மழைக் காலத்தில் வருண பகவான் காட்டாத பார்வையையும் சேர்த்து கோடை காலத்தில் தமிழகம் மீது காட்டு காட்டென்று காட்டுகிறார் சூரிய பகவான். என்னமா நீங்க இப்படி பண்றீங்க!! என்று சூரியனை மேல் நோக்கி பார்த்து இந்த வசனத்தை கூடக் கூற முடியாத அளவுக் கொளுத்தி அடிக்கிறார் சூரியன்!!!
“ஓயாம இப்படியே அடிச்சுக்கிட்டே இருந்தா எப்படி உடம்புல தண்ணி நிக்கும்..” அதற்கு தான் நீர்ச்சத்து நிறைந்த பழங்கள் சாப்பிட வேண்டும். நமக்கு தெரிந்தது எல்லாம் இளநியும், தர்பூசணியும் தான். ஆனால், இதைத் தவிர நிறைய பழங்களில் நீர்ச்சத்து அதிகம் இருக்கின்றன. பொதுவாகவே நமது உடலுக்கு நீர்ச்சத்து முக்கியமாக தேவைப்பாடுவதால், இந்த பழங்களைப் பற்றி நீங்கள் அவசியம் தெரிந்துக் கொள்ள வேண்டும்…
தர்பூசணி
கோடைக் காலத்தில் நம்மை காப்பாற்றுவதற்காக பூமியில் அவதரித்த சாமி!! இதில் 92% நீர் அளவு இருக்கின்றது.
ஸ்ட்ராபெர்ரி
ஸ்ட்ராபெர்ரியிலும் 92% நீரளவு இருக்கின்றது. அனால், கொஞ்சம் விலை தான் காஸ்ட்லி. ஆயினும், நீர்ச்சத்து நிறைந்த பழங்களில் இது சிறந்த ஒன்று.
முலாம்பழம்
முலாம்பலத்தில் நீர்சத்து அதிகம் இருப்பது மட்டுமின்றி, உங்கள் உடல் புத்துணர்ச்சி அடையவும் நல்ல பயன் அளிக்கிறது.
ஆப்பிள்
நீர்ச்சத்து மட்டுமின்றி ஆப்பிளில் அமினோ அமிலம், மினரல், வைட்டமின் போன்ற சத்துகளும் இருக்கின்றன. இது கோடைக்கு சிறந்த உணவாகும்.
அன்னாசிப்பழம்
நீர்சத்து நிறைந்துள்ள பழங்களில் அடுத்த சிறந்த பழமாக கருதப்படுவது அன்னாசிப்பழம். இதைப் பல்வேறு உணவாக சமைத்து சாப்பிடலாம்.
மாம்பழம்
கோடையின் சீசன் பழம் மாம்பழம், இதில் அதிக ஊட்டச்சத்து இருக்கிறது. ஆயினம், அதிகமாக சாப்பிட்டால் உடல் சூடு அதிகரிக்கும் என்பதை மனதில் வைத்துக் கொள்ளுங்கள்.
பப்பாளி
பப்பாளி மற்றொரு சிறந்த நீர்சத்து நிறைந்த பழம் ஆகும். கற்பனை பெண்களும், மற்றும் மாதவிடாய் காலத்தில் இருக்கும் பெண்களும் இதை தவிர்த்துவிடுங்கள்.