோடு, உடலில் பல குறைபாடுகள் ஏற்பட்டு, வயதான தோற்றத்தை பெற நேரிடுகிறது.
இங்கு அப்படி இளமையிலேயே வயதான தோற்றத்தைப் பெற வழிவகுக்கும் உணவுகள் பட்டியலிடப்பட்டுள்ளன. இந்த உணவுகளை ஒருநாள் சாப்பிடுவதால் எவ்வித பாதிப்பும் இருக்காது. ஆனால் இதனை அன்றாடம் நீண்ட நாட்கள் உட்கொண்டு வர, உடலில் மெதுவாக மாற்றங்களை ஏற்படுத்தி, முதுமை தோற்றத்தை விரைவில் வர வழி செய்துவிடுகிறது. அதுமட்டுமின்றி, இந்த உணவுகள் அனைத்தும் சருமம், பற்கள் போன்றவற்றிற்கு பாதிப்பை ஏற்படுத்துவதோடு, கொழுப்புக்கள் அதிகம் இருப்பதால், ஆரோக்கியத்தையும் கெடுக்கிறது. சரி, இப்போது அந்த உணவுகள் என்னவென்று பார்ப்போமா!!!
சர்க்கரை
சர்க்கரை சாப்பிட சுவையாகத் தான் இருக்கும். ஆனால் இதனை எவ்வளவுக்கு எவ்வளவு எடுத்துக் கொள்கிறோமோ, அவ்வளவுக்கு அவ்வளவு அது உங்களை வயதானவராக வெளிக்காட்டும். எனவே நீங்கள் இளமையுடன் நீண்ட நாட்கள் காணப்பட வேண்டுமானால், சர்க்கரை கலந்த உணவை அளவாக உட்கொள்ளுங்கள். முடிந்தால், சர்க்கரையை தவிர்த்திடுங்கள்.
ஆல்கஹால்
ஆல்கஹால் குடிப்பது மிகவும் ஆபத்தானது. அதே சமயம் இதனைப் பருகினால், விரைவில் முதுமைத் தோற்றத்தைப் பெற நேரிடும். எனவே நீங்கள் பிட்டாக, ஆரோக்கியமாக மற்றும் இளமையாக இருக்க நினைத்தால், ஆல்கஹால் குடிப்பதை தவிர்த்திடுங்கள்.
உப்பு
என்ன தான் உப்பு உணவின் சுவையை அதிகரித்து கொடுத்தாலும், இதனை அதிகம் சேர்த்து வந்தால், அதுவும் முதுமைத் தோற்றத்தை வேகப்படுத்தும். எனவே உணவில் உப்பை முடிந்த அளவில் குறைத்துக் கொள்ளுங்கள்.
செயற்கை இனிப்புகள்
செயற்கை இனிப்புக்களும் மிகவும் ஆபத்தானது. அதே சமயம் சமீபத்திய ஆய்வு ஒன்றில் செயற்கை இனிப்புக்களை உட்கொண்டு வந்தால், அது முதுமைத் தோற்றத்தை விரைவில் பெற வழிவகுக்கும் என்று நிரூபிக்கப்பட்டுள்ளது. எனவே செயற்கை இனிப்புக்கள் கலந்த உணவைத் தவிர்த்திடுங்கள்.
சாச்சுரேட்டட் கொழுப்புக்கள்
சாச்சுரேட்டட் கொழுப்புக்கள் உடல் ஆரோக்கியத்திற்கு பெரும் தீங்கு விளைவிக்கக்கூடியவை. அத்தகையவற்றை அதிக அளவில் உட்கொண்டு வந்தால், அது உடலுக்கு ஆபத்தை விளைவிப்பதோடு, வயதான தோற்றத்தையும் விரைவில் வெளிப்பட வழிவகுக்கும்.
சோடா
தாகத்தோடு இருக்கும் போது தண்ணீர் குடிப்பது தான் நல்லது. ஆனால் பலரோ தண்ணீருக்கு பதிலாக கார்போனேட்டட் சோடாக்களை வாங்கிக் குடிப்பார்கள். இப்படி சோடா பானங்களை அதிகம் குடித்து வந்தால், அதுவும் முதுமைத் தோற்றத்தைத் தரும்.
ஃபாஸ்ட் புட்
ஃபாஸ்ட் புட் உணவுகள் நாவிற்கு மட்டும் தான் சுவை தரக்கூடியவாறு தயாரிக்கப்படுகிறது. இவற்றை எப்போதாவது சாப்பிட்டு வந்தால், எவ்வித ஆபத்தும் இல்லை. ஆனால் அது அளவுக்கு அதிகமானால், அதுவே பெரும் ஆபத்தையும், முதுமைத் தோற்றத்தையும் ஏற்படுத்தும்.
ப்ளாக் டீ
ப்ளாக் டீ குடிக்கும் அளவை குறைத்துக் கொள்வது நல்லது. ஒரு நாளைக்கு ஒரு முறை ப்ளாக் டீ குடிக்கலாம். ஆனால் அளவுக்கு அதிகமானால், அது வயதானர் போன்ற தோற்றத்தைக் கொடுக்கும்.
காப்ஃபைன்
காப்ஃபைன் நிறைந்த பானங்களை அளவாக குடித்து வந்தால், இளமையுடன் காணப்படலாம். ஆனால் அதுவே அதிகமானால், முதுமைத் தோற்றத்தைத் தான் பெற வேண்டும்.
பதப்படுத்தப்பட்ட உணவுகள்
பதப்படுத்தப்பட்ட உணவுகளை உட்கொண்டு வந்தாலும், முதுமைத் தோற்றத்தைப் பெறக்கூடும். ஏனெனில் பதப்படுத்தப்பட்ட உணவுகளில் சேர்க்கப்பட்டுள்ள கெமிக்கல்கள் உடலை தாக்கி, உடல் பருமன் மற்றும் இதர பிரச்சனைகளை ஏற்படுத்தும். இப்படி உடல் பருமனடைந்தால், அது தானாக முதுமைத் தோற்றத்தைக் கொடுக்கும்.