26.4 C
Chennai
Sunday, Dec 22, 2024
phosphorus deficie
மருத்துவ குறிப்பு

தெரிஞ்சிக்கங்க… அடிக்கடி முதுகு வலிக்குதா? அப்ப உங்க உடம்புல இந்த சத்து கம்மியா இருக்குன்னு அர்த்தம்…

உடல் ஆரோக்கியத்திற்கு பாஸ்பரஸ் மிகவும் அத்தியாவசியமான ஒரு கனிமச்சத்து. கால்சியத்தைப் போன்று பாஸ்பரஸ் சத்தும் எலும்புகளின் ஆரோக்கியத்திற்கு அவசியமான ஒன்று. பொதுவாக பாஸ்பரஸ் குறைபாடு ஏற்படுவது அரிதானது தான். ஏனெனில் பொதுவாக நம் உடலுக்கு இது சிறிய அளவில் இருந்தாலே போதுமானது. வழக்கமாக இச்சத்து நாம் அன்றாடம் உண்ணும் உணவுகளில் இருந்து கிடைக்கும்.

இருப்பினும் ஒருவரது உடலில் தேவையான அளவுக்கு குறைவாக பாஸ்பரஸ் இருந்தால், பாஸ்பரஸ் குறைபாடு ஏற்படக்கூடும். இப்பிரச்சனை மரபணு நிலைமைகளான சர்க்கரை நோய், வாழ்க்கை முறை பழக்கங்களான மது அருந்துதல், ஊட்டச்சத்து குறைபாடு போன்றவற்றாலும் எழக்கூடும். இந்த குறைபாடு உங்களுக்கு பெரிய பிரச்சனையாக தெரியாமல் இருக்கலாம். ஆனால் நீண்ட காலமாக இந்த குறைபாடு இருந்தால், அது உடலில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்திவிடும்.

இப்போது பாஸ்பரஸ் குறைபாட்டிற்கான காரணங்கள், அறிகுறிகள், சிக்கல்கள் மற்றும் இதர தகவல்கள் குறித்து விரிவாக காண்போம்.

பாஸ்பரஸ் குறைபாட்டிற்கான அறிகுறிகள்

எலும்புகளில் 85% பாஸ்பரஸ் காணப்படுகிறது. இச்சத்து குறைபாடு எலும்பு ஆரோக்கியத்தில் தாக்கத்தை ஏற்படுத்தும் மற்றும் இதன் பெரும்பாலான அறிகுறிகள் எலும்பு சம்பந்தமான பிரச்சனைகளான மூட்டு வலி மற்றும் உடையக்கூடிய எலும்புகளாக தான் இருக்கும்.

இதர அறிகுறிகள்

* மூட்டு விறைப்பு

* பலவீனமான எலும்புகள்

* களைப்பு

* பதற்றம்

* உணர்வின்மை

* எரிச்சலூட்டும் தன்மை

* உடல் எடையில் ஏற்ற இறக்கங்கள்

* சுவாசிப்பதில் சிரமம்

* ஈறுகளில் இரத்தக்கசிவு மற்றும் பல் வலி

* குழந்தைகளுக்கு இக்குறைபாடு இருந்தால், அவர்களின் வளர்ச்சி தாமதமாக இருப்பதோடு, பேசுவதில் பிரச்சனைகளும் இருக்கும்.

பாஸ்பரஸ் குறைபாட்டிற்கான பொதுவான காரணங்கள்

பரம்பரை கோளாறுகள்phosphorus deficie

பெரும்பாலான நேரங்களில், மரபணு பிரச்சனைகளால் பாஸ்பரஸ் சத்தை உடலின் உறிஞ்சும் திறன் மற்றும் தக்க வைக்கும் திறன் பாதிக்கப்பட்டு பாஸ்பரஸ் குறைபாடு ஏற்படும். இந்த பிரச்சனை இருப்பவர்களுக்கு, அன்றாடம் கிடைக்கும் பாஸ்பரஸ் சிறுநீரின் வழியே உடலில் இருந்து வெளியேறும்.

பட்டினி

பட்டினி கிடப்பதால் இந்நிலை ஏற்படுவதற்கான வாய்ப்புக்கள் அரிதாக இருந்தாலும், சத்தான உணவை உட்கொள்ளாமல் இருந்தாலும் ஏற்படக்கூடும். எப்போது உடலில் தாதுக்களின் பற்றாக்குறை இருக்கிறதோ, அப்போது உடல் தாதுக்களை மருஉருவாக்கம் செய்ய முயற்சித்து, ஹைபோபாஸ்பேட்மியாவுக்கு வழிவகுக்கும்.

உண்பதில் கோளாறு

சில நேரங்களில் உண்ணுவதில் கோளாறு உள்ளவர்கள் பாஸ்பரஸ் குறைபாட்டைப் போலவே கனிமச்சத்து குறைபாட்டால் பாதிக்கப்படுவர். அதாவது கலோரி அதிகமான அதே சமயம் கனிமச்சத்து குறைவான உணவுகளை உட்கொள்ளும் போது, அது இந்த குறைபாட்டிற்கு வழிவகுக்கும்.

சர்க்கரை நோய்

சர்க்கரை நோய் உள்ளவர்களின் உடலில் போதுமான இன்சுலின் உற்பத்தி செய்யப்படாமல் இருக்கும். இது உடலில் அமில அளவை அதிகரிக்கும். இதன் விளைவாக பாஸ்பரஸ் குறைபாடு ஏற்படக்கூடும்.

மதுப் பழக்கம்

மதுப் பழக்கம் அல்லது அளவுக்கு அதிகமாக மது அருந்துபவர்களுக்கு ஊட்டச்சத்து குறைபாடு ஏற்படக்கூடும். மேலும் இது கனிமச்சத்து குறைபாடுகளான பாஸ்பரஸ் குறைபாடு போன்றவற்றையும் உண்டாக்கும்.

சிக்கல்கள்

ஒருவருக்கு நீண்ட காலமாக பாஸ்பரஸ் குறைபாடு இருந்தால், அது மிகவும் தீவிரமான, உயிருக்கே உலை வைக்கும் மோசமான சில ஆரோக்கிய சிக்கல்களை சந்திக்க வைக்கும். அவையாவன:

எலும்பு மெலிவு நோய் (Osteomalacia)

எப்போது ஒருவரது உடலில் வைட்டமின் டி குறைபாடு உள்ளதோ, அது பாஸ்பரஸ் குறைபாட்டிற்கும் வழிவகுக்கும். இதனால் கீழ் முதுகில் கடுமையான வலி, கால் வலி, இடுப்பு வலி மற்றும் விலா எலும்புகளில் வலி போன்றவற்றை உண்டாக்கும். குழந்தைகள் மற்றும் பெரியவர்கள் என இருவரும் இந்த நிலையால் பாதிக்கப்படலாம்.

ரிக்கட்ஸ்

வைட்டமின் டி குறைபாடு உடலில் பாஸ்பரஸ் குறைபாட்டிற்கு வழிவகுக்கும் போது, ரிக்கட்ஸ் எழுகிறது. இதன் அறிகுறிகளாவன பலவீனமான தசைகள், முதுகெலும்பு வலி, வளர்ச்சியில் தாமதம், எலும்பு குறைபாடுகள் போன்றவை.9 muscle 15 147919098

பாஸ்பரஸ் அதிகம் நிறைந்த உணவுகள்

உங்களுக்கு மேலே கொடுக்கப்பட்ட பாஸ்பரஸ் குறைபாட்டிற்கான அறிகுறிகள் தென்பட்டால், பாஸ்பரஸ் அதிகம் நிறைந்த உணவுகளின் உதவியால் எளிதில் சரிசெய்யலாம். இப்போது பாஸ்பரஸ் அதிகம் நிறைந்த உணவுகள் எவையென்று காண்போம்.

* பால்

* சீஸ்

* யோகர்ட்

* முட்டை

* சிக்கன் ஈரல்

* இறைச்சிகள்

* நட்ஸ் மற்றும் பருப்பு வகைகள்

* முழு தானியங்கள்

* திணை

* சோயா

Related posts

ஆண் குழந்தைகளைவிட பெண் குழந்தைகளுக்கு இந்தப் பிரச்சனை வரும் !தெரிந்துகொள்வோமா?

nathan

சிறுநீரகக் கல்… ஏன், எதற்கு, எப்படி? நலம் நல்லது-45

nathan

பெண்களுக்கு ஏற்படும் மாதவிலக்குக்கு முந்தைய சங்கடங்கள்

nathan

கட்டாயம் இதை படியுங்கள் குழந்தைகளைத் தாக்கும் டைப்-1 சர்க்கரைநோய்

nathan

மாதவிடாய் காலத்தில் தண்ணீர் அதிகம் குடிக்க வேண்டும்

nathan

சிலருக்கு தோல் நோய் வந்து உயிரை எடுக்கும்… மன உளைச்சல் அதிகமாக இருக்கும். இதோ, உடனடி தீர்வு…..!!…

nathan

மாரடைப்பு இதயவலியை போக்க நன்றாக உறங்குங்கள்

nathan

உஷரா இருங்க…! இந்த கீரையை அதிகமா சாப்பிட்டா… சிறுநீரக கல் ஏற்படும்மா?…

nathan

குழந்தைகள் சரியாக தூங்கவில்லையென்றால் சந்திக்கும் பிரச்சனை என்ன?

nathan