cover 1 3
மருத்துவ குறிப்பு

தெரிஞ்சிக்கங்க… கர்ப்பிணி பெண்கள் இந்த காயை சாப்பிடுவது அவர்களுக்கு பல பிரச்சினைகளை உண்டாக்கும் தெரியுமா?

கர்ப்பகாலத்தில் பெண்கள் தாங்கள் எடுத்துக்கொள்ளும் உணவுகளின் மீது அதிக கவனம் செலுத்த வேண்டியது அவசியமாகும். ஏனெனில் அவர்கள் தங்களுக்கு மட்டுமின்றி தங்கள் கருவில் வளரும் குழந்தையின் ஆரோக்கியத்தை கருத்தில் கொண்டும் சாப்பிட வேண்டும்.

பொதுவாக கர்ப்பகாலத்தில் அதிக சூடான, குளிச்சியான உணவுகளை தவிர்க்க வேண்டும். மேலும் பப்பாளி, அன்னாசி பழம் போன்ற பழங்களை சாப்பிடுவதை தவிர்ப்பது நல்லது. இவை மட்டுமின்றி சில காய்கறிகளை சாப்பிடுவதை தவிர்ப்பதும் நல்லது. அதில் முக்கியமான காய்கறி என்றால் அது கத்தரிக்காய் ஆகும். இந்த பதிவில் கர்ப்பிணி பெண்கள் ஏன் கத்தரிக்காய் சாப்பிடக்கூடாது என்று பார்க்கலாம்.

கத்தரிக்காய்

இந்தியாவில் எளிதில் கிடைக்கும் காய்கறிகளில் ஒன்று கத்தரிக்காய் ஆகும். எளிதாய் கிடைப்பதால்தான் என்னவோ இது அதிகளவு மக்களால் உபயோகப்படுத்தப்படுகிறது. எளிதில் கிடைப்பது மட்டுமின்றி இதில் இருக்கும் ஊட்டச்சத்துகளுக்காகவும் பயன்படுத்தப்படுகிறது. இது செரிமானம், வாயுக்கோளாறு, மலேரியா போன்ற பல பிரச்சினைகளை இது குணப்படுத்தக்கூடும். ஆனால் ஆயுர்வேதத்தின் படி கர்ப்பகாலத்தில் பெண்கள் கத்தரிக்காய் சாப்பிடுவதை தவிர்ப்பது நல்லது என்று கூறப்படுகிறது. அதற்கான காரணங்கள் என்னென்ன என்று மேற்கொண்டு பார்க்கலாம்.

மாதவிடாய்

ஆயுர்வேதத்தின் படி கத்திரிக்காய் சாப்பிடுவதில் கர்ப்பிணி பெண்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டியது அவசியம். ஏனெனில் இதில் இருக்கும் பைட்டோஹார்மோன்கள் மாதவிலக்கு தொடர்பான அமினோரியா நோய்க்கு சிகிச்சையளிக்கிறது. இது சாதாரண பெண்களுக்கு நல்லதாக இருக்கலாம் ஆனால் கர்ப்பிணி பெண்களுக்கு ஏற்றதல்ல.

கருச்சிதைவு

கத்தரிக்காயில் மாதவிடாயை தூண்டும் பொருட்கள் உள்ளது. இந்த பொருட்கள் கர்ப்பிணி பெண்களுக்கு கருச்சிதைவை ஏற்படுத்தக்கூடும். எனவே கர்ப்பிணி பெண்கள் கத்தரிக்காயை சாப்பிடாமல் இருப்பதே நல்லது.4 156

அமிலத்துவம்

கத்தரிக்காய் நமது உடலில் இருக்கும் அமிலத்தின் அளவை அதிகரிக்கும். இதனால் பெண்களுக்கு பல அசௌகரியங்கள் ஏற்படலாம். எனவே கர்ப்பிணி பெண்கள் கத்திரிக்காய் சாப்பிடுவதை தவிர்க்கவும்.

சாப்பிடலாமா? கூடாதா?

கத்தரிக்காயில் 6.4 மிகி வைட்டமின் ஏ, 4.6 கி நார்ச்சத்துக்கள் மற்றும் 6 மிகி இரும்புச்சத்துக்களும் உள்ளது. இது கர்ப்பகாலத்தில் பெண்களுக்கு மிகவும் அவசியமான ஒன்றாகும். ஆனால் இந்த ஊட்டச்சத்துக்களை நாம் மற்ற பொருட்களில் இருந்தே பெறலாம். எனவே கத்தரிக்காய் சாப்பிட்டு ரிஸ்க் எடுக்க வேண்டிய அவசியமில்லை.

Related posts

அவசியம் படிக்க.. கண்களை பாதுகாப்போம்

nathan

பற்களின் பின் இருக்கும் அசிங்கமான மஞ்சள் கறைகளைப் போக்கும் எளிய வழிகள்!

nathan

நெஞ்சு சளியால் அவஸ்தையா? அப்ப இத படிங்க!

nathan

தைராய்டு புற்றுநோயைத் தவிர்ப்போம்!

nathan

மாதவிடாய் காலத்தில் ஏற்படும் வயிற்று வலியை குறைக்கனுமா?

nathan

பயனுள்ள 10 பாட்டி வைத்தியங்கள்! இதோ உங்களுக்காக!

nathan

தெரிஞ்சிக்கங்க…உங்கள் குழந்தையின் பற்களை சொத்தையாக்கும் உணவுகள் மற்றும் பானங்கள்!

nathan

தொண்டை கரகரப்பில் இருந்து விடுபட, சூப்பர் டிப்ஸ்…..

nathan

பெண்களே கட்டாயம் இதை படிங்க! சானிட்டரி நாப்கின்கள் பிறப்புறுப்பு புற்றுநோயை ஏற்படுத்துமா?

nathan