உயர் கல்வி, தனித்திறன், வேலைவாய்ப்பு போன்ற காரணங்களுக்காக பெண்கள் இடம்பெயர்வது பெரிய அளவில் நிகழ்கிறது. திருமணம்தான் பெண்கள் இடம்பெயர்வதில் முக்கிய அங்கம் வகிக்கிறது.
திருமணத்திற்கு பிறகு இடம் மாறும் பெண்கள்
உலக அளவில் பெண் தொழிலாளர்களின் பங்களிப்பு விகிதம் குறைவாக உள்ள நாடுகளின் பட்டியலில் இந்தியாவும் இடம்பிடித்திருப்பதாக ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது.
அதிலும் 2006-ம் ஆண்டு முதல் 2016-ம் ஆண்டு வரையிலான பத்தாண்டுகளில் 12 சதவீதம் குறைந்துள்ளது.
சமூக பொருளாதார காரணிகளில் மாற்றம் நிகழும்போது பெண்களின் பங்களிப்பு மீண்டும் உயரும் என்றும் மதிப்பிடப்பட்டுள்ளது.
பொருத்தமற்ற வேலை, குடும்ப பொறுப்புகள், வீட்டை விட்டு வேலைக்கு செல்லும் பெண்கள் எதிர்கொள்ளும் சூழல்கள், குறைந்த வருமானம் போன்ற காரணங்களால் இந்த வீழ்ச்சி ஏற்பட்டிருக்கிறது.
மேலும் இந்தியாவில் பெண் தொழிலாளர்களின் பங்களிப்பு விகிதம் சராசரி அளவை விட 22 புள்ளிகள் குறைவாக உள்ளது. இதற்கு பல்வேறு காரணங்கள் இருந்தாலும் பெண்கள் இடம் பெயர்வது முக்கிய காரணமாக இருக்கிறது.
உயர் கல்வி, தனித்திறன், வேலைவாய்ப்பு போன்ற காரணங்களுக்காக பெண்கள் இடம்பெயர்வது பெரிய அளவில் நிகழ்கிறது.
திருமணம்தான் பெண்கள் இடம்பெயர்வதில் முக்கிய அங்கம் வகிக்கிறது. 3.1 ஒரு சதவீத ஆண்களே திருமணத்திற்கு பிறகு இடம் பெயர்கிறார்கள். ஆனால் திருமணத்தால் இடம் பெயரும் பெண்களின் எண்ணிக்கையோ 71.2 சதவீதமாக இருக்கிறது.
அதிலும் ஆண்கள் பணி சார்ந்து இடம் மாறும்போது மனைவியும் கட்டாயம் இடம்பெயர வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டுவிடுகிறது. அங்கு சென்றபிறகு பெண்களுக்கு வேலைவாய்ப்பு கிடைத்தாலும் அதற்கு முக்கியத்துவம் அளிக்கப்படுவதில்லை.
இந்தியாவை பொறுத்தவரை திருமணம் ஆகாத பெண்கள் தங்கள் தேவை சார்ந்து இடம்பெயரும்போது கடும் எதிர்ப்பு எழுகிறது. அதேவேளையில் திருமணமான பெண்கள் சொந்த வீட்டில் இருந்து பிற பகுதிகளுக்கு இடம்பெயரும்போது எதிர்ப்பு எழுவதில்லை.