செரிமானத்திற்கு விட்டமின்ஸ் சத்து மிகவும் அவசியமாகும்…வீடியோ
செரிமானக்கோளாறுகள் தான் பல்வற்றின் ஆரம்ப புள்ளியாக இருக்கிறது. நாம் சாப்பிடும் உணவு சரியாக செரிமானம் ஆகாததால் தான் வயிற்றுவலியில் துவங்கி, நம் உடலுக்கு போதுமான நியூட்ரிசியன்கள் கிடைக்காமல் அல்லல்பட வேண்டிய நிலமை ஏற்படுகிறது.
இதனால் உடல் எடை கூடுவது, சோர்வாக இருப்பது என நாம் பெரிதும் கண்டு கொள்ளாத பல்வேறு உபாதைகள் ஆரம்பித்திடும். இதனை நாம் கண்டு கொள்ளாத விட்டால் இதுவே பெரிய பிரச்சனையாக முடிந்திடும்.
பொதுவாக செரிமானத்திற்கு விட்டமின்ஸ் சத்து மிகவும் அவசியமாகும். சத்தான ஆகாரங்களை சாப்பிடுவதால் மட்டுமல்ல பேலன்ஸுடு டயட் எடுத்துக் கொள்பவர்கள் கூட சாப்பிட்ட உணவு சரியாக செரிமானம் நடப்பதற்கு விட்டமின்ஸ் எடுத்துக் கொள்ளவேண்டியது அவசியமாகிறது.
விட்டமின் பி 1 :
விட்டமின் பி1 அல்லது தையமின் தான் நம்முடைய எனர்ஜிக்கு அடிப்படையாக விளங்குகிறது. இந்த விட்டமின் நம் உடலில் சேர்ந்து செரிமானத்திற்கு தேவையான திசுக்களை உறுதிப்படுத்துகிறது. இதனால் செரிமானம் துரிதமாக நடைபெறுவதோடு நமக்கு நோய் எதிர்ப்பு சக்தியும் அதிகரிக்கும்.
விட்டமின் பி1 தொடர்ந்து எடுத்து வருவதால் பசியின்மை பிரச்சனை இருக்காது. அதே நேரத்தில் எப்போதும் சுறுசுறுப்பாக இருப்பீர்கள். அரிசி,தானியங்களில் இவ்வகை விட்டமின்ஸ் நிறைய இருக்கிறது.
விட்டமின் பி3 :
நியாசின் அல்லது விட்டமின் பி3 என்ற இது செரிமான கோளாறுகள் ஏற்படாமல் தடுத்திடும். விட்டமின் பி1மற்றும் பி3 ஆகியவை கொழுப்பு,கார்போஹைட்ரேட் மற்றும் ப்ரோட்டீன் ஆகியவை நமக்கு கிடைத்திடும்.
அதோடு விட்டமின் பி3 நம் ஹார்மோன் அளவை அட்ஜெஸ்ட் செய்திட உதவிடும். கடலை,பீட்ரூட் ஆகியவற்றிலிருந்து அதிகப்படியான விட்டமின் பி3 கிடைத்திடும். இதனை தொடர்ந்து எடுத்து வர, இதயக் கோளாறுகள் வராமல் தடுக்கலாம். கெட்ட கொழுப்பு நம் உடலில் தங்குவதை தவிர்க்கலாம். சர்க்கரை நோய், காட்ராக்ட்,அல்சைமர் ஆகிய பிரச்சனைகளில் இருந்து நம்மை தற்காத்துக் கொள்ள உதவிடும்.
விட்டமின் பி 12:
கோபால்மின் எனப்படுகிற விட்டமின் பி12 கூட செரிமானத்திற்கு மிகவும் அத்தியாவசியமானது. விட்டமின் வகைகளிலேயே விட்டமின் பி12 தான் மிகவும் அத்தியாவசியமானது மற்றும் பெரியதும் கூட.
நினைவுத்திறனை அதிகப்படுத்துவது, எப்போதும் நம்மை எனர்ஜியாக வைத்துக் கொள்வது, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பது ஆகியவற்றை இது செய்திடும்.
பால் மற்றும் பால் சார்ந்த பொருட்கள் :
விட்டமின் பி12 எடுத்துக் கொள்வதினால் மாரடைப்பு தொடர்பான பிரச்சனைகளிலிருந்து தற்காத்துக் கொள்ள முடியும். அதே நேரத்தில், மன அழுத்தம்,டிப்ரஷன்,சர்க்கரை நோய்,குழந்தையின்மைபிரச்சனை, ஆஸ்துமா போன்றவற்றில் தீவிரமடையாமல் பாதுகாக்க முடியும்.
சாலம்ன் மீன் வகை, பால் மற்றும் பால் சார்ந்த பொருட்கள், கறி ஆகியவற்றில் இந்த சத்து அதிகமாக இருக்கிறது.
விட்டமின் பி2 :
விட்டமின் பி2வுக்கு இன்னொரு பெயர் ரிபோஃபெலவின். நம் உடலின் மெட்டபாலிசத்தை அதிகரிக்க இது உதவிடுகிறது. மைக்ரேன் தலைவலி, கர்ப்பப்பை வாய் புற்றுநோய் ,பார்வைக்குறைபாடு,அதீத சோர்வு ஆகியவற்றிலிருந்து மீள முடியும்.
அதே நேரத்தில் கண்புரை, க்ளூக்கோமா ஆகியவை ஏற்படாமலும் தடுக்க முடியும்
நகத்திற்கும் கூந்தலுக்கும் :
விட்டமின் பி2 நகம் மற்றும் கூந்தல் வளர்ச்சிக்கு மிகவும் உகந்தது. சருமத்தின் வளர்ச்சிக்கும் இது மிகவும் பயனுள்ளதாக இருந்திடும். இது கார்போஹைட்ரேட்டை உடைக்க பயன்படுவதால் கார்போஹைட்ரேட் உணவுகள் விரைவில் செரிமானம் ஆக உதவிடும்.
பச்சைக் காய்கறிகள்,சோயா போன்ஸ்,காளான்,பாதாம்,முட்டை மற்றும் நட்ஸ் ஆகியவற்றைல் விட்டமின் பி2 அதிகமாக இருக்கிறது.
விட்டமின் பி5 :
கார்ப்போஹைட்ரேட்,ஃபேட் மற்றும் ப்ரோட்டீன் செரிமானத்திற்கு விட்டமின் பி5 பெரிதும் உதவியாய் இருக்கிறது. அதே நேரத்தில் உங்களுடைய கல்லீரலை ஆரோக்கியமாக பராமரிக்கக்கூடியதும் இந்த விட்டமின் பி5 தான்.
அமிலம் :
இந்த விட்டமின் பி5 என்பதை பண்ட்டோதெனிக் அமிலம் என்பார்கள். பால், முட்டை,பருப்பு வகையறாக்கள், தானியங்கள் ஆகியவற்றில் இந்த விட்டமின் அதிகமிருக்கின்றன. இந்த விட்டமின் பற்றாகுறையிருந்தால் செரிமானக்கோளாறு ஏற்படுவதுடன் முகத்தில் கரும்புள்ளிகள் தோன்றுவது, ஆஸ்துமா பிரச்சனை, அதிகமாக முடி கொட்டுவது, யூஸ்ட் இன்ஃபெக்ஷன் ஏற்படுவது, காரணமேயின்றி மன அழுத்தம், ரத்த சோகை ஆகியவை ஏற்படும்.
விட்டமின் பி6 :
விட்டமின் பி6 ப்ரோட்டீன் மற்றும் கார்போஹைட்ரேட் ஆகியவற்றை உடைத்து செரிக்க வைக்க உதவுகின்றன. இதனால் செரிமானக்கோளாறுகள் பெருமளவு தவிர்க்கப்படும்.நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கவும், நரம்பு மண்டலம் சீராக வேலை செய்யவும் பெரிதும் உதவுகின்றன.
மூளை செயல்பாடுகள் :
நம்முடைய மூளை செயல்பாடுகளுக்கு விட்டமின் பி6 பெரிதும் உதவிடுகிறது. வால்நட்,கீரைகள்,பட்டாணி,மீன்,முட்டை,கேரட் ஆகியவற்றில் அதிகப்படியான விட்டமின் பி6 இருக்கின்றன. இந்த உணவினை சரிவிகித அளவில் உட்கொண்டால் மட்டுமே நமக்கு நன்மை பயக்கும் அளவுக்கு மீறி எடுத்துக் கொண்டால் அது ஆபத்தையே விளைவிக்கும்.
விட்டமின் பி7 :
செரிமானத்திற்கு உதவுகிற ஏராளமான விட்டமின்களில் விட்டமின் பி7ம் ஒன்று. செரிமானம் மட்டுமின்றி விட்டமின் பி7 எடுப்பதால் நம் உடலுக்கு எண்ணற்ற நன்மைகள் இருக்கின்றன.சத்துக்குறைபாடு, உடல் எடை குறைக்க, சர்க்கரை நோய், மன அழுத்தம், சருமப் பிரச்சனைகள்,நகம் உடைந்து போவது, முடி கொட்டுவது ஆகியவற்றிற்கு விட்டமின் பி 7 நிரந்தர தீர்வினைக் கொடுத்திடும்.
உணவுகளில் :
சாப்பிடும் உணவுகளில் சத்துக்களை பிரித்தெடுத்து விட்டு கழிவுகளை சேர்ப்பதில் இது முக்கிய பங்காற்றுகிறது. அதே நேரத்தில் நம் ரத்தத்தில் இருக்கும் சர்க்கரை அளவை பராமரிக்கவும் இது உதவிடுகிறது.
முட்டையின் வெள்ளைக்கரு, பன்றிக்கறி, சீஸ்,முழு கோதுமை,கடலை,அவகோடா,சாலமன்,காலி ஃப்ளவர் ஆகியவற்றில் அதிகப்படியான விட்டமின் பி7 இருக்கிறது.
விட்டமின் சி :
விட்டமின் சி செரிமானத்திற்கு மிகவும் அத்தியாவசியமானதாகும். இது நம் உடலில் இரும்புச் சத்தை கிரகத்துக் கொள்ள பெரிதுவும் உதவிடுகிறது. இதனை நாம் சரிவிகித அளவில் எடுத்துக் கொள்வதால் நம் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கிறது.
ஆரோக்கியமான பற்களுக்கு இந்த விட்டமின் பெரிதும் உதவிடுகிறது.
சரியான வழி :
விட்டமின் சி சரியான அளவில் இருப்பதினால் நம் உடலுக்கு அடிக்கடி ஏற்படுகிற காய்ச்சல் மற்றும் சளித்தொல்லையிலிருந்து விடுபட முடியும். இதைத் தாண்டி ப்ரோக்கோலி, தக்காளி,மிளகு,தானியங்கள் சிட்ரஸ் அமிலம் நிறைந்த பழங்களை எடுத்து வர அது நம் உடலுக்கு போதுமான அளவு விட்டமின் சி கொடுக்கும்.
விட்டமின் டி :
சன்ஷைன் விட்டமின் என்று இதனை அழைப்பார்கள்.துரிதமான செரிமானத்திற்கும், கால்சியத்தை கிரகித்துக் கொள்ளவும் விட்டமின் டி மிகவும் அத்தியாவசியமான ஒன்றாகும்.
அதோடு தசை மற்றும் நரம்பு செயல்பாட்டிற்கு இது பெரிதும் உதவிடுகிறது. இதற்கென்ற பிரத்யோக உணவாக ஏதும் எடுக்காமல் சூரிய ஒளி படுமாறு சில மணி நேரங்கள் நின்றாலே போதுமானது.
விட்டமின் ஏ :
பார்வைத்திறனுக்கு, எலும்பு வளர்ச்சிக்கு உதவிடும் இதே விட்டமின் ஏ தான் செரிமானத்திற்கு உதவுவிடுகிறது. வயிற்றில் இருக்கிற முகோசல் திசுக்கள் மூலமாகத்தான் செரிமானம் நடைபெறுகிறது.
விட்டமின் ஏ இந்த திசுக்களின் வளர்ச்சிக்கு பெரிதும் உதவியாய் இருக்கிறது. கேரட்,சுவரொட்டி,பால், ஸ்வீட் பொட்டேட்டோ,ஆகியவற்றில் விட்டமின் ஏ அதிகம்.