1, 10, 19, 28 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களை ஒன்றாம் எண்காரர்கள் என அழைக்கபடுவார்கள். 1 ஆம் எண்காரர்கள் சூரியனின் ஆதிக்கத்தில் பிறந்தவர்கள். தன் சொல்லாலும், செயலாலும் மற்றவர்களை பணியவைப்பதில் கில்லாடிகள். இவர்கள் எதையாவது ஒன்றை எதிர்பார்த்துத் தான் எந்த காரியத்தையும் செய்வார்கள். எந்நேரமும் சுறுசுறுப்பாக இருப்பதையே விரும்புவார்கள். அமைதியாக ஒரு இடத்தில் இருந்தால் இவர்களுக்குப் போர் அடித்துவிடும்.
one-1
இவர்கள் பெருந்தன்மையான குணத்தை கொண்டு இருப்பார்கள். பெரிய காரியங்களை சாதிக்க வேண்டும் என்ற எண்ணத்தில் இருப்பார்கள். அதிகம் தற்பெருமை பேசுவார்கள். பிறர் மீது அதிகமாக தங்கள் ஆதிக்கத்தை செலுத்துவார்கள். சமூகத்தில் கூட இவர்களின் பேச்சுக்கு என்று ஒரு தனி மரியாதை உண்டு. எல்லா விஷயத்தையும் நுணுக்கமாக கையாளத் தெரிந்தவர்கள்.
one-2
மரியாதை தான் இவர்களுக்கு முக்கியம். மரியாதை இல்லாத இடத்தில இருக்க விரும்ப மாட்டார்கள். இவர்கள் சரியான அழுத்தக்காரர்கள். வீட்டுக்கு செய்வதை விட ஊருக்கு அதிகம் செய்வார்கள். தெய்வ காரியங்களில் சிலர் அதிகமாக ஈடுபடுவதும் உண்டு. பிறரை கவர்ந்திழுக்கும் கவர்ச்சியை கொண்டு இருப்பார்கள்.
இவர்கள் யாரையும் சார்ந்து இருக்க விரும்ப மாட்டார்கள். இவர்கள் மற்றவர்களின் உதவியையும் அதிகம் எதிர்பார்க்க மாட்டார்கள். எப்போதும் தன் சொந்த முயற்சியில் செயல்படவே விரும்புவார்கள். யாருடைய பணமாவது இவர்களின் கைகளில் புழங்கி கொண்டே இருக்கும். சுதந்திர எண்ணம் கொண்டவர்களதாலால் யாருக்கும் எளிதில் அடிபணிய மாட்டார்கள்.
இவர்கள் இளமையிலேயே காதல் வயப்படுவார்கள். இதனால் பல இன்னல்களுக்கும் ஆளவார்கள். தன்னை பற்றி எல்லோரும் உயர்வாக என்ன வேண்டும் என விரும்புவார்கள். இவர்கள் சரியான முன் ஜாக்கிரதைகாரர்கள். நண்பர்களிலும் ஒரு சிலரை மட்டுமே அதிகம் நம்புவார்கள். ஒருவரை வெறுத்து விட்டால் மீண்டும் விரும்ப மாட்டார்கள்.
one-3
இவர்கள் தான் பிடித்த முயலுக்கு மூன்று கால் என்பது போலத் வாதிடுவார்கள். வாழ்க்கையை சுகபோகமாக அனுபவிக்க வேண்டும் என்ற எண்ணம் உடையவர்கள். இதற்காக செலவு செய்யவும் தயங்க மாட்டார்கள். நாளையை பற்றி எல்லாம் கவலை கொள்ள மாட்டார்கள்.
இவர்களுக்கு பொறுமை சற்று குறைவு, எனவே எதிலும் அவசரப்பட்டு தான் பேசுவார்கள்.
பொதுவாக இவர்கள் பெரிய சுயநலவாதிகளாக இருப்பார்கள். தொழில்களை நிர்வாகம் செய்வதில் சிறந்து விளங்குவார்கள். இவர்களுக்கு கண் சம்மந்தமான பிரச்சனைகள் வரலாம். அதே போல இரத்த அழுத்தம், மூட்டு வலி, வயிற்று வலி, பல்வலி, தலைவலி, தோல் வியாதிகள், உஷ்ண சம்மந்தமான வியாதிகள் வரலாம்.