23.3 C
Chennai
Sunday, Dec 15, 2024
colon 1518
மருத்துவ குறிப்பு

தெரிஞ்சிக்கங்க… மாதம் ஒருமுறை இந்த டயட்டை ஃபாலோ பண்ணுனா, குடல் எப்பவும் சுத்தமா இருக்கும் தெரியுமா?

ஒருவருக்கு குடல் ஆரோக்கியம் என்பது மிகவும் முக்கியம். இத்தகைய குடல் ஒட்டுண்ணிகளால் எளிதில் பாதிக்கப்படக்கூடியது. அதில் குடல் சுவர் பகுதிளில் தான் ஒட்டுண்ணிகள் வாழ்ந்து கொண்டிருக்கும். இந்த ஒட்டுண்ணிகள் சருமத்தின் வழியே எளிதில் உடலினுள் நுழைந்து, உள்ளுறுப்புக்களை பாதிப்படையச் செய்கிறது. மேலும் இந்த ஒட்டுண்ணிகள் இருவேறு வழிகளின் மூலமும் உடலினுள் நுழைகிறது. அவையாவன:

* அசுத்தமான குடிநீர்

* சரியாக வேக வைக்கப்படாத இறைச்சி

ஒருவரது வயிற்றிள் ஒட்டுண்ணிகள் இருக்கும் வரை, அவர்கள் ஆரோக்கியமானவராக இருக்க முடியாது. எனவே சிறுகுடல், பெருங்குடல் போன்ற அனைத்தையும் சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டியது மிகவும் அவசியம். செரிமான மண்டலத்தின் ஒரு பகுதி தான் பெருங்குடல். இது உணவில் உள்ள நீர், வைட்டமின்கள், உப்பு மற்றும் இதர ஊட்டச்சத்துக்களை உறிஞ்சுவதற்கு உதவுகிறது. அதன் பின் செரிமானமாகாத உணவை சிறுகுடலில் செரிக்கச் செய்து, திடக்கழிவை வெளியேற்றும்.

ஆனால் நம் உடலில் பல நேரங்களில் குடல் சரியாக செயல்படுவதில்லை. எப்போது பெருங்குடல் சரியாக செயல்படுவதில்லையோ, அப்போது அது அனைத்து டாக்ஸின்களையும் வெளியேற்றுவதற்கு பதிலாக உறிஞ்ச செய்கிறது. இதன் விளைவாக சில ஆரோக்கிய பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். அதில் மலச்சிக்கல், வயிற்று உப்புசம், தலைவலி, உடல் பருமன், வாய்வுத் தொல்லை, சோர்வு, குறைவான உடல் ஆற்றல் போன்றவை குறிப்பிடத்தக்கவை.

இந்த பிரச்சனைகள் அனைத்து செரிமானமாகாமல் உணவுகள் வயிற்றில் இருக்கும் போது ஏற்படக்கூடியவையாகும். அதாவது எப்போது ஒருவர் பதப்படுத்தப்பட்ட உணவுகள், கெமிக்கல் கலந்த உணவுகளை அதிகம் சாப்பிடுகிறோமோ, அப்போது அந்த உணவுகள் செரிமானமாகாமல் இருக்கும்.

இத்தகைய உணவுகள் பெருங்குடலில் சளியை உருவாக்கி, அதிகளவிலான டாக்ஸின்களையும் உற்பத்தி செய்யும். அதன் விளைவாக உடலின் இதர உறுப்புக்களிலும் டாக்ஸின்கள் தேங்கி, அந்த உறுப்புக்களின் செயல்பாடும் பாதிக்கப்பட்டு, பல்வேறு தீவிர பிரச்சனைகளால் அவஸ்தைப்படக்கூடும்.

எனவே இத்தகைய பிரச்சனைகளை எதுவும் வராமல் இருப்பதற்கு ஒருவர் மாதத்திற்கு ஒருமுறையாவது குடலை சுத்தம் செய்யும் முயற்சியில் ஈடுபட வேண்டும். அதிலும் கீழே கொடுக்கப்பட்டுள்ள 7 நாள் டயட் திட்டத்தை ஒருவர் மாதத்திற்கு ஒருமுறை மேற்கொண்டால், குடல் சுத்தமாகவும், ஆரோக்கியமாகவும் செயல்பட்டு, ஒட்டுமொத்த உடல் ஆரோக்கியமும் மேம்படும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
குடலில் டாக்ஸின்கள் இருந்தால் வெளிப்படும் அறிகுறிகள்!
குடலில் டாக்ஸின்கள் இருந்தால் வெளிப்படும் அறிகுறிகள்!
* செரிமான பிரச்சனைகளான வயிற்றுப் போக்கு, மலச்சிக்கல்

* தசை மற்றும் மூட்டு வலி

* மனக் கவலை, சோர்வு, மோசமான நினைவாற்றல், மனநிலையில் ஏற்றஇறக்கம், மன இறுக்கம்

* சிறுநீர்ப்பையில் தொற்றுக்கள்

* சரும அரிப்பு

* வயிற்று வலி

* அசிடிட்டி மற்றும் வயிற்று உப்புசம்

* அடிக்கடி உடல்நல குறைவு ஏற்படுதல்

* மோசமான நோயெதிர்ப்பு சக்தி

குடலை சுத்தம் செய்யும் போது சாப்பிட வேண்டிய உணவுகள்!
குடலை சுத்தம் செய்யும் போது சாப்பிட வேண்டிய உணவுகள்!
குடலில் நச்சுக்கள் சேராமல் இருக்க வேண்டுமானால், வைட்டமின் டி, நார்ச்சத்து, ஃபோலேட் (வைட்டமின் பி) நிறைந்த உணவுகளை உட்கொள்ள வேண்டும். இந்த சத்துக்கள் ப்ராக்கோலி, பீட்ரூட், பசலைக்கீரை, சிவப்பு மற்றும் பச்சை ஆப்பிள், பெர்ரிப் பழங்கள், அவகேடோ, ஆளி விதைகள், செலரி விதைகள், கிரேப்ஃபுரூட், கேல் கீரை, ஓட்ஸ், பருப்பு வகைகள், கற்றாழை, எலுமிச்சை, பழச்சாறுகள், பச்சை இலைக் காய்கறிகள், பூண்டு, க்ரீன் டீ போன்றவற்றில் அதிகம் உள்ளது.

குடலை சுத்தம் செய்யும் போது சாப்பிடக்கூடாத உணவுகள்!

குடலை சுத்தம் செய்யும் போது சாப்பிடக்கூடாத உணவுகள்!
ஒருவர் குடலை சுத்தம் செய்யும் முயற்சியில் இறங்கும் போது சீஸ், வெண்ணெய், காட்டேஜ் சீஸ், அனைத்து வகையான இறைச்சிகள், மது, சிகரெட், கேக், பாஸ்ட்ரீஸ், பிஸ்கட், பிரட், சர்க்கரை, ஐஸ் க்ரீம், புளித்த க்ரீம், மயோனைஸ், முட்டைகள், சாலட் ட்ரெஸிங், சாக்லேட், கெட்சப், காபி, குளிர் பானங்கள் அல்லது எனர்ஜி பானங்கள் போன்றவற்றை சாப்பிடக்கூடாது.

குறிப்பு

கீழே கொடுக்கப்பட்டுள்ள 7 நாள் டயட் திட்டம் முழுமையாக பழம் மற்றும் தாவர வகை டயட் ஆகும். இந்த டயட்டினால் உடலின் ஆற்றல் குறைவாக இருப்பது போன்று உணரலாம். இந்த டயட் திட்டத்தில் நீர் அதிகம் குடிக்க வேண்டும், சாலட், சூம், பழங்கள் அல்லது காய்கறி ஜூஸ்களை 2 மணிநேரத்திற்கு ஒருமுறை எடுக்க வேண்டியது அவசியம். ஆனால் வயிறு முழுமையாக நிரம்பும் வரை அதிகமாக சாப்பிடக்கூடாது. எப்போதுமே அளவாக, வயிறு முற்றிலும் நிரம்பாதவாறு இருக்குமாறு தான் சாப்பிட வேண்டும்.

 

நாள் #1
உப்பு நீரால் ஆரம்பிக்கவும்

குடலை சுத்தம் செய்யும் டயட் திட்டத்தை ஆரம்பிக்கும் முன், 1/4 கப் வெதுவெதுப்பான நீரில் 2 டேபிள் ஸ்பூன் தூய்மையாக்கப்படாத கடல் உப்பு சேர்த்து கலந்து, காலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில் குடிக்க வேண்டும். இந்த பானம் சுவையாக இருக்காது தான். வேண்டுமானால், இத்துடன் எலுமிச்சை சாற்றினை சேர்த்து கலந்து குடிக்கலாம்.

இந்த உப்பு நீரைக் குடித்த பின், 1 மணிநேரம் கழித்து தான் எதையும் சாப்பிட வேண்டும். முக்கியமாக இந்த உப்பு நீரைக் குடித்த பின் தலைவலி, குமட்டல் போன்ற பிரச்சனைகளை சந்திக்க நேரலாம். இதற்கு காரணம் உப்பு நீர் குடலில் உள்ள டாக்ஸின்களை அனைத்தையும் வெளியேற்ற ஆரம்பிப்பது தான். இதன் விளைவாக 1-2 மணிநேரத்திற்கு அடிக்கடி சிறுநீர் கழிக்க வேண்டியிருக்கும்.

காலை உணவு

விருப்பத்தேர்வு 1 : 1 கப் ஸ்ட்ராபெர்ரி + 1 ஆப்பிள் + 1 கப் மூலிகை டீ + 1 டேபிள் ஸ்பூன் ஊற வைத்த பாதாம்.

விருப்பத்தேர்வு 2 : 1 டம்ளர் நற்பதமான காய்கறி ஜூஸ் + 1 அவகேடோ பழம் + 1/2 கப் ராஸ்ப்பெர்ரி.

விருப்பத்தேர்வு 3 : 1 டேபிள் ஸ்பூன் ஆளிவிதைகளை தூவிய 1 தட்டு பழம் அல்லது காய்கறி சாலட் + 1 டம்ளர் நற்பதமான காய்கறி அல்லது பழச்சாறு.

முக்கியமாக நாள் முழுவதும் தண்ணீர் அதிகம் குடிக்க மறக்க வேண்டாம்.

மதிய உணவு

விருப்பத்தேர்வு 1 : 1/2 கப் திணை + 1/2 கப் வேக வைத்த அஸ்பாரகஸ் மற்றும் குடைமிளகாய்.

விருப்பத்தேர்வு 2 : 1 கப் ப்ளூபெர்ரி + 1/2 கப் பேபி கேரட் + 1 டம்ளர் பழச்சாறு.

விருப்பத்தேர்வு 3 : 1 பௌல் வேக வைத்த காய்கறிகள் + 1 கப் வெஜிடேபிள் சூப்.

முக்கியமாக நாள் முழுவதும் தண்ணீரை அதிகம் குடிக்க மறக்க வேண்டாம்.

இரவு உணவு

விருப்பத்தேர்வு 1 : 1 கப் பூண்டு சேர்த்த பசலைக்கீரை சூப் + 1 பௌல் வேக வைத்த ப்ராக்கோலி.

விருப்பத்தேர்வு 2 : 1 சிறிய வாழைப்பழம் + 1/2 கப் ராஸ்ப்பெர்ரி + 1 ஆப்பிள்.

பசி எடுக்கும் போது ஸ்நாக்ஸாக…
பசி எடுக்கும் போது ஸ்நாக்ஸாக…
விருப்பத்தேர்வு 1 : 1/2 கப் பேபி கேரட் + 1/2 கப் வேக வைத்த ப்ராக்கோலி

விருப்பத்தேர்வு 2 : 1/2 கப் ராஸ்ப்பெர்ரி + 1 ஆப்பிள்

நாள் #2

காலை உணவு

விருப்பத்தேர்வு 1 : குடலை சுத்தம் செய்யும் நற்பதமான இயற்கை ஜூஸ் : 1 கையளவு பசலைக்கீரை, 1 கையளவு பார்ஸ்லி, 1 வெள்ளரிக்காய், 1 துண்டு செலரி கீரை, 1/2 எலுமிச்சை ஆகியவற்றை மிக்ஸியில் போட்டு நன்கு அரைத்து குடிக்கவும் + 1 ஆப்பிள் அல்லது பேரிக்காய் சாப்பிடவும்.

விருப்பத்தேர்வு 2 : ஒரு டம்ளர் நற்பதமான ஆப்பிள் ஜூஸ் + 1 தட்டு காய்கறி சாலட்

முக்கியமாக நாள் முழுவதும் தண்ணீர் அதிகம் குடிக்க வேண்டும்.

மதிய உணவு

விருப்பத்தேர்வு 1 : 1 கப் கேல் கீரை + 1/2 கப் வெஜிடேபிள் சூப் + 4 துண்டு செலரி + 1 வெள்ளரிக்காய் + 1/2 பச்சை ஆப்பிள் + 1 கப் அன்னாசி + 1/2 எலுமிச்சை சாறு.

விருப்பத்தேர்வு 2 : 1 கப் நற்பதமான காய்கறி சாலட் + 1 பௌல் வேக வைத்த காய்கறி + 1/2 கப் வேக வைத்த அஸ்பாரகஸ்.

விருப்பத்தேர்வு 3 : 1 பச்சை ஆப்பிள்+ 1 கப் ராஸ்ப்பெர்ரி + 1 டம்ளர் நற்பதமான கேரட் ஜூஸ் + 1 கப் காய்கறி சாலட்.

இரவு உணவு

விருப்பத்தேர்வு 1 : 1 1/2 கப் இளநீர் + 1 பேரிக்காய் + 1 கப் ராஸ்பெர்ரி + 1 கப் கேல் + 1 டேபிள் ஸ்பூன் ஆளி விதை.

விருப்பத்தேர்வு 2 : 1/4 அவகேடோ + 1/2 கப் மாம்பழம் அல்லது அன்னாசிப்பழம் + 1/4 டீஸ்பூன் மிளகுத் தூள் + 1 கப் ப்ளூபெர்ரி + 1/2 கிவி பழம்.

பசி எடுக்கும் போது ஸ்நாக்ஸாக…

விருப்பத்தேர்வு 1 : 1 டம்ளர் எலுமிச்சை ஜூஸ் + 1 கப் நற்பதமான செர்ரிப் பழங்கள்.

விருப்பத்தேர்வு 2 : 1 சிறிய வெள்ளரிக்காய் + 1 டம்ளர் நற்பதமான ஜூஸ்

நாள் #3

நாள் #3
காலை உணவு

விருப்பத்தேர்வு 1 : மிக்ஸியில் ஒரு டம்ளர் எலுமிச்சை ஜூஸை ஊற்றி, அதில் 2 இன்ச் இஞ்சி, 2 பல் பூண்டு மற்றும் 2 டேபிள் ஸ்பூன் ஆளி விதை, சிறிது மிளகுத் தூள் சேர்த்து நன்கு அரைத்துக் குடிக்க வேண்டும் + 1 அவகேடோ அல்லது ஆப்பிள்.

விருப்பத்தேர்வு 2 : 1 கப் ராஸ்ப்பெர்ரி + 1 பேரிக்காய் + 1 கப் அன்னாசி + 1 டீஸ்பூன் ஆளி விதை

மதிய உணவு

விருப்பத்தேர்வு 1 : 1 கப் பசலைக்கீரை சாலட் + 1 கப் அன்னாசிப்பழம் + 1/2 கப் க்ரில்டு குடைமிளகாய் + 1/2 கப் திணை.

விருப்பத்தேர்வு 2 : 1 கப் வெஜிடேபிள் சூப்+ 1/2 அவகேடோ + 1 ஆரஞ்சு + 3 தண்டு செலரி கீரை.

இரவு உணவு

விருப்பத்தேர்வு 1 : கற்றாழை ஜூஸில் எலுமிச்சை சாறு கலந்த ஒரு டம்ளர் ஜூஸ் + 30 நிமிடம் கழித்து, சூடான வெஜிடேபிள் சூப்.

விருப்பத்தேர்வு 2 : 1 வாழைப்பழம் + 1 கப் ராஸ்ப்பெர்ரி + 1 டீஸ்பூன் ஆளிவிதை + 1/2 கப் வேக வைத்த ப்ராக்கோலி.

பசி எடுக்கும் போது ஸ்நாக்ஸாக…

விருப்பத்தேர்வு 1 : 1 கப் மூலிகை டீ + 1/2 கப் வேக வைத்த பட்டாணி.

விருப்பத்தேர்வு 2 : 1 ஆப்பிள் + 1/2 கப் வேக வைத்த பீன்ஸ்.

நாள் #4

காலை உணவு

விருப்பத்தேர்வு 1 : 1 தட்டு பட்டாணி, பசலைக்கீரை, ப்ராக்கோலி கொண்டு தயாரிக்கப்பட்ட சாலட் + 1 ஆப்பிள் + 1 வெள்ளரிக்காய் + 2 கேரட்.

விருப்பத்தேர்வு 2 : 1 கட்டு செலரி + 1 கப் பீட்ரூட் + 1/2 கப் கேரட் + 1 கப் மூலிகை டீ.

மதிய உணவு

விருப்பத்தேர்வு 1 : மிக்ஸியில் 1/2 கப் பசலைக்கீரை, 1/2 கப் செலரி கீரை, சிறிது முட்டைக்கோஸ், 1 எலுமிச்சை மற்றும் நீர் சேர்த்து நன்கு அரைத்தது ஒரு டம்ளர் + 1 கப் பீட்ரூட் + 1/2 கப் கேரட் + 1 டீஸ்பூன் எலுமிச்சை சாறு.

விருப்பத்தேர்வு 2 : 1 ஆப்பிள் + 1 வெள்ளரிக்காய் + 1 கட்டு செலரி + 1 டீஸ்பூன் இஞ்சி + 1/2 கப் பசலைக்கீரை.

இரவு உணவு

விருப்பத்தேர்வு 1 : 1 டம்ளர் நீர் + 1 பௌல் சூடான வெஜிடேபிள் சூப் + 1/2 கப் வேக வைத்த ப்ராக்கோலி + 1/2 கப் கேரட்.

விருப்பத்தேர்வு 2 : 1/4 கப் ஸ்ட்ராபெர்ரி + 1 கப் கேல் + 1/2 கப் பசலைக்கீரை + 1 சிறிய வாழைப்பழம்.

பசி எடுக்கும் போது ஸ்நாக்ஸாக…
பசி எடுக்கும் போது ஸ்நாக்ஸாக…
விருப்பத்தேர்வு 1 : 1 பேரிக்காய் + 1/2 கப் லெட்யூஸ்.

விருப்பத்தேர்வு 2 : 1 கப் ராஸ்பெர்ரி + சிறிது உலர்ந்த முந்திரிப்பழம்.

 

நாள் #5

1/2 கப் பப்பாளி + 1/2 கப் வாழைப்பழம் + 2 டேபிள் ஸ்பூன் ஆளி விதை பொடி இந்த மூன்றையும் ஐந்தாம் நாளின் காலை உணவாக சாப்பிட வேண்டும். முக்கியமாக நாள் முழுவதும் தண்ணீரை அதிகம் குடிக்க மறக்க வேண்டாம்.

மதிய உணவு

விருப்பத்தேர்வு 1 : 1 பௌல் குளிர்ந்த பசலைக்கீரை சூப் + 1 விருப்பமான பழம் + 1 கப் கேரட் + 1/2 கப் பிரெஞ்சு பீன்ஸ்.

விருப்பத்தேர்வு 2 : 1 வெள்ளரிக்காய் + 1 கையளவு கொத்தமல்லி + 1 தக்காளி + 1 கப் பீட்ரூட்.

இரவு உணவு

விருப்பத்தேர்வு 1 : 1 டம்ளர் எலுமிச்சை சாறு சேர்த்த கொத்தமல்லி ஜூஸ் + 10-15 நிமிடம் கழித்து 1 பௌல் காய்கறி அல்லது பழ சாலட்.

விருப்பத்தேர்வு 2 : 1 டம்ளர் ஆரஞ்சு ஜூஸ் + 1 கப் பெர்ரி பழங்கள் + 1/2 கப் கைகுத்தல் அரிசி சாதம்.

பசி எடுக்கும் போது ஸ்நாக்ஸாக…
பசி எடுக்கும் போது ஸ்நாக்ஸாக…
விருப்பத்தேர்வு 1 : 1 டம்ளர் எலுமிச்சை ஜூஸ் + 1 கப் ராஸ்ப்பெர்ரி.

விருப்பத்தேர்வு 2 : 1 வாழைப்பழம் + 1 சிறிய ஆப்பிள்

நாள் #6

காலை உணவு

விருப்பத்தேர்வு 1 : 1 டம்ளர் நீரில் 1 டேபிள் ஸ்பூன் ஆளி விதை பொடி சேர்த்து கலந்து குடிக்கவும் + 1/2 மணிநேரம் கழித்து பச்சை அல்லது சிவப்பு ஆப்பிள் + ஒரு பௌல் நற்பதமான கீரை சாலட்.

விருப்பத்தேர்வு 2 : இரவில் படுக்கும் முன்பே ஊற வைத்த நட்ஸ் ஒரு கையளவு + 1 ஆப்பிள் + 1 வெள்ளரிக்காய்.

மதிய உணவு

விருப்பத்தேர்வு 1 : 1 டம்ளர் நற்பதமான காய்கறி ஜூஸ் + 1 தட்டு பச்சை காய்கறி + 10 நிமிடம் கழித்து 1 விருப்பமான பழம்.

விருப்பத்தேர்வு 2 : 1 கப் தர்பூசணி + 1 கப் பீட்ரூட் + 1 கப் வேக வைத்த அஸ்பாரகஸ் + 1/2 கப் பட்டாணி.

இரவு உணவு

விருப்பத்தேர்வு 1 : மதிய உணவு உண்பதற்கு 30 நிமிடத்திற்கு முன் ஒரு டம்ளர் நீரில் 1 டேபிள் ஸ்பூன் ஆளிவிதை பொடி சேர்த்து குடிக்கவும். பின் ஒரு பௌல் ஆளிவிதை பொடி தூவிய சூடான வெஜிடேபிள் சூப் சாப்பிடவும்.

விருப்பத்தேர்வு 2 : 2 கப் காய்கறி வேக வைத்த நீரில், 1/2 டீஸ்பூன் எலுமிச்சை சாறு சேர்த்து, சில துண்டுகள் வெள்ளரிக்காய், 2 அவகேடோ, பின் 1/2 வெங்காயம், 3 பல் பூண்டு, 1 பச்சை மிளகாய், 1 டேபிள் ஸ்பூன் கொத்தமல்லி மற்றும் 1 டேபிள் ஸ்பூன் பார்ஸ்லி சேர்த்து நன்கு அரைத்து சாப்பிட வேண்டும்.

பசி எடுக்கும் போது, ஸ்நாக்ஸாக…
பசி எடுக்கும் போது, ஸ்நாக்ஸாக…
விருப்பத்தேர்வு 1 : 1 அவகேடோ + 1 கப் ராஸ்ப்பெர்ரி.

விருப்பத்தேர்வு 2 : 1/2 கப் வேக வைத்த ஆர்டிசோக்ஸ் + 1 கப் கேரட்.

நாள் #7

காலை உணவு

விருப்பத்தேர்வு 1 : கடைசி நாளில், 1 டம்ளர் நற்பதமான ஆப்பிள் ஜூஸ் + 10 நிமிடம் கழித்து நார்ச்சத்துள்ள பழங்கள் மற்றும் காய்கறிகள்.

விருப்பத்தேர்வு 2 : 1/4 கப் பசலைக்கீரை + 1 வாழைப்பழம்+ 1 கப் ப்ளூபெர்ரி + 1 கப் ஆளிவிதை.

மதிய உணவு

விருப்பத்தேர்வு 1 : 1 வெள்ளரிக்காய் + 1 டீஸ்பூன் இஞ்சி + 1 கட்டு செலரி + 5 லெட்யூஸ் இலைகள்.

விருப்பத்தேர்வு 2 : 1 பேரிக்காய் + 1 கப் திராட்சை + 1 கப் மாதுளை + 1/2 கப் பீட்ரூட்+ 1/2 கப் கேரட்.

இரவு உணவு

விருப்பத்தேர்வு 1 : 1 கப் வேக வைத்த கேல் + 1/4 கப் வேக வைத்த பச்சை பட்டாணி + 1/2 கப் ப்ராக்கோலி + 1 கப் ராஸ்ப்பெர்ரி.

விருப்பத்தேர்வு 2 : 1 கப் வேக வைத்த அஸ்பாரகஸ் + 1 கப் பசலைக்கீரையுடன் கைக்குத்தல் அரிசி சாதம் அல்லது திணை.

பசி எடுக்கும் போது, ஸ்நாக்ஸாக…
பசி எடுக்கும் போது, ஸ்நாக்ஸாக…
விருப்பத்தேர்வு 1 : 1 ஆப்பிள் + 1 கப் பச்சை திராட்சை.

விருப்பத்தேர்வு 2 : 1/2 கப் ஆர்டிசோக்ஸ் + 1/2 கப் பீட்ரூட்.

Related posts

ஆண்கள் மனைவியை ஏமாற்றி சின்னவீடு வைத்து கொள்ள காரணம்

nathan

காலையில் இந்த மூலிகை நீரை குடிச்சா சர்க்கரைவியாதி புற்று நோயை தடுக்கலாம் என தெரியுமா? அப்ப இத படிங்க!

nathan

உங்களுக்கு சொத்தைப் பல் இருக்கா?அப்ப இத படிங்க!

nathan

சர்க்கரை நோய் வராமல் தடுக்க வேண்டுமா? அப்போ இதை செய்யுங்கோ..!!

nathan

கழுத்தை கவனியுங்கள்!

nathan

இரகசியமான ஆன்லைன் உரையாடல்களில் ஈடுபடுபவரா நீங்கள்.? உஷார்.!

nathan

பெண்களே தெரிஞ்சிக்கங்க…கர்ப்ப காலத்தில் ஏற்படும் பல் மற்றும் ஈறு பிரச்சனைகளுக்கான சில இயற்கை நிவாரணிகள்!

nathan

கணவன் – மனைவியின் குணங்களே உறவை வலுவாக்கும்

nathan

உங்க உடலில் கொலஸ்ட்ரால் அளவ குறைக்க உதவும் உணவுகள் என்னென்ன தெரியுமா?

nathan